முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அதிக உப்பு மற்றும் புரோட்டீன் சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்குமா..? அறிகுறிகளும்... தப்பிக்கும் முறைகளும்...

அதிக உப்பு மற்றும் புரோட்டீன் சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்குமா..? அறிகுறிகளும்... தப்பிக்கும் முறைகளும்...

சிறுநீரக நோய்

சிறுநீரக நோய்

மனித உடலில் இதயத்திற்கு அடுத்த படியாக சிறுநீரகங்கள் முக்கிய உறுப்பாக செயல்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மனித உடலில் இதயத்திற்கு அடுத்த படியாக சிறுநீரகங்கள் முக்கிய உறுப்பாக செயல்படுகின்றன. அவை நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டுவதன் மூலமும் ரத்தத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சமநிலைப்படுத்துகின்றன. உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகங்கள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் மற்றும் எலும்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கவும் உதவுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பாதிப்பைக் குறைக்கவும், சர்வதேச சிறுநீரகக் கழகம் (ISN) மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளை (IFKF) ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் சிறுநீரக நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சிறுநீரகங்கள் மனித உடலை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன?

சிறுநீரகங்கள் உடலில் உருவாகும் கழிவுகள் மற்றும் திரவத்தை வடிகட்டி வெளியேற்ற உதவுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் உங்கள் உடலில் உள்ள ஒரு ஜோடி சிறுநீரகங்கள், ரத்தத்தை வடிகட்டும்பொழுது சோடியம், பொட்டாசியம், கால்சியம், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற வேதிப்பொருட்களை இரத்தத்திலிருந்து மீட்கின்றன. உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவைச் சமன்படுதுகின்றன.

சிறுநீரகம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எலும்புகளை வலுவாக வைக்கிறது.

சிறுநீரகங்கள் நெஃப்ரான்கள், குளோமருலஸ் மற்றும் குழாய்களால் ஆனவை. குளோமருலஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது, குழாய் தேவையான அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்கிறது மற்றும் உடலில் இருந்து கழிவுகளை நீக்குகிறது. சிறுநீரக தமனி வழியாக இதயத்திற்கான ரத்தம் ஓட்டம் எடுத்துச் செல்லப்படுகிறது.

சிறுநீரக நோய்கள்..

உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நாள்பட்ட சிறுநீரக நோய், இரத்தத்தில் உள்ள தாதுக்கள் சிறுநீரகத்தில் படிகமாக மாறுவதால் உருவாகும் சிறுநீரக கற்கள், குளோமருலியின் அழற்சியான குளோமெருலோனெப்ரிடிஸ், சிறுநீரகங்களில் நீர்க்கட்டிகள் வளருவதால், பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் மற்றும் பொதுவாக பெண்களுக்கு சிறுநீரக அமைப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்றால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஆகியவை உருவாகின்றன.

சிறுநீரக நோயின் அறிகுறிகள்..

சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறிகள் தூக்கமின்மை, தோல் வறட்சி மற்றும் அரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம், சோர்வு, கண்களைச் சுற்றி வீக்கம் மற்றும் நுரையுடன் சிறுநீர் வெளியேறுவது ஆகும்.

கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், சிறுநீர் வெளியேற்றம் குறைதல், பசியின்மை மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்.ளார்.

சிறுநீரக பாதிப்பை குறைப்பது எப்படி?

கிட்னி சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்ற வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை கட்டுப்படுத்த வேண்டும்

நீரிழிவு நோயாளியாக இருந்தால் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்

பக்கவாதம் யாருக்கெல்லாம் வரும்..? அதன் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி..? 

புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்; மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்

உடல் எடையைப் ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும்; உடற்பயிற்சி அவசியம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க முறை கட்டாயம்

மருந்துகளை உபயோகிப்பதில் கவனம் தேவை; மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதிப்பை குறைக்கும் உணவுமுறைகள்:

சரியான உணவு முறை சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர் நீரு பி அகர்வால் தெரிவித்துள்ளார். உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்வது சிறுநீரகங்களுக்கு நல்லது. ஒரு நாளைக்கு 3-4 கிராம் உப்பை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்கறிகள் மற்றும் பழங்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் புரதம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

First published:

Tags: Kidney Disease, Protein Diet, Salt