தவறான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்ற எல்லோருக்கும் ஏற்படக்கூடிய மிக பெரிய ஆபத்து உடல் பருமான் தான். நமது உடல் எடை சரியான அளவில் இல்லையென்றால் ஏராளாமான சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய் முதல் இதய நோய்கள் வரை தொடர்ச்சியாக பல நோய்களின் ஆக்கிரமிப்பை நமது உடலானது எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இது போன்ற பாதிப்புகளை தடுக்க வேண்டுமென்றால் உடல் எடையை குறைத்தாக வேண்டும்.
உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றோம். குறிப்பாக உணவு முறை, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றின் மூலம் உடல் எடையை சீராக வைத்து கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர்.
உணவு முறையை பொறுத்த வரையில் பல வித உணவு முறையை உடல் எடையை குறைப்பவர்கள் பின்பற்றி வருவதுண்டு. கீட்டோ டயட், பேலியோ டயட், இன்டெர்மிடென்ட் பாஸ்டிங் போன்ற உணவு முறையை தான் பெரும்பாலும் பலர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சிலர் காலை உணவை சாப்பிடாமல் இருப்பதும் உண்டு. அதே போன்று சிலர் இரவு உணவையும் தவிர்ப்பார்கள். இதில் எந்த முறை சரியானது என்பதை பலர் அறிந்திருப்பது கிடையாது.
பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நாம் அவசியம் பின்பற்ற வேண்டியது சரியான உணவு பழக்கத்தை தான். பல ஆய்வுகளில் காலை மற்றும் இரவு உணவை தவிர்க்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இரவு உணவு என்பது நாம் நினைப்பது போன்று இரவு 10 மணிக்கு சாப்பிடுவது அல்ல. இரவு உணவு என்பது சூரிய உதயமானதற்கு பிறகு சில மணி நேரங்களில் எடுத்தாக வேண்டிய ஒன்றாகும். உடல் எடை குறைக்க விரும்புவோர் காலை மற்றும் இரவு உணவை தவிர்க்க வேண்டாம் என்று ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.
Also Read : கொழுப்பு சேர்வதை தடுக்க இந்த 4 உணவுகளை தவிருங்கள்..!
அதே போன்று காலை உணவை 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் உடற்பயிற்சியே செய்யாமல் இருந்தாலும் இந்த முறையின் மூலம் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மேலும் காலை மற்றும் இரவில் எடுத்து கொள்ளும் உணவின் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் மிகவும் அவசியமானவை. அதன்படி, காலை உணவாக முட்டையுடன் சேர்த்த பிரட், முழு தானியம் நிறைந்த உணவு, தயிர், சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் காய்கறி அவல் அல்லது தோசை, இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
Also Read : கொண்டைக்கடலை அல்லது ராஜ்மா... உடல் எடையை குறைக்க இரண்டில் எது சிறந்தது..?
அதே போன்று இரவு உணவை இரவு 8 மணிக்கு முன்னதாக கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் இரவு உணவாக சூப், வறுத்த கோழி அல்லது மீன், சாலட் 1 கப், பாலக் பன்னீர் அல்லது வேகவைத்த சன்னா மசாலாவுடன் மல்டிகிரைன் ரொட்டி ஆகியவற்றை தேர்வு செய்து சாப்பிடலாம். இந்த முறையை பின்பற்றினால் 1 மாதத்திற்குள் உடல் எடையை நிச்சயம் குறைந்திருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.