பொதுவாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் வலுவான எலும்பு, உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தருகின்றன. ஆனால் அதே நேரம் பால் பொருட்களை கைவிடுவது பிரச்சனைகளில் இருந்து சருமத்தை முற்றிலும் காப்பாற்றும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
தோல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பால் பொருட்கள் மீது சில நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனனர். அரிக்கும் தோலழற்சி, முகப்பரு முதல் மந்தமான தோல் (dull skin) மற்றும் பிற தோல் நிலைகள் வரை அனைத்திற்கும் பால் பொருட்கள் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி நாம் சாப்பிடும் பொருட்களுக்கும், நம் சரும ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன.
முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளின் வளர்ச்சி அல்லது அவை சருமத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் பால் பொருட்கள் முக்கியமானவை என்ற கூற்றை ஒருசில சிறிய ஆராய்ச்சிகள் ஆதரித்துள்ளன. பால் பொருட்கள் மற்றும் அவை நமது சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு:
பசுவின் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் ஒரு புரதம் Casein. இது பாலுக்கு வெள்ளை நிறத்தை அளிக்கிறது. பசுவின் பாலில் சுமார் 80% கேசீன் புரதம் உள்ளது. இது insulin-like growth factor-1 (IGF-1), ப்ரோலாக்டின், ப்ரோஸ்டாக்லாண்டின்ஸ் மற்றும் ஸ்டீராய்டுகள் உட்பட பல ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் விவசாயிகளால் மாடுகளுக்கு அடிக்கடி rBGH (Recombinant bovine growth hormone) எனப்படும் செயற்கை ஹார்மோன் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் குறிப்பாக IGF-1, செபம் உற்பத்தி அதிகரிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது சருமத்தில் உள்ள எண்ணெய் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்துகிறது.
இன்சுலின் அளவு:
இனிப்புகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பிற பொருட்களுடன் சேர்க்கப்படும் பால் மற்றும் பால் பொருட்கள் உடலின் இன்சுலின் அளவை தொந்தரவு செய்து ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. நம் உடல் பால் பொருட்களை இன்சுலினை போன்ற புரதங்களாக ஜீரணிக்கின்றது. முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, ரோசாசியா உள்ளிட்ட அழற்சி தோல் நிலைகள் அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ், அமிலாய்டோசிஸ், வறட்சி மற்றும் பிற தோல் நிலைகள் போன்றவை அதிகரித்த இன்சுலின் அளவுகளால் ஏற்படும் தொற்று மற்றும் உடலின் அதிகரித்த அழற்சி உணர்திறன் உள்ளிட்டவற்றால் ஏற்படுகிறது. கூடுதலாக இன்சுலின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் இந்த அழற்சியானது கொலாஜனை உடைத்து, வயதான செயல்முறையை விரைவுபடுத்துகிறது மற்றும் சரும சுருக்கங்களை உருவாக்குகிறது.
பால் சகிப்பின்மை விளைவுகள்:
பால் பொருட்களில் இயற்கையாகவே கிடைக்கும் சர்க்கரையான லாக்டோஸ் (lactose) உள்ளது. இந்த சர்க்கரையை உறிஞ்சுவதற்கு, லாக்டோஸ் என்ற நொதியைப் பயன்படுத்தி நமது அமைப்புகள் அதை உடைக்கிறது. பால் பொருட்களில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க இயலாமை Lactose intolerance என குறிப்பிடப்படுகிறது. பாலில் இருக்கும் லாக்டோஸ் ஒருவருக்கு ஜீரணிக்க இயலாமல் போனால் எதிர்வினையாக சில சரும அழற்சிகள் ஏற்படுகின்றன. நிறமாற்றம் மற்றும் உணர்திறன் போன்ற அழற்சி அறிகுறிகளை சருமம் வெளிப்படுத்துகிறது.
எனினும் அனைத்து தோல் பிரச்சனைகளும் பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படவில்லை என்றாலும் வரையறுக்கப்பட்ட ஆய்வு மற்றும் ஆதாரங்கள் மூலம் பால் பலவிதமான அடிப்படை தோல் நோய்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான ஆதாரங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டது. டயட், பரம்பரை, மன அழுத்தம், ஹார்மோன்கள், தூக்கம், மாசுபாடு மற்றும் புகை மற்றும் குடி போன்ற தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் உட்பட பல்வேறு காரணிகளாலும் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
Also Read : வீட்டிலேயே பால் இல்லாமல் பன்னீர் செய்வது எப்படி.?
அனைத்து பால் பொருட்களும் நம் சருமத்திற்கு தீங்கில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கெஃபிர், லைவ் யோகர்ட், தயிர், காட்டேஜ் சீஸ் மற்றும் சீஸ் போன்ற புளிக்கவைக்கப்பட்ட பால் பொருட்கள் மேம்பட்ட செரிமானம், சிறந்த இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியம் மற்றும் சிறந்த எடை கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பால் பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு பதில் அவற்றை மிதமாக சேர்ப்பது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheese, Curd, Dairy Food, Milk