Home /News /lifestyle /

மனச்சோர்வு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்குமா..? எச்சரிக்கும் அறிகுறிகள்...

மனச்சோர்வு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்குமா..? எச்சரிக்கும் அறிகுறிகள்...

மனச்சோர்வு

மனச்சோர்வு

மனச்சோர்வு உடல்ரீதியான பிரச்சனைகள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் தொடர்பான எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தங்கள் பார்ட்னரிடம் இருந்து ஒருவர் விலகி செல்வார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொதுவாக சிறு வயதினர் கூட இப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் போன்ற மனநலம் சார்ந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவதை கேட்க முடிகிறது. ஸ்ட்ரெஸ் என்பது மனஅழுத்தம், டிப்ரஷன் என்பது மனச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது.

இதில் மனச்சோர்வு என்பது ஒருவரின் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், வேலைதிறன், பாலியல் உணர்வுகள் என அனைத்திலும் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. மனச்சோர்வு ஒருவரது செக்ஸ் உந்துதலை (sex drive) குறைப்பது மட்டுமல்லாமல் ஒருவரது லிபிடோ குறைவதற்கும் வழிவகுக்கிறது. லிபிடோ (Libido) என்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த பாலியல் உந்துதல் அல்லது பாலியல் ஆசைகளுக்கான விருப்பம் என்பதாகும்.

ஒரு உளவியல் கோளாறாக பார்க்கப்படும் டிப்ரஷன் ஒருவருக்கு மன அழுத்தம், கவலை, குற்ற உணர்வு மற்றும் அடிக்கடி மாறும் மனநிலை உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்த கூடும். எனவே மனச்சோர்வை எதிர்த்து போராடும் ஒரு நபரின் பாலியல் செயல்பாடுகள் உட்பட ஒட்டுமொத்த ஆளுமையும் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக டிப்ரஷனின் எதிரொலியாக ஈடுபாடு காட்டிய விஷயங்களில் ஆர்வமின்மை, அன்ஹெடோனியா போன்ற உணர்வு அதாவது என்ஜாய் செய்ய வேண்டிய விஷயங்களை அனுபவிக்க இயலாமை உள்ளிட்டவற்றை ஒருவர் எதிர்கொள்ள நேரிடலாம். கூடவே பாலியல் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் விறைப்புத்தன்மையை பராமரிக்க இயலாமை மற்றும் உச்சக்கட்டத்தை அடைய முடியாமல் போவது உள்ளிட்டவற்றுக்கும் வழிவகுக்கிறது.



பொதுவாக மனச்சோர்வு பாலியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி கூறும் நிபுணர்கள், குறைந்த சுயமரியாதை மற்றும் அவநம்பிக்கையை மனச்சோர்வு ஏற்படுத்தும் என்கிறார்கள். இது உடல்ரீதியான பிரச்சனைகள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் தொடர்பான எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தங்கள் பார்ட்னரிடம் இருந்து ஒருவர் விலகி செல்வார்.

இதனால் ஏற்படும் உறவு சிக்கல்கள் ஒரு கட்டத்தில் பாலியல் செயல்பாடுகளையும் பாதிக்கும். அதே போல மனச்சோர்வால் ஒருவருக்கு ஏற்படும் எதிர்மறை உணர்ச்சிகள் அவரது உடல் தேவைகளில் கவனம் செலுத்துவதை கடினமாக்கி லிபிடோ குறைய வழிவகுக்குகிறது. ஆனால் அவரது பார்ட்னருக்கு இது புரியாமல் போனால் இருவருக்குள் செக்ஸ் தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரிக்கலாம்.

Introvert குணம் கொண்டவரா நீங்கள்..? உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள டிப்ஸ்

மனசோர்வால் ஆண்களுக்கு லிபிடோ மற்றும் விறைப்புத்தன்மை சிக்கல்கள் ஏற்படும் அதே நேரத்தில் பெண்களை பொறுத்த வரை லூப்ரிகேஷன் மற்றும் ஆர்கஸத்தை (உச்சத்தை) அடைவதில் பிரச்சனைகள் ஏற்படலாம். மனசோர்வு இருப்பது தெரியாமல் ஒருவர் தனது பார்ட்னரை உறவுக்கு வற்புறுத்துவது பாதிக்கப்பட்ட நபருக்கு மன அழுத்தம் அல்லது அதிக கவலை ஏற்படலாம். எனவே ஒருவர் மனச்சோர்வு மற்றும் பாலியல் உந்துதல் இழப்பை ஒரே நேரத்தில் அனுபவித்தால் நிபுணர்களின் உதவியை நாடுவது முக்கியம்.



ஆனால் நிறைய பேர் மனச்சோர்வால் ஏற்படும் பாலியல் செயலிழப்பை புரிந்து கொள்ளாமல், தங்களால் செக்ஸில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று நினைத்து கவலை கொள்கிறார்கள். நம்பிக்கையின்மை, பதட்டம், உடல் சோர்வு, உடலுறவு எப்படி இருக்கும் என்று அதீத பயம் போன்ற சில பொதுவான அறிகுறிகளை ஒருவர் அனுபவித்தால் தயங்காமல் நிபுணர் உதவியை ஒருவர் நாட வேண்டும். அப்படி செய்தால் உடல், மனம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் என அனைத்தும் மேம்படும்.

30 வயதிற்குள் காதலிப்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காதா..? பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால்...

* மனச்சோர்வால் உங்கள் பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் மருந்து மற்றும் சிகிச்சை மூலம் மனச்சோர்வுக்கு சிகிச்சை பெறுவதில் கவனம் செலுத்துங்கள். தானாகவே விஷயங்கள் எல்லாம் சரியாகும்.

* அதே போல லிபிடோ இழப்பு ஒரு பொதுவான அறிகுறி. சில மருந்து மருந்துகளின் பக்க விளைவாக கூட இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு விஷயங்களை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவர்கள் டோஸேஜின் அளவை குறைப்பார்கள்.



* உங்களது பிரச்சனைகள் மட்டும் பாலியல் செயல்பாடுகளில் சந்திக்கும் தடைகள் குறித்து பார்ட்னரிடம் மனதுவிட்டு பேசுவது சிறந்த தீர்வாக இருக்கும். அவர்களது ஆதரவு உங்களுக்கு கிடைத்தால் உங்கள் மன சிக்கல்களில் பாதி குறைந்து விடும்.

* மனதளவில் சோர்வை சந்திப்பதால் சில நேரங்களில் கவலை அல்லது வருத்தமாக இருந்தாலும், எதிர்மறை நினைவுகளில் மூழ்கி விடாதீர்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் ஒரு பகுதி தான் என்பதை உணர்ந்து தகுந்த நிபுணரை சந்திப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Depression, Sexual Health, Stress

அடுத்த செய்தி