• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வெந்நீர் அல்லது தண்ணீர்... எதில் குளிப்பது நன்மை அதிகம்..?

வெந்நீர் அல்லது தண்ணீர்... எதில் குளிப்பது நன்மை அதிகம்..?

குளியல்

குளியல்

ஒரு நல்ல குளிர்ச்சியான நீரில் குளிப்பது வெந்நீர் குளியலுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.

  • Share this:
ஒரு சிலருக்கு சீசன் மாறினாலும் பச்சை தண்ணீரில் குளிப்பது தான் திருப்தியாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் கோடையில் கூட மிதமான சூடு நீரில் குளிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனினும் சூடான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது இரண்டில் சருமத்திற்கு எது சிறந்தது என்பதை பற்றிய குழப்பங்கள் பலருக்கும் இருக்கும்.

இரண்டில் எந்த நீரில் குளித்தால் சருமத்திற்கு சிறந்த பலனை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்கள் சருமத்திற்கு என்ன வெப்பநிலை கொண்ட நீரில் குளிப்பது சரியாக இருக்கும் என்பதை பற்றி நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், உங்கள் கவலைகளை முடிவுக்கு கொண்டு வர , பச்சை தண்ணீர் குளியல் மற்றும் வெந்நீர் குளியல் தொடர்பான விரிவான ஒப்பீட்டு ஆய்வு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சை தண்ணீரில் குளிப்பதன் நன்மைகள்:

* ஒரு நல்ல குளிர்ச்சியான நீரில் குளிப்பது வெந்நீர் குளியலுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. ஆராய்ச்சியின் படி, குளிர்ந்த நீர் மீளுருவாக்கம் செய்யும் பண்புகளை (regenerative properties) கொண்டுள்ளது. பரபரப்பான வேலை நாள் அல்லது கடின பயிற்சிகளுக்கு பிறகு இது தசைகளை ரிலாக்ஸ் செய்ய மற்றும் தசை ரீஜெனரேஷனை அதிகரிக்கவும் உதவும்.

* செல்லுலார் மட்டத்தில் தசைகளை சரிசெய்ய உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.



* பச்சை தண்ணீர் வெளிப்புற கால்களில் படும் போது, சருமத்தின் மேற்பரப்பில் ரத்த ஓட்டம் உடனடியாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெப்பமாக இருந்தால் உடல் வெப்பநிலை சட்டென்று குறைகிறது. மேலும் இந்த குளியல் சிறந்த உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, உங்கள் ஆழ்ந்த மைய திசுக்கள் உடல் முழுவதும் ரத்தத்தை வேகமாக சுற்றுவதன் மூலம் உதவுகிறது.

* உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு தீர்வாக மாறும்

* மேலும், குளிர் நீர் குளியல் முடிந்த பின் உடல் அமைப்பை சூடாக வைத்திருக்க, உங்கள் உடல் சில கொழுப்பு செல்களை எரிக்கத் தொடங்குகிறது. பழுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படும் இந்த செல்கள் அவற்றின் முறிவின் விளைவாக வெப்பத்தை உருவாக்க முடியும். எனவே இந்த குளியல் எடையை குறைக்க உதவும். உடலில் இருந்து சில கூடுதல் கிலோ கிராம் குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பச்சை தண்ணீரில் குளிக்கலாம்.

Air conditioner : ஏசி வாங்கும்போது எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? இதையெல்லாம் கவனிக்க மறந்துடாதீங்க..!

தோல் மற்றும் கூந்தலுக்கு பச்சை தண்ணீர் குளியல்:

குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் தலைமுடியின் தரத்தையும் மேம்படுத்துகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பது உடலின் மேற்பரப்பில் ரத்த ஓட்டத்தை இறுக்கமாக்குகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது என்பதை மேலே பார்த்தோம். தவிர சாதாரண நீரில் குளிப்பது நம் சருமத்திற்கு ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கிறது.

நம் தலைமுடியை வலுப்படுத்த முனைந்து, இதன் விளைவாக முடியின் ஒட்டு மொத்த தரமும் மேம்படுகிறது. சருமம் மற்றும் முடியின் தரம் மோசமடைவதற்கு ஒரு முக்கிய காரணம், சரும அடுக்கின் அழிவு. குளிர்ந்த நீரில் குளிப்பது சருமம் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. எனவே, தோல் மற்றும் முடியின் தரம் பாதுகாக்கப்படுகிறது.



பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் தீமைகள்..

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது குளிர், காய்ச்சல் அல்லது பிற உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் போது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்ல யோசனையாக இருக்காது. குளிர்ந்த நீர் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்த கூடும். எனவே உடல்நிலை சரியில்லாத போது நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உங்கள் உடலுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.

வெந்நீர் குளியல் நன்மைகள்:

* வெந்நீர் குளியல் தசைகளைத் தூண்டுவதன் மூலமும், நமது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலமும் உடலை நிதானப்படுத்த உதவுகிறது.

* நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் வெந்நீரில் குளிப்பது ஒரு மருத்துவ முறையாக மாறுகிறது. குளிர் மற்றும் இருமல் அறிகுறிகளைப் போக்க இது ஒரு இயற்கை தீர்வாகவும் கருதப்படுகிறது.



* காற்று பாதைகளைத் திறப்பதன் மூலமும், தடையை ஏற்படுத்தும் சளியிலிருந்து விடுபடுவதன் மூலமும், சுவாச அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதன் மூலமும் ஒரு சூடான நீர் குளியல் பயனுள்ளதாக இருக்கிறது.

* வெந்நீர் குளியல்உண்மையில் தோல் துளைகளை திறந்து அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்றுவதை எளிதாக்குகிறது. இருப்பினும், இது சருமத்தை மிகவும் வறண்டதாக மாற்றும். உங்கள் சருமம் சேதமடையாமல் இருக்க சூடான நீரில் குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

* தசை இறுக்கத்தை போக்க மற்றும் அவற்றை தளர்த்த உதவுகிறது.

Corona Safety : ஒரே பாத்ரூமை இரு கொரோனா நோயாளிகள் பயன்படுத்தலாமா? மருத்துவர் விளக்கம்

வெந்நீர் குளியல் தீமைகள்..

பச்சை தண்ணீரில் குளிப்பதுடன் ஒப்பிடும்போது வெந்நீரில் குளிப்பது அதிக தீமைகள் உள்ளன. பச்சை தண்ணீர் குளியல் மற்றும் வெந்நீர் தோலின் மேலடுக்கில் ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்களைத் தக்கவைக்க உதவும் சரும அடுக்கை, வெந்நீர் சேதப்படுத்துகிறது. அடிக்கடி வெந்நீரில் குளிப்பது சரும வறட்சி, எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் சருமத்தின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை மோசமடைய செய்கிறது. அதே போல வெந்நீர் குளியல் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்றும் குறிப்பிடப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: