சர்க்கரை நோய் (நீரிழிவு) என்பது உடலில் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்ய முடியாத நிலை ஆகும். இது ரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருக்க காரணமாகிறது. சர்க்கரை நோயின் மிகவும் பொதுவான வகைகள் டைப் 1 மற்றும் டைப் 2 டயாபட்டிஸ் ஆகும்.
ரத்த சர்க்கரை அளவுகள் எப்போதுமே கட்டுப்பாட்டில் இருப்பது முக்கியம். அவை அதிகமாக அல்லது குறைவாக இருக்க கூடாது. குறிப்பிட்ட வரம்பிற்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்படும் ரத்த சர்க்கரை அளவுகள் இதய நோய், பார்வை இழப்பு மற்றும் சிறுநீரக நோய் போன்ற கடும் அபாயங்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எடை அதிகரிக்கும் போது ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும் என்பதால் உங்களின் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்கலாம். இல்லை நீங்கள் உடல் பருமன் கொண்டவர் என்றால் இருப்பதை விட 5 - 7 கிலோ எடையை குறைப்பது நல்ல பலனை தரும்.
ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்...
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முக்கியமாக கார்போஹைட்ரேட் நுகர்வை குறைக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளோர் கட்டாயம் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு குறைந்து காணப்பட்டால் ஃபிரெஷ் ஜூஸ் , தேன் போன்ற நேச்சுரல் சுகர் கொண்டவற்றை டயட்டில் சேர்க்க வேண்டும்.
தூக்கத்தின் பங்கு:
நம் உடலில் ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே நம்முடைய இரவு சராசரி தூக்க நேரம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த குறைந்த தூக்க நேரம் மக்களிடையே உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிக்க காரணமாக இருப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். நீரிழிவு நோய்க்கு தூக்கமின்மை குறிப்பிடத்தக்க ஆபத்து காரணி என்று ஆய்வாளர்களும் கூறி இருக்கிறார்கள்.
Also Read : இரவில் தூங்காமல் இருப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?
ஒரு நபர் தூங்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு பொதுவாக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும் ஒரே இரவில் மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. அதே போல ஆரோக்கியமானவர்களுக்கு கவலையை ஏற்படுத்தாது. ஆனால் மோசமான தூக்கம் கவலைக்குரியது, ஏனெனில் இது ஒருவரின் ரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கலாம்.
தூக்கத்தை மேம்படுத்த உதவும் டிப்ஸ்:
- மன அழுத்தமும் தூக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எப்படி என்றால் மன அழுத்தத்தை குறைக்க சராசரியாக இரவில் 8 - 9 மணி நேரம் தொடர்ச்சியாக நன்றாக தூங்கியெழ வேண்டும். அதே போல தரமான தூக்கத்திற்கு மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம். எனவே பகல் பொழுதில் நீங்கள் உங்களின் வழக்கமான உடல் செயல்பாடுகளுடன் 30 - 45 நிமிடங்கள் ஒர்கவுட் செய்வது மனஅழுத்தத்தை குறைக்க, நன்றாக தூங்க உதவும்.
Also Read : அடிக்கடி முதுகு வலி ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான அறிகுறியா..?
- உங்கள் தூக்க சுழற்சியை இயல்பாக்க சில நாட்கள் பிடிக்கலாம். எனவே பொறுமை அவசியம். தினமும் நீங்கள் டயர்ட் ஆகும் அளவிற்கு உங்களை பிஸியாக வைத்து கொள்ள வேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக பிஸி ஷெட்யூலை கொண்டிருப்பது உங்களை இரவுக்குள் டயர்டாக்கி விடும். இந்த சோர்வு உங்களுக்கு நல்ல தரமான தூக்கத்தை வழங்க உதவியாக இருக்கும்.
- தூங்க செல்லும் முன் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளிப்பது நன்கு தூங்க உதவும்.
- படுக்கைக்கு செல்வதற்கு 2 - 3 மணிநேரம் முன் இரவு உணவு முடித்து விட வேண்டும்.
- படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தப்பட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மொபைல் மற்றும் டிவி உள்ளிட்ட ஸ்கிரீன்களை பார்க்காமல் தவிர்த்து விட வேண்டும்.
ரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிப்பது நீரிழிவு அல்லது முன் நீரிழிவு நோயாளிகள் எந்த உணவுகள், மருந்துகள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கின்றன என்பதை புரிந்துகொள்ள உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Sleep deprivation