Home /News /lifestyle /

மது உங்கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா..? எச்சரிக்கும் ஆய்வு

மது உங்கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா..? எச்சரிக்கும் ஆய்வு

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

மிதமான குடிப்பழக்கம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் மூலம் தெரியவந்திருந்தாலும், இந்த புதிய ஆராய்ச்சி குறைவாக குடிக்கும் சிலரில் இதயம் செயல்படும் விதத்தை சீர்குலைக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

தினசரி மது அருந்துவதும், அல்லது ஒரு கிளாஸ் ஒயின் மற்றும் பீர் குடிப்பது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் வரலாற்றை கொண்ட ஒருவரில் ஒரு வகை இதய அரித்மியாவின் அபாயத்தை விரைவாக அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்கஹால் மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதை மருத்துவர்கள் நீண்ட காலமாக கண்டுபிடித்து வந்தாலும், இப்போது வரை ஆல்கஹால் அரித்மியாவை ஏற்படுத்தும் என்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்காக நடத்தப்பட்ட புதிய ஆய்வில், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பாதிப்பு வரலாற்றைக் கொண்ட 100 பேரை ஆராய்ச்சியாளர்கள் நியமித்தனர்.

அவர்களை நான்கு வாரங்களுக்கு தீவிரமாக கண்காணித்து, அவர்களின் ஆல்கஹால் உட்கொள்ளல் மற்றும் அவர்களின் இதய தாளங்களின் தன்மையை கண்காணித்தனர். அதன்படி, ஆல்கஹால் குடிப்பதால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஒரு நபருக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அல்லது அசாதாரண இதய தாளம் ஏற்படும் அபாயங்கள் அதிகரித்தன. மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறார்களோ, அவர்களுக்கு அரித்மியா இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 30ம் தேதி அன்று அன்னல்ஸ் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்டது. அதில், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் வரலாற்றைக் கொண்டவர்கள் ஆல்கஹால் நுகர்வினை குறைப்பதன் மூலமும் அல்லது அதை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலமும் அரித்மியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்டுபிடிப்புகள் எந்த பாதிப்பும் இல்லாத ஆரோக்கியமான மக்களிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மிதமான குடிப்பழக்கம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் மூலம் தெரியவந்திருந்தாலும், இந்த புதிய ஆராய்ச்சி குறைவாக குடிக்கும் சிலரில் இதயம் செயல்படும் விதத்தை சீர்குலைக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வின் ஆசிரியரும் பல்கலைக்கழகத்தில் இருதயவியல் பிரிவில் மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் கிரிகோரி மார்கஸ் கூறியதாவது, "நாம் மது அருந்தும் போதெல்லாம், அது நம் இதயங்களின் மின் செயல்பாடுகளில் கிட்டத்தட்ட உடனடி விளைவை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் ஆய்வு நிரூபிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இளைஞர்களை குறி வைக்கும் மாரடைப்பு : என்ன காரணம்..? என்ன தீர்வு..? மருத்துவரின் விளக்கம்...

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பாதிப்பு ஏ-ஃபைப் என்றும் அழைக்கப்படுகிறது. இது சாதாரணமாக செயல்படும் இதய ரிதங்களை அசாதாரணமாக்குகிறது. இந்த பிரச்சனை அமெரிக்காவில் மூன்று மில்லியன் மக்களை பாதித்துள்ளது. இதயத்தின் மேல் அறைகளில், ஒழுங்கற்ற முறையில் இதயம் துடிக்கத் தொடங்கும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இது இதயத்தின் கீழ் அறைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கும். காலப்போக்கில், இது இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

ஏ-ஃபைப் பாதிப்பின் அறிகுறிகளில் சில மணிநேரங்களுக்கு நீடிக்கும் படபடப்பு, மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்றவை அவ்வப்போது ஏற்படலாம். அதேபோல மக்களுக்கு வயதாகும்போது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், ஐரோப்பிய வம்சாவளி அல்லது அரித்மியாவின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக குடிப்பழக்கத்தை கொண்டவர்கள் நாளடைவில் அரித்மியாவின் பிரச்சனையை அனுபவிப்பதை மருத்துவர்கள் பதிவு செய்யத் தொடங்கினர். இந்த நிகழ்வு விடுமுறை இதய நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. அதன்படி ஆல்கஹாலை தவறாமல் உட்கொள்பவர்கள் அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறை குடிப்பவர்கள், குடிப்பழக்கம் இல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது அவர்களில் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..? 5 எளிய வழிகள் இதோ..

இந்த கண்டுபிடிப்புகள் ஆல்கஹால் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாகியுள்ளது. மேலும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் தங்கள் நோயாளிகளில், குறிப்பாக ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் வரலாறு உள்ளவர்களில், அவர்கள் எவ்வளவு ஆல்கஹால் உட்கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் அதை குறைப்பது அல்லது தவிர்ப்பது விவேகமானதா என்பதைப் பற்றி உரையாட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Alcohol, Heart attack, Heart disease, Heart health

அடுத்த செய்தி