கருவை சுமக்கும் பெண்களுக்கு முதலில் தைராய்டு பரிசோதனை செய்யச் சொல்வார்கள். காரணம் தாயிடமிருந்து சுரக்கும் தைராக்சின் ஹார்மோன் குழந்தைக்கும் சம அளவில் கிடைக்க வேண்டும். அப்படி சுரக்கவில்லை எனில் குழந்தைக்கு சில குறைபாடுகள் உண்டாகலாம். தைராய்டு உள்ள பெண்களுக்கு தைராக்ஸின் சுரப்பு குறைவாகவே இருக்கும். எனவேதான் அதை அதிகரிக்க மகப்பேறு மருத்துவர்கள் தைராய்டு உள்ள கர்ப்பிணிகளை உணவில் அதிக கவனம் செலுத்தச் சொல்வார்கள்.
தைராக்ஸின் பணி
இந்த தைராக்ஸின் ஹார்மோன்தான் இதயம், உணவுச் செரிமானம், பாலின உறுப்புகள் என உடலின் உள்ளே நடைபெறும் அனைத்து செயல்பாடுகளையும் தூண்டிவிடும் முக்கிய பணியை செய்கிறது. இந்த தைராக்ஸின் சுரப்பது குறைவதற்கு அயோடின் குறைபாடுதான் முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்குதான் இந்த பிரச்னை அதிகம் உண்டாகிறது.
கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகளுக்கு தைராக்ஸின்தான் குழந்தையின் வளர்ச்சியை முடிவு செய்கின்றன. இது தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்கும் கர்ப்பகாலத்தில் இந்த சிக்கல் வரும். அப்படி தைராக்ஸின் குறையும்போது குழந்தையின் வளர்ச்சியில் தாமதம், சுறுசுறுப்பின்மை, கண் பார்வையில் கோளாறு, காது கேளாமை, புத்தி கூர்மையின்மை, சோர்வு, கற்றல் குறைபாடு போன்றவை உண்டாகலாம். பெண் குழந்தையாக இருந்தால் பருவமடைவதில் தாமதம், மாதவிடாயில் சிக்கல் என கர்ப்பப்பையில் பிரச்னைகள் உண்டாகலாம்.
கட்டுப்படுத்த என்ன வழி ?
அயோடின் குறைபாட்டை சரிசெய்ய அயோடின் உப்பு சாப்பிடுங்கள். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை நிறைய சாப்பிடுங்கள். கடல் உணவுகளிலும் அதிகமாக அயோடின் இருப்பதால் மீன் வகைகளை சாப்பிடுங்கள். முட்டை கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக உங்கள் மகப்பேறு மருத்துவர் சொல்லும் உணவுப் பழக்கங்களை முறையாகப் பின்பற்றினாலே கட்டுப்படுத்தலாம்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.