முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை எப்படி சமாளிப்பது...? பகிர்ந்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி

பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை எப்படி சமாளிப்பது...? பகிர்ந்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

தாய்மை என்பது சாதாரண விஷயமல்ல எனக் கூறும் சமீரா அது நம் வாழ்வில் பல விஷயங்களை மாற்றும், கற்றுக்கொடுக்கும் எனக் கூறுகிறார். “அதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்

  • Last Updated :

பிரசவித்தல் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்பார்கள். குழந்தையைப் பெற்றெடுக்கும் கணம் வரையிலும் அது பெரும் வலியாக இருக்காது. ஆனால் அதன் பிறகான உடல் வலியும், மன வலியும் சொல்லில் அடங்காதவை. அந்த காலகட்டதை சமாளித்து வெளிவருவதே ஒவ்வொரு பெண்ணின் பெரும் போராட்டக் களம்.

அப்படி வாரணம் ஆயிரம் புகழ் சமீரா ரெட்டி சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைப் பிறப்பிற்குப் முன்னரே அவரின் கர்ப்பகாலப் புகைப்படங்கள் மிகவும் பிரபலமானது. அதனாலேயே அவரின் குழந்தை பிரசவிக்கும் தருணம் பலரின் எதிர்பார்ப்பைத் தூண்டியது. பெண் குழந்தைப் பிறந்து அந்தக் குழந்தைக்கு நைரா எனவும் பெயர்சூட்டி அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தன்னுடைய மகப்பேறுக்கு பிந்தைய நாட்களை எவ்வாறு கழித்தேன் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் “ பொதுவாக நடிகைகள் உடல் எடை அதிகரித்தாலே அனைவரும் பூதத்தைப் போல் பார்ப்பார்கள். நான் என் நான்கு வயது மகன் பிறந்த போதே அனுபவித்தேன். இதனால் நான் என்னையே மிகவும் தாழ்வாக உணர்ந்தேன். பின்னோக்கி தனிமைக்கு தள்ளப்பட்டேன் என ஆரம்பப் காலகட்டைத்தை கூறியுள்ளார்.

மேலும் தன்னைப்போன்ற பிரசவகாலத்தை எதிர்கொள்ளும், எதிர்கொள்ளப்போகும் தாய்மார்களுக்கும் சில அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

அதில் “ மன அழுத்தங்கள் இல்லாமல், ரிலாக்ஸாக இருங்கள். பழைய ஆடைகள் இறுக்கமாக உள்ளது என தூரம் வைக்காதீர்கள். மீண்டும் அவற்றை போடுவேன் என சபதம் ஏற்று எடுத்து வையுங்கள். அனைத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள்.

மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை கொஞ்சமும் காதில் வாங்காதீர்கள். முக்கியமாக குழந்தையை கவனித்துக்கொள்வதில் பலரும் கொடுக்கும் அறிவுரைகளை கேட்டுக் கேட்டுக் புளித்துபோன விஷயங்களை சற்றும் சிந்திக்காதீர்கள். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ..அப்படியே சுதந்திரமாக வளருங்கள். குழந்தையை குளிக்க வைப்பது, உடைகள் மாட்டி விட்டு அலங்கரிப்பது என எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக முழு ஈடுபாட்டோடு செய்தாலே எல்லா மன அழுத்தங்களும் பறந்துபோகும். தாய்ப்பாலூட்ட கட்டாயம் தவறாதீர்கள் “ எனக் கூறியுள்ளார்.

தாய்மை என்பது சாதாரண விஷயமல்ல எனக் கூறும் சமீரா அது நம் வாழ்வில் பல விஷயங்களை மாற்றும், கற்றுக்கொடுக்கும் எனக் கூறுகிறார். “அதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை. எனவே நிறைய மன அமைதி தரும் தெரபிகளை எடுத்துக்கொள்ளுங்கள். chill mom ஆக இருங்கள் என கூறியுள்ளார் சமீரா.

சமீரா தன் பிரசவத்திற்குப் பின் தெரபிகளை செய்துள்ளார். வீட்டிலேயே ஹோமியோபதி சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார்.

பார்க்க :

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார்.. குழந்தைகள் நல மருத்துவர்..


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

top videos


    First published:

    Tags: Sameera Reddy