• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஹார்மோன் சமநிலையின்மையைக் காட்டும் அறிகுறிகள் என்ன..? பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்

ஹார்மோன் சமநிலையின்மையைக் காட்டும் அறிகுறிகள் என்ன..? பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்

ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன் சமநிலையின்மை

வாழ்வியல் மாற்றங்கள் நேரடியாக நமது உடலில் உள்ள ஹார்மோன்களை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக மனநிலை மாற்றங்கள், பசியின்மை, தலைவலி, செரிமான பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் உண்டாகும் என்கின்றனர்.

  • Share this:
இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் நமது உடல் மற்றும் மனநிலையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இவை நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் மூலமும், பிறரிடம் நடந்துகொள்ளும் முறையிலும் கண்டறியலாம். வாழ்வியல் மாற்றங்கள் நேரடியாக நமது உடலில் உள்ள ஹார்மோன்களை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக மனநிலை மாற்றங்கள், பசியின்மை, தலைவலி, செரிமான பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் உண்டாகும் என்கின்றனர்.

உடலில் செயல்திறன்களை சீரான முறையில் வைத்துக்கொள்ள ஹார்மோன் சமநிலை மிக முக்கியம். உடல் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு இரத்தத்தின் வழியாக இந்த ஹார்மோன்கள் சென்றடையும். இவை பல்வேறு உறுப்புகளின் செயல்களை நேரடியாக கவனித்து கொள்ளும். உங்களின் தூக்கத்தை நல்ல முறையில் வைக்கவும், மன நிலையை சீராக்கவும், இனப்பெருக்க சுழற்சிக்கு உதவவும் இந்த ஹார்மோன்கள் நேரடியாக வேலை செய்கின்றன.

எனவே உடலில் ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டால் பல்வேறு பாதிப்புகள் உடலில் உண்டாகும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், மாதவிடாயின் போதும், அதற்கு முன்னரும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் ஹார்மோன் சமநிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும். இதனால் சில உடல்நலம் சார்ந்த பாதிப்புகள் உருவாகும்.

உங்களின் உடலில் ஹார்மோன் சமநிலை சரியாக இல்லை என்பதை காட்டும் 8 அறிகுறிகள் :

*தூக்கமின்மை,
*தொடர்ச்சியான தலைவலி,
*மனநிலை மாற்றம்,
*மன அழுத்தம்,
*நினைவு திறன் குறைபாடு,
*பசியின்மை,
*செரிமான பிரச்சனைகள்,
*தசையின் நிறை குறைவு,
*தொடர்ச்சியான உடல் வலி போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.

இப்படிப்பட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் தொடர்ச்சியாக இருப்பதற்கு காரணம் ஹார்மோன் சமநிலை மாற்றத்தால் ஏற்படும் வீக்கங்கள் தான் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கார்டிசோல் ஹார்மோன் அளவுகள் மாறுவதால் இந்த வீக்கங்கள் உண்டாகுகின்றன. உங்கள் ஹார்மோன் அளவுகளை மீண்டும் சரியான அளவுக்கு கொண்டு வர சில வழிகளை பின்பற்ற வேண்டும்.



*அதிக மன அழுத்தம், குடும்ப உறவில் சிக்கல், சரியான நேரத்திற்கு தூங்காமல் இருத்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை நமது ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் தரம் குறைவதால் இன்சுலின் அளவில் மாறுபாடு ஏற்படுகிறது. சரியான உணவு முறையை மேற்கொள்வதால் இது போன்ற பாதிப்புகளை குறைக்க முடியும்.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா..? இந்த டெஸ்டை செய்ய முடியவில்லை எனில் 5 வருடத்தில் இறக்கும் அபாயம்..!

*தூங்கும் முன் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். மேலும் இது உடலில் மெலடோனின் ஹார்மோன் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே 7-8 மணி நேர தூக்கம் எல்லா வயதினருக்கும் மிக அவசியம்.



*அதிக மன அழுத்தம் இல்லாமல் வாழ தினமும் தியானம் செய்து வரலாம். இது உடலுக்கும் மனதுக்கும் மிக நல்லது. இத்துடன் இது உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

*தினமும் தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்; இதுவும் உங்கள் மனநிலையை சீராக வைக்க உதவும்.

மேற்சொன்ன வழிமுறைகளை தவறாது பின்பற்றி வந்தால், உங்களின் ஹார்மோன் சமநிலை சீரான அளவில் இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: