முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்...

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்...

தொண்டை வலி

தொண்டை வலி

தொண்டை புண் ஏற்பட்டால் சரியாவதற்கு பல நாள்கள் எடுக்கும். இப்பாதிப்பு ஏற்படும் நேரங்களில் தொண்டை எரிச்சல், கரகரப்பு, வலி, உணவு விழுங்க முடியாமல் அவதிப்படுவது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சளி, இருமல், ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படும் தொண்டை வலியை மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை, துளசி, மிளகு போன்ற வீட்டில் உள்ள சமையல் பொருள்களின் உதவியோடு சரி செய்யலாம். இனி இப்பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமும் உங்களுக்கு ஏற்படாது.

நமக்கு சில நேரங்களில் வைரஸினால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவைக் கூட ஒரிரு நாள்களில் சரியாகிவிடும். ஆனால் a இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு இனி நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை, துளசி, மிளகு போன்ற உணவுப்பொருள்களைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்..

மஞ்சள் பால்:

தொண்டை புண்ணை சரிசெய்வதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய வைத்திய முறைகளில் ஒன்று மஞ்சள். ஒரு கிளாஸ் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சி குடிக்கும் போது தொண்டை வலிக்கு இதமாகவும் சரி செய்யவும் உதவுகிறது.

இஞ்சி டீ:

நமக்கு ஏற்படும் தொண்டை வலியை குணப்படுத்த மற்றொரு வழி டீ குடிப்பது. ஆனால் வழக்கமான டீ குடிப்பதை விட அதில் இஞ்சி சேர்த்து பருகலாம். இதனுடன் சிறிதளவு மிளகுத்தூளை நீங்கள் சேர்த்து பருகும் போது உங்களுக்குத் தொண்டை வலியை சரி செய்வதற்கு நல்ல தீர்வாக அமையும்

என்ன செய்தாலும் கருவளையங்கள் போகவில்லையா..? ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்...

துளசி சாறு:

சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது துளசி இலைகள். இதனை செடியில் இருந்து பறித்து அப்படியே சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக குடிக்கும் போது சளியை குறைக்கிறது மற்றும் தொண்டை வலிக்கு ஆறுதல் அளிக்கிறது.

எலுமிச்சை:

எலுமிச்சையில் வைட்டமின்கள் உள்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே நீங்கள் எலுமிச்சை சாறை சூடான தண்ணீரில் கலந்துக் குடிக்கலாம். உங்களது சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்ந்து பருகலாம். ஆனால் சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம்.

மிளகு – புதினா டீ :

பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப்போராட உதவுகிறது நம் உணவில் பயன்படுத்தக்கூடிய மிளகு மற்றும் புதினா. இது உணவில் சுவையை அதிகரிப்பதோடு தொண்டை வலி மற்றும் சளி போன்றவற்றைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.

உடல் பருமனுக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?- அமெரிக்க ஆய்வு கூறுவதை தெரிந்து கொள்வோம்

எனவே நீங்கள் இதனை தயார் செய்வதற்கு முதலில், ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு நன்கு கொதிக்க வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதோடு கொதிக்கும் நீரில் புதினா இலைகளை சேர்த்து உங்களது சுவைக்கு ஏற்ப உப்பு அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். மேலும் தொண்டை வலியை சரிசெய்வதற்கு சூடான நீரில் தேன் கலந்து சாப்பிடும் போது தொண்டை பிரச்சனையை சரிசெய்யலாம்.

இதோடு தொண்டை வலியைக் குணப்படுத்த உப்பு நீரில் வாய் கொப்பளிக்கலாம். இதனால் தொண்டையில் உள்ள தொற்றுகளைக் கொல்வதற்கும் உதவியாக உள்ளது. இதேப் போன்று ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் கொப்பளித்து வந்தால், தொண்டை வலியைக் குணப்படுத்துவதோடு வலியையும் குறைக்க உதவியாக உள்ளது.

First published:

Tags: Home remedies, Sore throat