• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாஸ்க் அணிவது பருவகால சளி தொற்றுகளையும் தடுக்க உதவுமா..? மருத்துவர்கள் விளக்கம்...

மாஸ்க் அணிவது பருவகால சளி தொற்றுகளையும் தடுக்க உதவுமா..? மருத்துவர்கள் விளக்கம்...

மாஸ்க்

மாஸ்க்

கொரோனா தொற்று குறைந்து காணப்படுவதால் மக்கள் மாஸ்க் அணியும் வழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. எனினும் இருப்பினும் ஃபுளு எனப்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃபுளுயன்சா) மற்றும் கோவிட் -19 இரண்டுமே கடும் சிக்கல்களை ஏற்படுத்தும் சுவாச நோய்கள்.

  • Share this:
கோவிட்-19 தொற்று பேரிடர் காலம் இன்னும் முழுவதுமாக முடியாத நிலையில் ஃப்ளு பாதிப்புகள், பருவகால காய்ச்சல், டெங்கு உள்ளிட்டவைகளும் நாட்டின் சில மாநிலங்களில் தீவிரமாகி வருகின்றன. ஃப்ளு மற்றும் டெங்கு பாதிப்புகள் சிறிது சிறிதாக உயர்ந்து வரும் நிலையில், கோவிட் தொற்றின் மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று குறைந்து காணப்படுவதால் மக்கள் மாஸ்க் அணியும் வழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. எனினும் இருப்பினும் ஃபுளு எனப்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃபுளுயன்சா) மற்றும் கோவிட் -19 இரண்டுமே கடும் சிக்கல்களை ஏற்படுத்தும் சுவாச நோய்கள். இரண்டுமே ஒரே மாதிரியாக பரவுகின்றன என்பதால் மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமானது என்ற கேள்வி எழுகிறது. ஒருவருக்கு கோவிட் இல்லாமல் ஃபுளு காய்ச்சல் இருந்தாலும் அவர் மாஸ்க் அணிய வேண்டுமா.?

கோவிட்-19 தொற்றிலிருந்து ஃப்ளு எவ்வாறு வேறுபடுகிறது.?

சளி காய்ச்சல் மற்றும் கோவிட் -19 இரண்டும் இயற்கையில் மிகவும் ஒத்ததாக இருப்பதால் இரண்டுக்குமான பெரும்பாலான அறிகுறிகள் பொதுவானவை. இரண்டையும் வேறுபடுத்த குறிப்பிட சில பரிசோதனைகளை தவிர சந்தேகத்திற்கிடமான வெளிப்பாடு விகிதங்கள் மற்றும் அசாதாரண அறிகுறிகள் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக ஃப்ளு சளியுடன் துவங்கும் அதே நேரத்தில் கோவிட்-19 பல்வேறு வழிகளில் ஏற்பட துவங்குகிறது. அதே போல கோவிட் தொற்று ஏற்படும் எல்லோருக்கும் காய்ச்சல் இருக்காது. மேலும் கோவிட் -19 தொற்றை விட ஃப்ளு காய்ச்சல் தொற்று குறுகிய காலத்திற்கே நீடிக்கும்.



ஆபத்தானதா?

கோவிட் -19 போன்றே ஃப்ளு தொற்றும் அச்சுறுத்தலாகவும், கடுமையானதாகவும் இருக்க கூடும். ஃப்ளு போன்ற சீசனல் தொற்றுகள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் புற்றுநோய், கடும் நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கும் ஆபத்தானவையே.

உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

ஃப்ளு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மாஸ்க் அணிய வேண்டுமா?

கோவிட் மற்றும் ஃப்ளு அறிகுறிகளை கண்டறிவதில் குழப்பம் இருந்தாலும் இரண்டுமே பொதுவான நடைமுறைகள் மூலம் பரவுகின்றன. சுவாச துளிகள், இருமல், தும்மல் அல்லது அசுத்தமான பொருள்களை தொடுதல் உள்ளிட்டவை மேற்காணும் இரு தொற்றுகளும் பரவுவதற்கு வழிவகுக்கும். கோவிட்-19ஐ விட ஃப்ளு குறைந்த ஆபத்துடைய தொற்றாக இருந்தாலும் மாஸ்க் அணிவது சுவாச துளிகளின் மூலம் ஃப்ளு பரவுவது மற்றும் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த உதவும், அதை விட முக்கியமாக நோயெதிர்ப்பு குறைவாக உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.



மாஸ்க் எப்படி பாதுகாக்கும்?

ஒரு மாஸ்க் அணிந்தவரை சுற்றி யாரும் மாஸ்க் அணியாவிட்டால் கூட தொற்று பரவும் சூழல் மற்றும் தொற்று விகிதங்களை குறைப்பதில் மாஸ்கின் பங்கு மிகவும் அதிகம் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: