சூடாக டீ அருந்தினால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து...! ஆய்வில் தகவல்

இந்த உணவுக்குழாய் புற்றுநோயானது 50 வயதிற்குக் குறைவானவர்களையே அதிகம் தாக்குகிறது.

news18
Updated: March 25, 2019, 5:55 PM IST
சூடாக டீ அருந்தினால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து...! ஆய்வில் தகவல்
சூடான டீ உணவுக் குழாய்க்கு புற்று நோய் ஆபத்து
news18
Updated: March 25, 2019, 5:55 PM IST
 சூடாக டீ அருந்தினால் உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்பட வாய்பு இருப்பதாக இண்டர்னேஷ்னல் ஜர்னல் ஆஃப் கேன்சர்  புதிதாக  நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

அந்த ஆராய்ச்சியில் நூறில் இருபது சதவீதம் பேர் உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிகப்படுகின்றனர் என கூறியுள்ளது. அந்த ஆராய்ச்சியானது, ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ அருந்துவீர்கள், எந்த வெப்ப நிலையில் அருந்துவீர்கள் என்கிற கேள்வியை முன் வைத்து 50,000 மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வானது அதிகபட்ச வெப்ப நிலையாக 60 டிகிரி செல்சியத்தை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு 700 மில்லி லிட்டர் அளவிற்கு, சூடு அதிகமான டீ அருந்துவோருக்கு உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.


இந்த உணவுக்குழாய் புற்றுநோயானது 50 வயதிற்குக் குறைவானவர்களையே அதிகம் தாக்குகிறது. மேலும் அவர்களுடைய உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது, சத்துகள் நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளாதது, அமிலச் சுத்திகரிப்பு போன்ற காரணங்களாலும் இந்த புற்றுநோய் அதன் வீரியத்தை அதிகரிக்கச் செய்கிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த ஆராய்ச்சியின் தலைவர் ”இந்த ஆராய்சியின் முடிவுகளும், ஆதாரங்களும் ஒத்துப் போகக் கூடியதாகவே இருக்கின்றன. அதிக வெப்பம் என்பது டீ மட்டுமல்ல அதுதவிற எந்த சூடான பொருளை உண்டாலும் உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால் எந்த உணவானாலும் அதன் வெப்ப நிலைக் குறைந்த பின் உண்ணுங்கள் “ என அறிவுரை வழங்கியிருக்கிறார்.
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...