ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்... அதிக இரத்தப்போக்கு... ஆய்வில் வெளியான உண்மை..!

கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்... அதிக இரத்தப்போக்கு... ஆய்வில் வெளியான உண்மை..!

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

பெண்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கம் குறித்த அறியாமை அல்லது நிராகரிப்பு பலரிடையே தயக்கத்தை உருவாக்க ஆரம்பித்தது. தடுப்பூசிகள் நாட்டின் இளம் பருவத்தினருக்கு செலுத்துவதற்கு க்ரீன் சிக்னல் அளித்தபோது, பெற்றோர்கள் இது ​​​​தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என கவலைப்பட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மருத்துவம் என்பது பெரும்பாலும் ஆண்கள், பெண்கள் மற்றும் மற்ற எல்லா பாலினங்களையும் ஒரே மாதிரியாகவே அமையும். அனைவருக்கும் இடையே விளைவுகள் பெரிய அளவில் வேறுபடும் என்பதை நாம் இப்போது நன்கு அறிவோம். மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கு குறித்த உடல் செயல்பாடுகளுள் ஒன்று. ஆய்வுகள் அதை கருத்தில் எடுத்துக்கொள்ள மறந்து விடுகிறது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டன. அப்போது ​​​​பல பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகள் தாமதமாகவும்,வலிமிகுந்ததாகவும் இருந்ததாக தெரிவித்தனர். இருப்பினும், இது பரவலாக ஆராயப்படாமல் இருந்தது.

மாதவிடாய் சுகாதார நிபுணர்கள், தடுப்பூசிகளால் ஏற்ப்படும் இந்த மாதவிடாய் பிரச்சனைகளை தாக்கத்தை கண்டறிய ஒரு ஆய்வின் அவசியத்தை சுட்டிக்காட்டினர். ​​ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்த தொடங்கினர். ஜூலை மாதம் 15 ம் தேதி, சயின்ஸ் அட்வான்சஸ் ஒரு ஆய்வை வெளியிட்டது, இதில் 39,000 க்கும் மேற்பட்டவர்களை ஆய்வு செய்து,அவர்களின் மாதவிடாய் காலத்தில் கோவிட்-19 தடுப்பூசிகளின் விளைவுகளை பரிசோதித்தது.

சோதனையின் அவசியம்

தடுப்பூசி சோதனைகள் தொடங்கிய போது, ஏழு நாட்களுக்குப் பிறகு இதனால் எந்த அபாயமான அல்லது லேசான விளைவுகள் ஏற்படவில்லை. எனவே, பின்வரும் காலகட்டங்களில் அதன் விளைவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் குழு கவலைப்படவில்லை. தடுப்பூசிகள் உண்மையில் மாதவிடாய் சுழற்சிகளில் சீர்குலைக்குமா? என்பதைத் தெரிந்துகொள்ளவதற்கு வழி இல்லை.

ஊடக அறிக்கைகள், நிபுணர்கள் கூறியபடி, நிறைய பெண்கள் கூறுவதை ஏற்க்கும் வகையில் அவர்களிடம் எந்த ஆராய்ச்சி தரவும் இல்லை. சுகாதார வல்லுநர்கள் பலரும் கூட, மற்றவர்களை போலவே மாதவிடாய் உள்ளவர்களும் அதிகமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவதால் சுழற்சிகளை 'வொன்கி'(wonky) என்றும் கூறினார்கள்.

IVF முறையில் கரு வளர்ச்சி தோல்வியுற காரணம் இதுதான்... ஆய்வு முடிவுகள்

பெண்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கம் குறித்த அறியாமை அல்லது நிராகரிப்பு பலரிடையே தயக்கத்தை உருவாக்க ஆரம்பித்தது. தடுப்பூசிகள் நாட்டின் இளம் பருவத்தினருக்கு செலுத்துவதற்கு க்ரீன் சிக்னல் அளித்தபோது, பெற்றோர்கள் இது ​​​​தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என கவலைப்பட்டனர். இவை அனைத்தும் , இந்த ஆராய்ச்சியின் தேவையை அதிகமாக்கியது.

ஆய்வின் கண்டுபிடிப்புகள்

இந்த கணக்கெடுப்பில் அனைத்து வயதினரும், அதாவது 18 முதல் 80 வயதுக்குட்பட்ட மாதவிடாய் சுழற்சி ஏற்படும் பெண்கள் என அனைவரும் இருந்தனர். இதில் மெனோராஜியா (menorrhagia), எண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), அடினோமயோசிஸ் (adenomyosis), நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பிசிஓஎஸ் (fibroids, and PCOS) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்திய பிறகு கடுமையான இரத்தப்போக்கை சந்தித்தனர்.

மாதவிடாயின் போது அசௌகரியங்களை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்கள்...

பாலினத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹார்மோன் மருந்துகளை உட்கொள்பவர்கள் எதிர்பாராத இரத்தப்போக்கை சந்தித்ததாகவும், மாதவிடாய் நின்றவர்களில் சுமார் 66% பேரும், எந்த ஹார்மோன் சிகிச்சைகளையும் மேற்கொள்ளாதவர்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்ப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்டவர்கள் கூறுவதை வைத்து நாட்டின் பெரிய அளவிலான மக்கள்தொகைக்கு கூறமுடியாது என்று ஆய்வு முடிவு செய்தது. எதிர்காலத்தில் வரப்போகும் இதே போன்ற மாதவிடாய் சுழற்சியின் இடையூறுகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்வதற்காக, விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த கணக்கெடுப்பு தெளிவுபடுத்துகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலாளர் மற்றும் முதுகலை பட்டதாரியான கேத்ரின் லீ மற்றும் கேத்ரின் க்ளான்சி ஆகியோர் ஆய்வின் முன்னணி விஞ்ஞானிகல் கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படக்கூடிய சுழற்சிகளில் (‘wonky’ periods) பிரச்சனைகளை கண்ட பிறகு தங்களின் சோதணையைத் தொடங்கினர்.

அடிக்கடி வயிற்று வலியால் துடிக்கிறீர்களா..? புற்றுநோயாக இருக்கலாம்... இந்த அறிகுறிகளை கவனியுங்கள்...

ஒரு நேர்காணலின் போது, ​​லீ கூறியதாவது "என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல், இது தான் நடக்கும் என்ற வழிமுறைகளை அறியாமல், இது நடக்கத் தயாராக இல்லை என்பது பலருக்கும் தேவையில்லாத அனுபவமாக இருந்ததாக அவர் கூறினார்.மேலும் அவர் இது அதிகமான நோயாளிகளை மிகவும் பைத்தியமாக்க வாய்புள்ளது எனவும், இது மருத்துவம் சார்ந்த நம்பிக்கையை பலவீனப்படுத்தும் என்றும் கூறினார். மேலும் இது மருத்துவம், அரசாங்கம், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான அவநம்பிக்கைக்கு இது வழிவகுக்கும், இவை இந்த செயல்படும் சமுதாயத்திற்கு உண்மையில் அவசியம் என்றும் கூறினார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Corona Vaccine, Irregular periods