பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods) பற்றி பொதுவாக நிறைய குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஒரு உணவு பொருளின் சுவையை பாதுகாக்க அல்லது உயர்த்த அதனை தயாரிக்கும் போது ஏதேனும் ஒரு வகையில் மாற்றப்படுவது பதப்படுத்தப்பட்ட உணவுகளாக கருதப்படுகிறது.
புதிய இறைச்சி அல்லது பால் பொருட்கள் போன்ற சீக்கிரம் கேட்டு போக கூடிய உணவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில அடிப்படை பதப்படுத்துதல் முறை அவசியம். எனினும் நிபுணர்களின் கவலை மிகவும் பதப்படுத்தப்படும் உணவுகளை பற்றியதாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான மக்களின் தங்கள் வாழ்வில் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உள்நுழைத்து விட்டதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறி வருகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுக்க என்று நிபுணர்கள் அறிவுறுத்தினாலும் சிப்ஸ்கள் அல்லது சாக்லேட்ஸை தவிர்ப்பது என்பது நமக்கு கடினமான ஒன்றாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு கேடுகள் விளைவிக்கின்றன எனபதை பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. இதனிடைய பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிதி நிகம், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தஃடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.
View this post on Instagram
இது தொடர்பான தனது இசை போஸ்ட்டில் நிதி நிகம் கூறி இருப்பதாவது:
நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது உங்கள் ஆரோக்கியத்தில் என்ன மாற்றங்கள் நடக்கிறது.!! இவை உங்கள் ஆரோக்கியத்தில் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற தகவல் உங்களுக்கு புதிதாக இருக்காது..
உங்கள் எடை அதிகரிக்கலாம்...
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரிகள் மிக அதிகம் என்பதால் இவற்றை தொடர்ந்து சாப்பிடுவது உங்களது எடையில் மிகப்பெரிய அதிகரிப்பை ஏற்படுத்த கூடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுப்பது நன்றாக சாப்பிட்டோம் என்பதற்கான மனநிறைவுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பதை கடினமாக்குகிறது.
ஆயுள் குறையலாம்...
அதிம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கேன்சர் உண்டாக்குவதாக நேரடியாக காட்டப்படவில்லை என்றாலும், இவை ஒட்டுமொத்தமாக இறப்பு அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது ஆயுளைக் குறைப்பதாக பல ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
வைட்டமின் சப்ளிமெண்ட் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வு
இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பு..
தீவிரமாக பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள், சாஸ்கள், இறைச்சிகள், சர்க்கரை பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பானங்கள் மற்றும் சாலட்டி ஸ்னாக்ஸ்கள் அதிக சோடியம் கொண்டுள்ளன. ஆனால் உடலுக்கு நாளொன்றுக்கு சிறிய அளவிலான சோடியம் போதுமானது. அதிக சோடியம் நுகர்வு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு..
ஆரோக்கியமான குடல் என்பது பலவகை பாக்டீரியாக்களை கொண்டது. நாம் சாப்பிடும் உணவுகள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் கலவையை மாற்றும் ஆற்றல் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதை மோசமாக்கலாம். ஆனால் ஃபைபர் நிறைந்த உணவுகள் ஆரோக்கிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறி இருக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான நிதி நிகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Processed Foods, Side effects