• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சர்க்கரை நோயாளிகள் 'சர்க்கரை அளவு டெஸ்ட்' எப்போதெல்லாம் செய்ய வேண்டும்..? சுயமாக செய்வதால் என்ன ஆபத்து..?

சர்க்கரை நோயாளிகள் 'சர்க்கரை அளவு டெஸ்ட்' எப்போதெல்லாம் செய்ய வேண்டும்..? சுயமாக செய்வதால் என்ன ஆபத்து..?

உங்கள் உடலில் இரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்கு திறம்பட கொண்டு செல்ல முடியாத போது உயர் இரத்த சர்க்கரையாக மாறுகிறது. மேலும் இது சரிபார்க்கப்படாமல் இருந்தால் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

உங்கள் உடலில் இரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்கு திறம்பட கொண்டு செல்ல முடியாத போது உயர் இரத்த சர்க்கரையாக மாறுகிறது. மேலும் இது சரிபார்க்கப்படாமல் இருந்தால் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

இரத்ததில் அதிகரிக்கும் இன்சுலின் அளவைக் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள செய்வதே சர்க்கரை டெஸ்ட்.

  • Share this:
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சர்க்கரை அளவை தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் அவர்களின் இரத்ததில் அதிகரிக்கும் இன்சுலின் அளவு கட்டுப்பாடுடன் இருந்தால்தான் சர்க்கரை அதிகரிக்காது.

    எனவேதான் மருத்துவர்கள் அதன் அளவை நிலையாக வைத்துக்கொள்ள அடிக்கடி டெஸ்ட் செய்வது அவசியம் என்கின்றனர். இதனால் பலரும் வீட்டிலேயே சர்க்கரை அளவு டெஸ்ட் செய்யும் கருவியை வாங்கி வைத்து சுயமாக செய்து கொள்கின்றனர். அவ்வாறு செய்வதானால், டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியுமா.?

    எப்போது செய்ய வேண்டும்..?

    ஒரு நாளைக்கு இரண்டு முறை சர்க்கரை அளவை டெஸ்ட் செய்யலாம். அதுவும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இதற்கு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். அப்படி டெஸ்ட் எடுப்பதானால் உணவு அல்லது ஸ்னாக்ஸ் சாப்பிடும் முன், உடற்பயிற்சி செய்யும் முன், செய்த பின் எடுக்கலாம். இரவு தூங்கும் முன் எடுக்கலாம். இவ்வாறு எடுத்துவிட்டு அதன் அளவை மருத்துவரிடம் தெரியப்படுத்துதல் அவசியம்.



    எப்படி செய்ய வேண்டும்..?

    டெஸ்ட் செய்யும் முன் கைகளை சுத்தமாகக் கழுவிக்கொள்வது அவசியம். ஈரம் இல்லாமல் துடைக்கவும்.

    பின் விரல் நுனியில் இரத்தம் எடுக்க டெஸ்ட் மீட்டர் கிட்டுடன் கொடுக்கப்பட்டுள்ள ஊசியால் குத்த ஒரு துளி இரத்தம் வரும். வரவில்லை என்றால், கைகளை கசக்க இரத்தம் ஒரு துளி வரும். துளி இரத்தத்தை மீட்டரில் சேகரிக்க இன்சுலின் அளவு காண்பிக்கும் வரை அப்படியே வைக்கவும்.

    பின் இறுதியாகக் காட்டும் அளவை குறித்து வைத்துக்கொள்ளவும்.

    உங்கள் வியர்வை ஏன் துர்நாற்றம் வீசுகிறது தெரியுமா..?

    சுயமாக செய்யும்போது என்ன ஆபத்துகள் வரும்..?

    வீட்டில் சுயமாக செய்வது சௌகரியமானது எளிமையானது என்றாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது சிலர் இரத்தம் எடுக்கத் தெரியாமல் பலமுறை ஊசியால் குத்துவார்கள். சில நேரங்களில் குத்தும் அளவு தெரியாமல் ஆழமாக குத்த இரத்தம் அதிகம் வெளியேறலாம். இதனால் லேசான தலைவலி, மயக்கம், பதட்டம் உண்டாகலாம். இரத்தம் வெளியேற அது தோலில் சேர்த்து தொற்றை உண்டாக்கலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: