Home /News /lifestyle /

கல்லீரல் நோய்க்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சரி செய்ய முடியுமா..? மருத்துவர் விளக்கம்...

கல்லீரல் நோய்க்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சரி செய்ய முடியுமா..? மருத்துவர் விளக்கம்...

கல்லீரல் அழற்சி

கல்லீரல் அழற்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்பது கல்லீரலில் வடுக்கள்போன்ற திட்டுக்கள் உருவாகும் நிலையாகும், சாதாரணமாக இது கல்லீரல் திசுக்களை சேதபடுத்தி, உறுப்புகளின் செயல்திறனை தடுக்கிறது. உலகளவில் கல்லீரல் நோயினால் ஏற்படும் இறப்புகளுக்கு பொதுவாக சிரோசிஸ் (Cirrhosis) மற்றும் கல்லீரல் புற்றுநோய் முக்கிய காரணங்களாக அமைகிறது.

மேலும் படிக்கவும் ...
மரபணு நோய்கள் உலகளவில் இறப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. கல்லீரல் நோய்களும் அத்தகைய நிலையில் தான் காணப்படுகின்றது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே வருகிறது. 2017 ல் வெளியிடப்பட்ட WHO தரவின்படி, இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 2.95% கல்லீரல் நோயினால் ஏற்படுகிறது. உலகளவில் இது சிரோசிஸுடன் தொடர்புடைய இறப்பு விகிதத்தில் ஐந்தில் ஒரு பங்காகும்.

முன்பு, ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற தொற்றுகள் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. ஆனால் தற்போது மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகியவையே இந்த கல்லீரல் நோய்க்கு காரணமாக மாறிவிட்டது.

ஆல்கஹால் மற்றும் போதைப்பொருட்களிலுள்ள நச்சுப்பொருள்களை நீக்கம் செய்வதற்கு கல்லீரல் உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் மூளைக்கு குளுக்கோஸ் வழங்குதல், உணவு செரிமானம், கருவளர்ச்சியின் போது இரத்தத்தை உற்பத்தி செய்தல், ஊட்டச்சத்துக்களை சேமித்தல் போன்ற செயல்பாடுகளையும் இது செய்கிறது.

முழுமையாக சேதமடைந்த கல்லீரல் தானாகவே மீண்டும் வளராது. எனவே, கல்லீரல் நோயின் அறிகுறிகளை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சையை தொடங்குவது மிகவும் முக்கியம்.கல்லீரல் அழற்சி

கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்பது கல்லீரலில் வடுக்கள்போன்ற திட்டுக்கள் உருவாகும் நிலையாகும், சாதாரணமாக இது கல்லீரல் திசுக்களை சேதபடுத்தி, உறுப்புகளின் செயல்திறனை தடுக்கிறது. உலகளவில் கல்லீரல் நோயினால் ஏற்படும் இறப்புகளுக்கு பொதுவாக சிரோசிஸ் (Cirrhosis) மற்றும் கல்லீரல் புற்றுநோய் முக்கிய காரணங்களாக அமைகிறது.

Regenerative மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரதீப் மகாஜன், இந்த சிரோசிஸ் (Cirrhosis) மது அருந்துதல், வைரஸ் ஹெபடைடிஸ், ஆட்டோ இம்யூன் நோய்கள், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் பல பரம்பரை வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் ஏற்படுகிறது என்று கூறுகிறார்.

டிமென்ஷியா எனும் மறதி நோய் : இதையெல்லாம் செய்தால் இந்நோயை விரட்டி அடிக்கலாம்...

ஆரம்ப நிலையில் இந்த நோயின் அறிகுறிகள் கல்லீரல் திசுக்களில் அழற்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதை தொடர்ந்து வடு உருவாகி, இறுதியில் கல்லீரலை செயலிழக்க செய்யும்.

சிரோசிஸுக்கு சிகிச்சைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆதலால், இதன் அறிகுறி மற்றும் வாழ்க்கை முறை மட்டுமே வழக்கமான சிகிச்சையின் முக்கிய அம்சமாக உள்ளது. இதுபோன்ற கடுமையான நோய்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே குணப்படுத்தும் வழியாக அமைகிறது. இருப்பினும், உறுப்பு பற்றாக்குறை இக்காலத்திலுள்ள ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது.ஒருவர் எவ்வாறு சிகிச்சை பெற முடியும்?

டாக்டர் மகாஜன் கூறும்போது "கல்லீரல் தன்னைத்தானே மீண்டும் உருவாக்கி கொள்ளும் என்பதை நாம் அறிந்திருப்போம். கல்லீரல் நோயை முடிந்தவரை விரைவில் கண்டறிந்து அதன் மீளுருவாக்கம் திறனை தூண்டுவதற்கான வழிகளைக் கண்டறிவதே முதலாவது முயற்சியாகும். மேலும் செல் மற்றும் வளர்ச்சி காரணி அடிப்படையிலான சிகிச்சைகள் இங்கு தான் பலனளிக்கும் என கூறினார்.

சைனஸ் தலைவலி ஏன் ஏற்படுகிறது..? வராமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை...

நம் உடலிலுள்ள ஸ்டெம் செல்கள் (Stem cells) கல்லீரல் மற்றும் பல்வேறு செல்களாக வேறுபடும் திறன் கொண்டவையாக உள்ளது. மேலும், அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், வீக்கங்களைக் குறைப்பதற்கும், இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதற்கும், மற்ற செல்களின் செயல்பாட்டு திறன்களை தூண்டுவதற்கும் முக்கியமானதாக அமைகிறது.

இதேபோன்று, வளர்ச்சிக் காரணிகளை இரத்தத்திலுள்ள பிளேட்லெட் களில் இருந்து தனிமைப்படுத்தலாம், ஏனெனில் அவை உடலின் செல்களுக்கு ஊட்டமாக செயல்படுகின்றன.இவையனைத்தும் கல்லீரலின் உட்புற சூழலை பாதுகாப்பதன் மூலம் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு உதவும். இதுவே குணப்படுத்துவதற்கும் மீளுருவாக்கம் செய்வதற்கும் உகந்ததாக அமையும்.

"வடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு கல்லீரலின் குணப்படுத்தும் திறனைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சி செய்கிறோம். ஆனால், விளைவுகளை தடுக்க வாழ்க்கை முறை மாற்றம் தேவைப்படும், ஆனால் இறுதியில் நம் இலக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தேவையைத் தடுப்பதாகும், ஏனெனில் இது நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும், ”என்று டாக்டர் மகாஜன் கூறுகிறார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Liver Disease, Stem Cell

அடுத்த செய்தி