ஒரு நபரின் உடல், மன மற்றும் உணர்ச்சி நிலையில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையே ஒரு கெமிக்கல் மெஸன்ஜராக செயல்படுகிறது. ஒருவரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பல செயல்பாடுகளுக்கு தேவையான ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்கிறது நம் உடல்.
ஒருவரின் மனநிலை, எடை மற்றும் பசி ஆகியவை ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில விஷயங்கள் ஹார்மோன்கள் மற்றும் ஹார்மோன் சமநிலையை பாதிக்கின்றன. ஹார்மோன் அளவுகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு குறையலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி, சத்தான உணவை உட்கொள்ளும் பழக்கம் ஹார்மோன் ஆரோக்கியத்தை பேண மற்றும் அவற்றை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
ஹார்மோன் சமநிலையின்மை மனச்சோர்வு, பதட்டம், எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை மற்றும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. தற்போது இங்கே ஹார்மோன் சமநிலையை நிர்வகிப்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.
சத்தான உணவுகளை எடுத்து கொள்வது இயற்கை முறையில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பெரிதும் உதவும். ஒரு சமச்சீர் உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நல்ல கொழுப்புகள் சரியான விகிதத்தில் இணைக்கப்பட வேண்டும். ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்க உதவும் ஊட்டச்சத்து உணவுகள் இங்கே...
ரெயின்போ டயட்டை பின்பற்றலாம்:
எளிமையாக சொன்னால் ரெயின்போ டயட் என்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்களில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்வதை சாப்பிடுவதை உள்ளடக்கியது. தாவரங்களில் வெவ்வேறு நிறமிகள் அல்லது பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன, அவை அவற்றின் நிறத்திற்கு பொறுப்பு. வெவ்வேறு நிறமுள்ள தாவரங்கள் அதிக அளவு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த டயட் முறை நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. தினசரி டயட்டில் ஒவ்வொரு வண்ண உணவுகளையும் உட்கொள்வது அதிகபட்ச ஊட்டச்சத்தைப் பெற உதவுகிறது:
சிவப்பு: பிளம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பீட்ரூட் மற்றும் தர்பூசணி.
ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்கள்
மஞ்சள்: அவகேடோ, மஞ்சள் குடைமிளகாய்
பச்சை: பச்சை இலை காய்கள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி
நீலம்: ப்ளூபெர்ரிஸ்
ஊதா: பிளாக் கரண்ட், உலர்திராட்சை, கத்தரிக்காய்
வெள்ளை: வாழைப்பழம், காலிஃபிளவர், இஞ்சி மற்றும் மஷ்ரூம்ஸ்
ஆரோக்கிய கொழுப்புகள்:
கொழுப்பு உற்பத்தியின் போது ஹார்மோன்கள் உருவாகின்றன என்பதால் நம் உடல் சரியாக செயல்பட நல்ல அளவு ஆரோக்கிய கொழுப்புகள் தேவை. எனவே தினசரி டயட்டில் நல்ல அளவு ஆரோக்கிய கொழுப்பை பராமரிப்பது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும்.
இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி சென்றுவிட்டதா..? இந்த உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்..!
நெய்:
கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே2 ஆகியவை நெய்யில் இருப்பதால், தினசரி உணவில் நெய்யை சேர்த்து கொள்ளலாம். தவிர ஹார்மோன் உற்பத்திக்கு ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகின்றன.
நட்ஸ் & தேங்காய் எண்ணெய்:
உப்பில்லா நட்ஸ்கள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஒமேகா 3-ன் அதிக ஆதாரங்கள். ஒமேகா 3 ஹார்மோன் சமநிலைக்கு பங்களிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் எம்சிடி ஹார்மோன்களை உற்பத்தி செய்ய, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
முட்டை மஞ்சள் கரு:
மஞ்சள் கருவில் ஏ, டி, ஈ, கால்சியம், இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இயற்கையாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.
சர்க்கரையை குறைக்கவும்:
சர்க்கரை உட்கொள்ளல் ஹார்மோன்களின் செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரை அளவை குறைப்பது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
வயது ஏறினாலும் மூளையை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!
டிடாக்ஸ் பானங்கள்:
ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்க, துளசி மற்றும் டேன்டேலியன் வேர்களை உள்ளடக்கிய மூலிகை தேநீர் குடிப்பது கல்லீரலை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற உதவி ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது.
தியானம்:
யோகா, தியானம் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் ஹார்மோன் மாற்றங்களை சமநிலைப்படுத்த மற்றும் ஹார்மோன் அளவை பராமரிக்க உதவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.