குழந்தையின் நினைவாற்றல் ஸ்மார்ட்போன்களால் பாதிக்கப்படுகிறது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்த்திருக்கிறீர்களா? தொலைபேசிகளில் அதிக நேரம் செலவழிக்கும் சிறுவயதினர், தங்கள் நினைவாற்றல் மற்றும் பிற திறன்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த பதிவு வெறும் டீனேஜர்களைப் பற்றியது மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தே தங்கள் குழந்தைகளை ஸ்மார்ட்போன்களுக்கு பழக்கும் பெற்றோர்களைப் பற்றியும் விளக்குகிறது.
உங்கள் குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டு நேரத்தை குறைக்க முயற்சிக்கும் போது, நீங்கள் அவர்களிடம் இருந்து கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே, பெற்றோர்கள் தங்கள் திரை நேரத்தை முதலில் குறைக்க வேண்டும். பின்னர் அதே பழக்கத்தை தங்கள் குழந்தைகளிலும் வளர்க்க வேண்டியது இன்னும் முக்கியமானது. உங்கள் குழந்தையின் மொபைல் பார்க்கும் நேரத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியதற்கான சில முக்கிய காரணங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஸ்மார்ட்போன்கள் மூளையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
கவனச்சிதறல் ஒரு ஸ்மார்ட்போனின் முக்கிய குறைபாடாக இருக்கிறது. அதே சமயம் குழந்தை பருவமானது நினைவகம் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்தும் வளர்ச்சி செயல்பாட்டில் ஒரு முக்கிய கட்டமாகும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் அதிகமான கவனச்சிதறல்கள் அல்லது குழப்பமான சூழ்நிலை இருக்கும் போது நினைவுகளை நிலைநிறுத்துவது மூளைக்கு கடினமாக இருக்கலாம்.
அப்படியானால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கும் போது, பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். குழந்தைகள் எந்தவொரு திறமையையும் கற்றுக்கொள்வதில் அல்லது திறனைத் தழுவுவதில் ஆழமற்ற முயற்சியைக் கொடுப்பதால் அவர்களின் மூளை வளர்ச்சி செயல்முறை ஆபத்தில் முடிகிறது.
தீங்கு விளைவிக்கும் நீல கதிர்வீச்சுகள்:
ஸ்மார்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிக்கிறது. குறுகிய கால நினைவகத்தில் குறுக்கிடுகிறது. இதனால் குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது கடினமாகும்.
இதையும் படிங்க | பெருந்தொற்று நேரத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய டிப்ஸ்!
குறிப்பாக இரவில் மிக தாமதமாக யாராவது தொலைபேசியைப் பயன்படுத்தும் போது, உங்கள் மூளை இது பகல் நேரம் என்று நம்புகிறது. இவ்வாறு நிகழும்போது, உங்கள் உடல், தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதன் விளைவாக, ஒரு நபர் தூக்கமில்லாமல் இருப்பார். மறுநாள் சோர்வடைவார். மேலும் எந்த ஒரு பணியையும் முழுவீச்சுடன் அவரால் செய்து முடிக்க இயலாது.
டிஜிட்டல் மறதி நோய்:
முன்பெல்லாம் படித்த விஷயங்களை நியாபகம் வைத்துக்கொள்ள எதிலாவது எழுதி வைத்துக்கொள்வோம். அதன் மூலம், அந்த விஷயங்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஆனால் இப்போது ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள மாணவர்கள் டிஜிட்டல் சாதனத்தை உபயோகித்து வருகின்றனர். அதனை காட்டாயம் மனதில் வைத்துக்கொள்வது கடினம் இதுவே டிஜிட்டல் மறதி என்று கூறப்படுகிறது.
இது உருவ நினைவகத்தில் குறிப்பாக வடிவங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை அங்கீகரிக்கும் மூளை பகுதியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு செயல்பாட்டின் படங்களையும் பதிவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதால், ஒரு இளைஞன் டிஜிட்டல் சாதனங்களில் ஒவ்வொரு விவரத்தையும் பதிவுசெய்கிறான். அந்தத் தகவல் நீண்டகால நினைவகத்தில் சேமிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் ஒரு நிகழ்வை சரியாக ஞாபகம் வைத்துக்கொள்வதில் இருந்து குழந்தைகளை திசைதிருப்பவும் செய்கிறது.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திரை நேரத்தை அதாவது ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தை காட்டாயம் குறைக்க வேண்டும்.
இனி நீங்கள் செய்யவேண்டியது எல்லாம்…
உங்கள் குழந்தை தொலைபேசியில் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள். போனை தங்களின் காதுக்கு எவ்வளவு அருகில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் போனில் எவ்வளவு நேரம் சாட் செய்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை அவசியம் ஆராய வேண்டும்.
தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்கள் குழந்தைகளிடம் நட்பான முறையில் எடுத்துரைக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகள் தவிர, மற்ற நேரங்களில் உடல் செயல்பாடு சார்ந்த விளையாட்டுக்கள் அல்லது வீட்டு வேலைகளில் தங்களை ஈடுபடுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது, குழந்தைகள் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து தங்கள் கண்களைப் பாதுகாக்க சோர்வு எதிர்ப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும்.
போனை ஸ்பீக்கரில் போட்டு பேசும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். காதுகளுக்கு அருகில் தொலைபேசியை வைத்து பேசுவதை தவிர்ப்பது அல்லது இயர்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது போன்ற யோசனையை ஊக்குவிக்கவும். இதனால் கதிர்வீச்சுகளில் இருந்து அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
படுக்கை நேரத்தில் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பயன்படுத்த கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children, Healthy Lifestyle, Smart Phone