வெறுப்பு மற்றும் விரோத மனப்பான்மை இதயத்தை பாதிக்கும்: ஆய்வில் பகீர் தகவல்!

வெறுப்பு மற்றும் விரோத மனப்பான்மை இதயத்தை பாதிக்கும்: ஆய்வில் பகீர் தகவல்!

1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடலில் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கிறது. எண்ணெயில் இருக்கும் பாலிபினால்கள் எல்.டி.எல் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்றன. எல்.டி.எல், உடலில் அதீரோசெலெரோசிஸ் எனப்படும் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதேபோல ஆலிவ் எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சில ஆய்வுகளில் இரத்த அழுத்த மருந்துகளின் தேவையைக் குறைக்க உதவும் என்று காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஆலிவ் எண்ணெய் மருந்துக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படவில்லை.

நம்மிடம் நீண்ட காலமாக நீடிக்கும் வெறுப்பு மற்றும் விரோத போக்கு இதயத்தைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
நம் மனது பாசம், அன்பு, மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு, அழுகை என பல்வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கியது. அந்த உணர்ச்சிகளை நாம் பலத் தருணங்களில் வெளிப்படுத்துகிறோம். ஆனால் இந்த உணர்ச்சிகளில் சில நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? வெறுப்பு, கோபம் மற்றும் எதிர்மறையான அணுகுமுறை ஆகியவை ஒருவருக்கு இதய நோய்களை ஏற்படுத்த வழிவகை செய்யும் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

எந்தவொரு மன அழுத்த சூழ்நிலையிலும் பெறப்படும் எதிர்மறையான பதில் இதய ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தும் எனவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

மன அழுத்தம் நிறைந்த நேரங்களில் சண்டை என்பது ஆரம்பமாகும். இருப்பினும், இதுபோன்ற சண்டை அடிக்கடி நிகழ்வதால் உடலின் வழியாக அட்ரினலின் பம்ப் செய்யப்படுவது குறைகிறது. காலப்போக்கில் இதுவே இயல்பாகிவிடுகிறது. இருப்பினும், சந்தேகம் கொள்ளும் நபர்கள் ஒவ்வொரு முறையும் அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். 

சந்தேக உணர்வு  மீண்டும் மீண்டும் தொடர்வதால் வழக்கமான நபர்களை விட அதிக மன அழுத்தத்தை பெறுகின்றனர். இதுகுறித்து ஆய்வின் ஆசிரியர் தெரிவித்ததாவது, "இவை இதயத்திற்கு மோசமானது. ஏனெனில் இது காலப்போக்கில் நமது இருதய அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார். உளவியல் மன அழுத்தம், இதய நோய் போன்ற உடலியல் வெளிப்பாடுகளுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை கடந்தகால ஆய்வுகளும் வெளிப்படுத்தியுள்ளன. 

மேலும் இது பற்றி டெக்சாஸில் உள்ள பேலர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அலெக்ஸாண்ட்ரா டைரா கூறியதாவது, அமெரிக்காவின் ஆராய்ச்சி குழு ஒன்று உணர்ச்சி, நடத்தை மற்றும் அறிவாற்றல் ஆகிய மூன்றிலிருந்தும் விரோத மனப்பான்மை வெளிப்படுவதை கண்காணித்தனர். அவை எண்ணங்கள், மற்றவர்களின் நோக்கங்களைப் பற்றிய அணுகுமுறைகள், நோக்கங்கள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை கொண்டுள்ளது என டைரா கூறியுள்ளார்.

Also read... சிங்கிள் பேரண்ட்டாக இருக்கிறீர்களா? நீங்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?மன அழுத்தம் என்பது உடல் பருமன், புகைபிடித்தல், ஆல்கஹால், அதிக கொழுப்பு ஆகியவற்றை போன்றது. அந்த வகையில் இந்த விரோதப் போக்கு குறுகிய கால மன அழுத்தத்திற்கு மட்டுமல்ல, நமது நீண்டகால ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த போக்கு நமது அரசியல் சூழலில் மிகவும் பரவலாக உள்ளது என்று சொல்லலாம். இதுகுறித்த ஆராய்ச்சிக்காக, இரண்டு ஆய்வக அமர்வுகளில் 96 பங்கேற்பாளர்கள் ஏழு வார இடைவெளியில் கண்காணிக்கப்பட்டனர். 

அவர்களுக்கு மன அழுத்த சோதனைகள் 15 முதல் 20 நிமிடங்கள் நடத்தப்பட்டது. ஆளுமை மற்றும் மனநிலையை அளவிட ஒரு நிலையான உளவியல் சோதனையும் செய்யப்பட்டது. இதுதவிர பகைமை மற்றும் நாள்பட்ட வெறுப்பு, விரோதப் போக்கு மற்றும் மனநிலையின் அளவுகள் அளவிடப்பட்டன. மேலும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள ஐந்து நிமிட உரையை வகுக்கும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மன எண் கணித பரிசோதனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் உயிரணுக்கள் பதிவு செய்யப்பட்டன. பிறகு இந்த சோதனையின் முடிவுகள் சைக்கோபிசியாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒருவரின் விரோத மனப்பான்மையால் அவர் தொடர்ச்சியான கடுமையான மன அழுத்தங்களுக்கு ஆளாவர். இது அவர்களின் சாதாரண இதய ஓட்டத்தை பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: