உயர் ரத்த அழுத்தம் பற்றிஅதிகம் பேசப்பட்டு கொண்டே இருப்பதால் அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். ஆனால் ஹைபோடென்ஷன் என்று குறிப்பிடப்படும் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதை உணரவில்லை. இது ஒரு நபரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்த அளவை அடையும் ஒரு மருத்துவ நிலை ஆகும். தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மங்கலான பார்வை போன்ற பல அறிகுறிகளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் வழிவகுக்கிறது. சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதற்கான அறிகுறிகள் அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது மட்டுமே ஏற்படும். இது ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. கடும் குறைந்த ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு செல்வதை தடுக்கலாம்.
குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் ஏற்படும் நீரிழப்பு, கர்ப்ப காலம், இதயப் பிரச்சனைகள், பி-12 மற்றும் இரும்பு போன்ற சில அத்தியாவசிய வைட்டமின்களின் பற்றாக்குறை, திடீரென்று பயம் அல்லது அதிர்ச்சியூட்டும் நிகழ்வை அனுபவிப்பது உள்ளிட்ட பல குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களாக இருக்கின்றன.
குறைந்த ரத்த அழுத்தத்திற்கான தேர்வுகள்:
உப்பு உட்கொள்ளல்..
பொதுவாக உணவில் அதிக உப்பை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டாலும், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உப்பு உதவும். எனவே மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் உப்பு உட்கொள்ளலை தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
கீடோ டயட் பின்பற்றி வருகிறீர்களா..? இந்த பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்..!
தண்ணீர்..
அடிப்படை உடல் செயல்பாட்டிற்கு தண்ணீர் அவசியம். நாளொன்றுக்கு குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பது குறைந்த ரத்த அழுத்தத்திற்கு நல்ல தீர்வாக இருக்கும். அதே போல கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவை தேர்வு செய்து சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவும். ஓட்மீல், முழு கோதுமை ரொட்டி மற்றும் பார்லி போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்து கொள்வது நல்லது.
3 வேளை உணவுக்கு பதில்..
ஒரு நாளில் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு சாப்பிடுவதற்கு பதில் நாள் முழுவதும் சிறிது சிறிதான இடைவெளியில் 5 அல்லது 6 முறை சாப்பிடுவது குறைந்த ரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல பலன் தரும்.
அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய 5 வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்..!
வீட்டு வைத்தியம்:
ஒரு கப் பச்சை பீட்ரூட் ஜூஸை தினமும் 2 முறை குடிப்பது குறைந்த ரத்த அழுத்தத்திற்கான சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். தவிர ஒரு கப் ஸ்ட்ராங் பிளாக் காபி குடிப்பதும் உதவும். பாதாமை பேஸ்ட்டாக்கி வெதுவெதுப்பான பாலுடன் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Low Blood Pressure