இப்படி பண்ணா கொரோனா பரவும் ஆபத்து குறைவா? அப்போ டிரை பண்ணலாமே!

கொரோனா

இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் முறையாக மாஸ்க் அணிவதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு.

  • Share this:
தமிழக அரசு அறிவித்த ஊரடங்கின் காரணமாக குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் யாரும் முறையான வழிமுறைளை கடைபிடிப்பதில்லை. இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் முறையாக மாஸ்க் அணிவதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு. மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸினால் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அரசு பல்வேறு நெறிமுறிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவும் முறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்றின் நுண் துகல்கள் (aerosols), நீர் துகள்கள் (droplets), தரையின் மேற்பரப்பு ஆகியவற்றின் மூலம் எளிதில் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நீர் துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்கும், காற்றில் உள்ள நுன்துகள்கள் சுமார் 10 மீட்டர் அளவுக்கும் பரவக்கூடும்.

ஒரு இடம் காற்றோட்டமாக இருந்தால் காற்று செல்லுதல் அதிகரித்து தொற்று பரவும் தன்மை குறையும். வாய் வழியாகவோ, மூக்கின் வழியாகவோ வெளியேறும் நீர் துளிகளும், காற்றில் இருக்கும் துகள்களும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றை எளிதில் பரப்புகிறது. பெரிய நீர் துளிகள் தரையிலும், ஒரு பொருளின் மேற்பரப்பிலும் இருக்கும். காற்றின் நுன் துகள்கள் நீண்ட தூரத்துக்கு செல்லும்.

காற்று புகாத அறைகளில் நீர் துளிகளும், காற்றின் துகள்களும் வேகமாக பரவி அங்கிருக்கும் ஒருவருக்கு நோய் தொற்றை பரப்பும். ஆனால் வெளி இடங்களில் அந்த ஆபத்து மிகவும் குறைவு. அதாவது ஒரு இடம் காற்றோட்டமாக இருந்தால் அங்கு தூய்மையான காற்று வந்து பழைய காற்றை நீக்கும். காற்றில் இருக்கும் வைரஸ் துகள்களை நீக்கி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும். ஒருவர் இருமல் , தும்மல், பேசுவது, மூச்சுவிடுவது போன்றவற்றின் போது காற்றில் தொற்றை பரப்புகிறார்.காற்றோட்டம் இல்லாத அறையில் அந்த காற்று வெளியே போகாமல் தங்கி விட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த அறையில் இருக்கும் தொற்று எளிதில் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் அந்த அறையில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்திருந்தால் புதிய காற்று அங்கு வந்து அங்கிருக்கும் பழைய காற்றை உடனடியாக அப்புறப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆபத்து குறைவு என்பது கூடுதல் தகவல்.

உங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமடைந்துவிட்டது என்பதை உணர்த்தும் 3 முக்கிய அறிகுறிகள்..!

உங்கள் வீடுகளில் காற்றோற்றமாக வைத்துக்கொள்வது எப்படி?

உங்கள் வீடுகளில் கதவு, ஜன்னல்களை திறந்து வைத்திருப்பதன் மூலம் எப்பொழுதும் காற்றோற்றமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் கோடைகாலங்களின் போது ஜன்னலின் கீழ் மற்றும் மேல் கதவுகளை திறந்து வைத்திருப்பது இன்னும் நல்லது. உங்கள் வீட்டில் எதிரெதிர் இருக்கும் ஜன்னல்களை திறந்துவைத்தால், காற்று வந்து செல்ல இலகுவாக இருக்கும்.கதவுகளை திறந்து வைப்பதன் மூலம் உங்கள் அறையின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும். முடிந்த வரை பகல் முழுவதும் கதவு, ஜன்னல்களை திறந்து வைத்திருப்பதால் உங்கள் வீடு காற்று வந்து செல்ல வசதியாக இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: