Home /News /lifestyle /

மெனோபாஸ் நெருங்கும் பெண்களுக்கு எடை குறைக்க உதவும் 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்!

மெனோபாஸ் நெருங்கும் பெண்களுக்கு எடை குறைக்க உதவும் 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்!

காட்சி படம்

காட்சி படம்

intermittent fasting: பெண்களுக்கு 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் மிகச் சிறந்த எடை குறைப்பு முறையாக இருக்கிறது என்று மருத்துவர் மைக்கேல் மோஸ்லி தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேற்கொண்டாலும் அவ்வப்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் எடை அதிகரிக்கும். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முதல் மாதவிடாய் நிற்க துவங்கிய காலம் என்று கூறப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்திலும் இத்தகைய பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எடை அதிகரிக்க துவங்கும்.

அது மட்டுமின்றி பொதுவாக 40களின் நடுப்பகுதியில் தான் பெரி-மெனோபாஸ் ஆரம்பிக்கும். எனவே வயதாவதால் உடலின் வளர்சிதை மாற்றமும் குறையத் துவங்கும். இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து ஐம்பதை நெருங்கும் பெண்களில் எடையை கணிசமாக அதிகரிக்கும். பெரிமெனோபாஸ் எதிர்கொள்ளும் பெண்களுக்கு 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் மிகச் சிறந்த எடை குறைப்பு முறையாக இருக்கிறது என்று மருத்துவர் மைக்கேல் மோஸ்லி தெரிவித்துள்ளார்.

5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்றால் என்ன?

1 நாளில் ஒரு குறிப்பிட்ட மணிநேரங்களில் எந்த உணவையும் சாப்பிடாமல் மற்றொரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு சாப்பிடும் பழக்கம் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்று கூறப்படுகிறது. உதாரணமாக காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சாப்பிடலாம், ஆனால் மாலை 6:00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8:00 மணி வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்ட். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் உணவு சாப்பிட்டு, மற்ற இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை தான் இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்ட் குறிக்கிறது. ஆனால் மருத்துவர் பரிந்துரைத்த 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது.

also read : உங்கள் மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் இருக்கணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..



5:2 என்பது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு நீங்கள் தினமும் சாப்பிடுவது போல உணவு சாப்பிடலாம். இரண்டு நாட்களுக்கு, 500 முதல் 600 கலோரிகள் வரை தான் சாப்பிட வேண்டும். இந்த டயட் திட்டத்தில், எந்த உணவின் மீதும் கட்டுப்பாடு இல்லை. எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் என்பது தான் கணக்கு. நீங்கள் எந்த உணவு சாப்பிட்டாலும், இரண்டு நாட்களுக்கு 600 கலோரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இது தினமும் பின்பற்றப்படும் டயட் உணவுமுறை இல்லை. உணவுக்கட்டுப்பாடும் இல்லை. எனவே, இதையே வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்வது எளிதானது.

இந்த 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறை பெண்களுக்கு எப்படி உதவும்?

மருத்துவர் மோஸ்லியின் ஆய்வுப்படி பெரி-மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த உணவு பழக்கம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும் என்பதுதான் இந்த 5:2 இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையின் அடிப்படை. அதன்படி பார்க்கும் பொழுது வாரத்தில் இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட விரதம் இருப்பது போல தான் இந்த முறையும் காணப்படுகிறது.

also read : நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பது எப்படி..?



விரதம் இருப்பது உடலில் கழிவுகளை நீக்க உதவும். அதுமட்டுமின்றி உடலின் செயல்பாடுகளை சீர்செய்து ஹார்மோன் பிரச்சனைகளையும் உடல் இயற்கையாகவே சரிசெய்ய உதவும். எனவே இந்த குறிப்பிட்ட ஒரு உணவு பழக்கத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு எடை குறைப்பது எளிதான இருக்கிறது. வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் இருக்கும் கொழுப்பு விரைவில் குறைகிறது, இன்சுலின் சென்சிட்டிவிட்டியை இது மேம்படுத்துகிறது.

2 நாட்களில் குறைவான கலோரிகளை எப்படி சாப்பிடுவது?

இந்த 2 நாட்களில் 600 கலோரிகள் வரை சாப்பிடலாம் அல்லது சோர்வாக இருந்தால் அதிகபட்சமாக 800 கலோரிகள் சாப்பிடலாம். ஏற்கனவே கூறியுள்ளது போல இந்த உணவு முறையில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே நீங்கள் காலையில் இருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து இரவு நேரத்தில் விரதத்தை முடித்து சாப்பிடலாம். இல்லை என்றால் காலையில் பிரேக்ஃபாஸ்ட் குறைந்த அளவு சாப்பிட்டு, மதியம் வயிறு நிறைய சாப்பிடலாம் அல்லது டயட் உணவு இருப்பது போல காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைத்து சாப்பிடலாம். மேலும், இரண்டு பெரிய மீல்ஸ் என்று மதிய உணவு மற்றும் இரவு உணவை சாப்பிடலாம்.

also read : சுகரை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவுமா..? எப்போது குடிக்க வேண்டும்..?



உங்களுக்கு விருப்பம் போல மற்றும் உங்களின் தேவைக்கு ஏற்ப நீங்கள் உணவுகளை பிரித்து சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் அதிக கலோரிகள் இருப்பதால் இந்த இரண்டு நாட்களில் இவ்வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்கள், வேக வைத்த முட்டை, காலிஃப்ளவர், பால் சேர்க்காத காபி மற்றும் தேநீர் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Fasting, Intermittent Fasting

அடுத்த செய்தி