• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தாய்ப்பால் கொடுப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா..? மருத்துவர்கள் கூறும் தகவல்!

தாய்ப்பால் கொடுப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா..? மருத்துவர்கள் கூறும் தகவல்!

தாய்ப்பால் கொடுப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா..?

தாய்ப்பால் கொடுப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா..?

மார்பகங்களில் வீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரு மார்பகங்களிலிருந்தும் உணவளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  • Share this:
கர்ப்ப காலத்தில் 9 சதவீத பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு உருவாகிறது. கடந்த காலங்களில் சுமார் 40 லட்சம் இந்திய பெண்கள் கர்ப்பகால நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பெரும்பாலும் டைப் 2 நீரழிவு வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது. இத்தகைய நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறையும்.

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் :

குழந்தையைப் பராமரிப்பதற்கும், தாய்-சேய் பிணைப்பை உருவாக்குவதற்கும் தாய்ப்பால் சிறந்த வழியாகும்.பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், இதய நோய், வகை 2 நீரழிவு நோய், கர்ப்பத்திற்குப் பிறகு எடை இழப்பு, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தாய்ப்பால் குறைக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் ‘ஆக்ஸிடாஸின்’ என்ற ஹார்மோன் ஆனது, அதிகம் வெளியிடப்படுகிறது. இது தாயின் மனநிலையை மகிழ்ச்சியாக இருக்குமாறு மேம்படுத்துகிறது. குறிப்பாக பிரசவத்திற்குப் பிறகு உண்டாகும் மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது.



ரத்த சர்க்கரை அளவு :

புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு பயிற்சியாக இருக்கிறது. குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கும் போது, ​​நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம்.

நீரழிவு நோயுடன் தாய்ப்பால் கொடுப்பது சவாலான காரியம் ஆகும். ஏனெனில் பெண்களுக்கு மார்பகங்களில் வீக்கம் ஏற்படலாம். மார்பகங்களில் வீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரு மார்பகங்களிலிருந்தும் உணவளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பகப் புற்றுநோய் : ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்...

தடுக்கப்படும் நோய்கள் :

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ‘தாய்ப்பால்’ கொடுப்பது அவசியம் ஆகும். குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்து ஆகிய குறைபாடுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. குழந்தையின் பிற்கால வாழ்க்கையில் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரழிவு மற்றும் இருதய நோய் போன்ற அபாயத்தை குறைக்கிறது.



இரத்த குளுக்கோஸ் :

தாய்ப்பாலை உற்பத்தி செய்ய இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் பயன்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. கூடுதல் கலோரிகளை எரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதுமட்டுமில்லாமல் இது இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கிறது.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பின்பற்ற வேண்டியவை :
தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு உணவை சாப்பிட வேண்டும். இரத்த சர்க்கரை அளவை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கண்காணிக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது, அருகில் பிஸ்கட் அல்லது பழம் போன்ற அவசர சிற்றுண்டியை வைத்திருக்க வேண்டும். தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். மார்பக அழற்சி ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: