முதுமை அடைதல் என்பது அனைவரது வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகும். பலரும் தமக்கு முதுமை அடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மனதளவில் சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் உண்மையிலேயே வயதாகிவிட்ட காரணத்தினாலேயே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வடைய தேவையில்லை.
ஒருவர் முதுமை அடைந்த காலத்திலும் கூட மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சுறுசுறுப்பாகவும் இளமையில் எப்படி கலகலப்பாக இருந்தார்களோ, முதுமையிலும் அதேபோல இருப்பதை ஆக்டிவ் ஏஜிங் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இப்படி முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் தங்களின் உண்மையான திறன் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சமுதாயத்திலும் மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்நாளை கழிப்பதற்கு உதவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தவிர சமுதாயத்தின் தங்கள் பங்களிப்பை கொடுப்பதற்கும் இது உதவுகிறது.
எப்படி சாத்தியம்?
வயதான காலத்தில் கூட புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலம் நமது மூளை சோர்வடையாமலும் அதே சமயத்தில் வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இது தடுக்கிறது.
இதைத் தவிர புதிய செயல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, புதிய நாவல்களை படிப்பது, பயணங்கள் மேற்கொள்வது என உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும். இதைத் தவிர நீங்கள் எப்போதும் செய்ய நினைத்து, ஆனால் செய்ய முடியாமல் போன சில விஷயங்களை தற்போது முயற்சி செய்து பார்க்கலாம்.
வேலைகளில் ஈடுபடுவது:
அடிக்கடி ஓய்வு எடுக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் போதுமான அளவில் உறக்கம் கிடைப்பதோடு, நேரத்திற்கு பசியும் எடுக்கும். இப்படி நேரத்திற்கு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை நம்மால் தடுக்க முடியும். இதைத் தவிர உடலுக்கு நல்ல பலத்தையும் வயதான காலத்தில் நல்ல சமநிலையையும் இது கொடுக்கிறது.
Also Read : சர்க்கரை அளவு குறைவது பெரிய ஆபத்து : மருத்துவர்கள் ஏன் இதை பற்றி கூறுவதில்லை?
அதே சமயத்தில் ஒவ்வொருவரும் உடல் நிலையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் அதிக நாட்கள் எந்தவித வேலையும் செய்யாமல் ஓய்விலேயே இருந்தால் உங்களால் உடல் அளவில் கட்டுக்கோப்பாக இருப்பது என்பது முடியாத விஷயமாக போய்விட வாய்ப்புகள் உண்டு. எனவே ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து பின்னர் சரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கம்:
உடலும் மனதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கம் மிகவும் அவசியமானது. நேரத்திற்கு சாப்பிடுவதும், உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதும் இவற்றோடு சேர்த்து போதுமான அளவிற்கு உடலுக்கு வேலை கொடுப்பதும் ஒட்டுமொத்தமாக உடல் மற்றும் மன வலிமையை அதிகரிப்பதோடு நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
வயதாகும் காலத்தில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.