ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இலவங்கப்பட்டை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..? நிபுணர்கள் கருத்து

இலவங்கப்பட்டை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..? நிபுணர்கள் கருத்து

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இலவங்கபட்டை இன்சூலின் சுரப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடக்கில் இருந்து தெற்கு வரை இந்தியர்களின் ஒவ்வொரு சமையல் முறையிலும் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தனித்தன்மையான சுவையை மட்டுமல்ல பிரத்யேகமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. இந்தியாவின் பாரம்பரிய சமையல்களில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களின் நன்மைகள் கொரோனா காலக்கட்டத்தின் போது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. மிளகு, சுக்கு, மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்ற மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் குறித்து பலரும் ஆர்வமுடன் அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

அந்த பட்டியலி மரத்தின் பட்டையில் இருந்து கிடைக்கூடிய இலவங்கபட்டை மிக அற்புதமான சுவை மற்றும் மணத்தை மட்டுமல்ல மகத்தான மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இலவங்கபட்டை இன்சூலின் சுரப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக கருதப்படுகிறது. இலவங்கபட்டையில் ஆல்டிஹைடு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸின் சிறந்த மூலமாகவும் விளங்குகிறது.

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

உடலில் உள்ள குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுவதன் மூலம் கொழுப்பை கரைக்க உதவுவதாக கூறப்படும் இலவங்கபட்டை, உண்மையிலேயே ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துமா என்பது தெளிவாக இல்லை. எனவே மருத்துவர்களின் கூற்றுப்படி இலவங்கப்பட்டையை உட்கொள்வது நீரழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுமா? என பார்க்கலாம்...

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவுமா?

1. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது நீரழிவு நோயை உருவாக்கிறது. எனவே இலவங்கப்பட்டையில் உள்ள ஆக்ஸினேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு என்பது போல, உடலில் ஆக்ஸினேற்றம் அதிகரிக்கும் போது ரத்தத்தில் ஆக்ஸினேற்ற அழுத்தம் உருவாகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரழிவு நோய் ஏற்பட காரணமாக அமைய வாய்ப்புள்ளது.
2. இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் தொடர்புள்ளதை பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
3. ஜென் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த உணவியல் நிபுணரான ப்ரியா பாலன், இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் இது ஹார்மோன்களை திறம்பட செயல்படவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
4. நீரிழிவு நோயாளிகள் மற்றும் மருந்துகளை உட்கொள்பவர்கள் தினந்தோறும் இலவங்கப்பட்டையை உட்கொள்வது நல்லது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் இலவங்கப்பட்டை குறைப்பதால், கல்லீரல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீரழிவு நோயாளிகள் இலவங்கைப்பட்டையை உட்கொள்ளும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
5. இலவங்கப்பட்டையில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகள் ஆகியவையே ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுக்கொள்ள உதவும் சிறப்பான வழிமுறைகள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க இலவங்கப்பட்டையை மட்டும் நம்பக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Cinnamon, Diabetes