Home /News /lifestyle /

பிரபலங்கள் வரை டிரெண்டாகும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் : நன்மைகள் தெரிஞ்சா நீங்களும் ஃபாலோ பண்ணுவீங்க

பிரபலங்கள் வரை டிரெண்டாகும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் : நன்மைகள் தெரிஞ்சா நீங்களும் ஃபாலோ பண்ணுவீங்க

ஃபாஸ்டிங் நன்மைகள்

ஃபாஸ்டிங் நன்மைகள்

ஒருவேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே மிக நீண்ட இடைவெளியை கடைப்பிடிப்பதுதான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறை ஆகும்.

மத நம்பிக்கைகள் சார்ந்தும், உடல் நலன் பேணவும் நம்மில் பலர் விரதம் இருக்கிறோம். பொதுவாக விரதம் என்றால் என்ன என்பது குறித்து நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இன்டர்மிடெண்ட் (இடைப்பட்ட) பாஸ்டிங் என்பதே தற்போது புதிய அதிகரித்து வரும் பழக்கமாக இருக்கிறது. குறிப்பாக, பிரபலங்கள் பலர் இந்த விரத முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்றால் என்ன? இதை எப்படி கடைப்பிடிப்பது, இதில் உள்ள நன்மை, தீமைகள் என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் கால அளவு

ஒருவேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே மிக நீண்ட இடைவெளியை கடைப்பிடிப்பதுதான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறை ஆகும். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற சமயங்களில் முற்றாக சாப்பிடாமல் இருக்க வேண்டும். இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கின் கால அளவு என்பது 12 மணி நேரம் அல்லது சில சமயம் 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரையில் நீளுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடும் முறையைக் கூட சிலர் கடைப்பிடிக்கின்றனர்.

உடல் எடை குறைப்புக்கு உதவுமா

உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை பின்பற்றுகின்றனர். இது பலன் தருமா என்பது குறித்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஓராண்டுக்கு ஆய்வு நடைபெற்றது. 18 வயது முதல் 64 வயது வரையிலான உடல் பருமன் கொண்ட நபர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மூன்று வகையாக பிரிக்கப்பட்டனர்.



அடுத்தடுத்த நாளில் சாப்பிடுபவர்கள், ஒரு நாளில் கலோரி குறைவான உணவுகளை சாப்பிடுபவர்கள் மற்றும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சாப்பிடுபவர்கள் என பிரிக்கப்பட்டனர். இதில் மற்ற இரண்டு பிரிவைக் காட்டிலும், கலோரி குறைவான உணவை சாப்பிட்டவர்களுக்குத்தான் அதிக நன்மைகள் கிடைத்தன. ஆகவே, அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை பெரிய அளவுக்கு குறையவில்லை என்பது தெரியவந்தது.

தலைவலி, வயிறு வலி என எதற்கெடுத்தாலும் வலி நிவாரணி மாத்திரையா..? உஷார்... மிகப்பெரிய ஆபத்தில் முடியலாம்..!

இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்

நல்ல ஆரோக்கியமான 8 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 மணி நேரம் அல்லது அடுத்தடுத்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு 14 நாட்களில் இன்சுலின் சுரப்பு அதிகரித்தது தெரியவந்தது.



இதய நலன் காக்கும்

உடலில் இன்சுலின் அளவு குறைந்தால், அதன் மூலமாக கெட்ட கொழுப்புகள் (எல்டிஎல்) அதிகரிக்கும். இதன் விளைவாக இதய நோய் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். அதுவே இடைப்பட்ட விரதம் மூலமாக உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்போது, உடலில் கொழுப்புச்சத்து சீராக உள்ளது. மிகுந்த தீவிரத்தன்மை கொண்ட இதயநோய்கள் குறைகின்றன. ,

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diet tips, Fitness, Intermittent Fasting, Weight loss

அடுத்த செய்தி