ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோயாளிகள் டெங்குவின் தீவிர பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி..?

சர்க்கரை நோயாளிகள் டெங்குவின் தீவிர பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி..?

டெங்கு

டெங்கு

சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீடுகளைச் சுற்றியிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளுக்குள் கொசுவிரட்டி, கொசு பேட் போன்றவற்றை பயன்படுத்தலாம். வீடுகளை சுற்றியிலும் தண்ணீர் தேங்க விடாமல், எப்போதும் அப்புறப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக தொற்றுநோய்கள் உயிரை கொல்லும் அளவுக்கு தீவிரமானவை என்றாலும், சரியான மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அவற்றை விரட்டி விடலாம். ஆனால், நீண்டகால இணைநோய் இருப்பவர்களுக்கு, தொற்று நோயால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது சவாலான விஷயம் தான்.

உதாரணத்திற்கு, கொரோனாவை எடுத்து கொண்டால், இணைநோய் உள்ளவர்களை தான் அது வெகுவாக பாதித்தது. தற்போது டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் டெங்கு நோய் பரவி வருகிறது.

சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இங்கும் டெங்கு நோய் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏடீஸ் என்ற சின்னஞ்சிறு கொசுதான் டெங்கு நோயை சுமந்து வந்த நமக்கு பரப்புகிறது.

வீட்டை சுற்றியிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பது, கலன்களில் உள்ள தண்ணீரை மூடி வைப்பது, சுத்தமாக இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக ஏடீஸ் கொசுக்களை தடுக்கலாம். மழை நேரத்தில் குடிநீரை கொதிக்க வைத்து அருந்துவது நலன் தரும்.

சர்க்கரை நோயாளிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் டெங்கு

டெங்கு காய்ச்சல் மனித உடலில் தீவிரமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. இதுமட்டுமல்லாமல் தீவிரமான ரத்தப்போக்கு, கல்லீரல் பாதிப்பு மற்றும் தீவிரமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உயிரிழப்பையும் கூட ஏற்படுத்தி விடுகிறது.

தீவிர பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி

சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீடுகளைச் சுற்றியிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளுக்குள் கொசுவிரட்டி, கொசு பேட் போன்றவற்றை பயன்படுத்தலாம். வீடுகளை சுற்றியிலும் தண்ணீர் தேங்க விடாமல், எப்போதும் அப்புறப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். பூந்தொட்டிகள் மற்றும் திறந்தவெளி கலன்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய டயர்கள், தேங்காய் மூடிகள் போன்றவற்றில் கொசு முட்டையிடக் கூடும். அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக வீடுகளைச் சுற்றியிலும் புகைமூட்டம் போட வேண்டும்.

Also Read : இந்த 3 இலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்..?

மருத்துவ பரிசோதனை அவசியம்

இந்த மழைக் காலத்தில் எல்லோருமே உடல் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்றாலும், சர்க்கரை நோயாளிகள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

வீட்டிலே குளுக்கோமீட்டர் வைத்து ரத்த சர்க்கரை அளவை அவ்வபோது பரிசோதனை செய்து, அதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால், டெங்கு பாதித்தாலும் தீவிர விளைவுகளை தவிர்க்கலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Dengue, Dengue fever, Diabetes