• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நெருங்கும் தீபாவளி… ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள சில டிப்ஸ்..!

நெருங்கும் தீபாவளி… ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள சில டிப்ஸ்..!

ஆஸ்துமா

ஆஸ்துமா

தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிட்டால் N95 மாஸ்க்கை முகத்தில் அணிந்து கொள்வதன் மூலம் காற்றிலிருக்கும் நச்சு புகை மூக்கில் நுழைவதை தடுத்து கொள்ளலாம்.

  • Share this:
மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு புகையால் ஏற்பட போகும் காற்று மாசை நினைத்து மிகுந்த கவலையில் இருப்பார்கள் ஆஸ்துமா அதே சமயம் நோயாளிகள். பண்டிகை உற்சாகத்தில் முழுவதுமாக திளைக்கும் பலர் ஆஸ்துமா, நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நோய்களை எச்சரிக்கையுடன் கையாள தவறுபவர்களும் உள்ளனர்.

தீபாவளியின் போது காற்றில் மாசுகளை நீண்ட நேரம் வெளிப்படும் நச்சு புகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தானது. அவர்கள் இருமல், மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எப்படி எல்லாம் கவனமாக இருக்கலாம் என்பதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.,

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மிகமிக அதிக அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்படுவதில் ஏற்படும் சுற்றுசூழல் மாசு உணமையிலேயே மிகவும் ஆபத்தானது. ஏற்கனவே சுவாச பிரச்சனைகளை கொண்டவர்களின் கோளாறுகளை தீவிரமாக்கி விட கூடும். நோய்க்கு சிகிச்சை பெறுவது விட, நோய் வராமல் தற்காத்து கொள்ள எப்போதுமே முன்னெச்சரிகையாக இருப்பதே சிறந்தது. அதிகளவில் பட்டாசுகளை வெடிக்கும் போது முடிந்தவரை சுவாசம் மற்றும் ஆஸ்துமா கோளாறு அல்லது உள்ளவர்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது.

தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிட்டால் N95 மாஸ்க்கை முகத்தில் அணிந்து கொள்வதன் மூலம் காற்றிலிருக்கும் நச்சு புகை மூக்கில் நுழைவதை தடுத்து கொள்ளலாம். தீபாவளியையொட்டி பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் மற்றும் பெயிண்ட் அடிக்கும் வேலைகளில் இறங்கி உள்ளனர். ஆனால் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவசரப்பட்டு இந்த வேலைகளில் தங்களை எட்டுப்படுத்தி கொள்ளாமல் நிதானம் காட்ட வேண்டும். மேலும் ஆஸ்துமா நோயாளிகள் எங்கே வெளியே சென்றாலும் தவறாமல் இன்ஹேலரை கையிலேயே எடுத்து செல்வது மிகவும் முக்கியமான ஒன்று. சிலருக்கு அதிக காற்று மாசு கண் எரிச்சல், மூக்கு ஒழுகுதல், தோல் அலர்ஜி மற்றும் ரேஷ்ஸஸ் உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்த கூடும்தீபாவளி மாசை சமாளிக்க ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவும் டிப்ஸ்கள்..



வெளியே வர வேண்டாம்: நாம் முன்பே கூறியது போல ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சனைகள் கொண்டவர்கள் கூடுமானவரை வீட்டிலேயே இருக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒருவேளை தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிட்டால் சுவாச நிபுணர் அறிவுறுத்தும் மருந்துகளை எடுத்து கொண்டு வெளியே புறப்படுவது நல்லது.

கண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்..!

N95 மாஸ்க்: ஆஸ்துமா உள்ளவர்கள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் இந்த மாஸ்க்கை சரியான முறையில் அணிந்து கொண்டு சிறிது நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழலாம். கண் எரிச்சலை தவிர்க்க ஐ கியரை (eye gear) அணிந்து கொள்ளலாம்.

குழந்தைகள்: சுவாச கோளாறுகளை கொண்ட குழந்தைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவ சொல்ல வேண்டும். தவிர கண்களையும் மெதுவாக கழுவ கூறுங்கள். மூக்கில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் நன்றாக மூக்கை சிந்த சொல்லுங்கள்.



மாலை நேரம்: தீபாவளி பண்டிகைக்கு முன்நாள், தீபாவளியன்று மற்றும் அடுத்த நாள் என 3 தொடர் நாட்களில் மாலையில் தான் அதிகம் பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பதால், அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்: அதிக அளவு சாப்பிடுவது மற்றும் எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அச்சுறுத்தல் என்பதால் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவசியம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: