Home /News /lifestyle /

வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே உடலின் நீர்ச்சத்து தேவையை நிறைவேற்ற முடியுமா? கைட்லைன் இதோ!

வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே உடலின் நீர்ச்சத்து தேவையை நிறைவேற்ற முடியுமா? கைட்லைன் இதோ!

கோடையில் ஏன் இளநீர் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மற்ற பானங்களை விட, இளநீரில் அதிகப்படியான சத்துகள் உள்ளன.

கோடையில் ஏன் இளநீர் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மற்ற பானங்களை விட, இளநீரில் அதிகப்படியான சத்துகள் உள்ளன.

கோடையில் ஏன் இளநீர் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மற்ற பானங்களை விட, இளநீரில் அதிகப்படியான சத்துகள் உள்ளன.

கோடைக் காலம் என்பது லெமனேட்கள், ஜில்லென்ற பழரசங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களையும் அதிகமாக உட்கொள்ளும் பருவமாகும். ஒரு சில இடங்களில் கோடைக் காலம் கொடுமையான சுட்டெரிக்கும் காலமாக மாறும் போது உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பல இடங்களில் வறட்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் சன்பர்ன் எனப்படும் சரும பாதிப்பு மற்றும் உடலில் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சென்ட்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன்) கூற்றுப்படி, 1999 மற்றும் 2010 க்கு இடையில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் 7,415 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் உடலில் நீர்ச்சத்து இருப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது என்பதைக் குறிக்கிறது.

ஆனால், தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா? இதற்கான பதில் ஆம் & இல்லை. வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே உடல் நீர்ச்சத்து தேவையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதலாக நிறைய வழிகளைப் பின்பற்றலாம். அதைப்பற்றி இங்கே காணலாம்.

நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடலாம்:

நம்முடைய உடலுக்குத் தேவையான நீரில் 20% நீர் நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது. வெள்ளரிக்காய், செலரி, முள்ளங்கி, தக்காளி, குடைமிளகாய், தர்பூசணி, ஆரஞ்சு, கிரேப்ஃப்ரூட், போன்ற பழங்களும் காய்கறிகளும் நீர்ச்சத்து நிறைந்தவை. இவை அனைத்தும், 90% வரை நீர்ச்சத்தைக் கொண்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா பானங்களும் நல்லதல்ல:

திரவம் தானே, அதுவும் தண்ணீர் போலத்தான். என்ன பானம் குடித்தால் என்ன என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், சில பானங்கள் உண்மையிலேயே உங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கும். குறிப்பாக, காஃபி, சர்க்கரை நிறைந்த சோடா, பீர், வைன், மற்றும் மதுபானம் ஆகியவை உடலுக்கு நல்லதல்ல. மேலும், லெமனேட், இனிப்பான தேநீர், எனர்ஜி பானங்கள், ஸ்மூத்தீஸ், மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்கள் அனைத்தும் உடலுக்கு கேடானவை. இவ்வகையான பானங்களில், அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் சுவை, நிறம், நறுமணத்துக்காக ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், உடலில் உள்ள திசுக்களின் ஈரப்பதம் வற்றிவிடும். எனவே, இதைப் போன்ற நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுத்தும் பானங்களைத் தவிர்த்து, உடலில் நீரேற்றத்தைப் பாதுகாக்கும் பானங்களைத் தேர்வு செய்து அருந்தவும்.

குளிர்ந்த நீர் ஷவரில் குளிக்கலாம்:

கோடைகால வெப்பம் அதிகப்படியான வியர்வையை உண்டாக்கும். எனவே, வழக்கத்தை விட, வியர்வை வழியாக உடலின் நீர்ச்சத்தை அதிகமாக இழக்க நேரிடும். குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது குளிர் நீர் ஷவரில் சில நிமிடங்கள் நிற்பது, இழந்த நீரை உடலுக்கு மீட்டுத்தரும். தசைகளை தளர்த்தி, எண்ணங்களை மேம்படுத்தி, உடல் உள்ளும் புறமும் குளிர்ச்சியாகவும் உணரச்செய்யும்.

இதையும் படிங்க | ஜிம் தேவையில்லை… வீட்டிலேயே செய்யும் வொர்க்கவுட் மூலம் செலவில்லாமல் நீங்கள் ‘சூப்பர் ஃபிட்’ ஆகலாம்!

இன்ஃபியூஸ்டு நீர் அருந்தவும்:

பழங்களுடன் தண்ணீரை இன்ஃபியூஸ் செய்யும் இந்த நடைமுறை, கடந்த சில ஆண்டுகளில் நிறைய கவனத
Published by:Archana R
First published:

Tags: Healthy Lifestyle, Water

அடுத்த செய்தி