தொடர்ச்சியாக வரும் வறட்டு இருமலால் இரவில் தூங்க முடியாமல் போகும். பொதுவாகவே இருமல் மிகவும் கடுமையான உபாதை. அதுவும் இரவு தூங்கும் போது வருவது தூக்கத்தையும் கெடுத்து நம் உடல் நலத்தையும் பாதிக்கும்.
இருமல் மார்பு வலி, தொண்டையில் எரிச்சல் போன்ற உபாதைகளையும் உண்டாக்கும். பல இருமல் மருந்துகளை உட்கொண்டாலும் சிலருக்கு வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்காது. காய்ச்சல் முடிந்தாலும் பல நாட்களுக்கு இருமல் குறையாது. உங்களுக்கும் இதுபோல் இருந்தால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
வறட்டு இருமலை போக்கும் வீட்டு வைத்தியங்கள் :
உங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால், தேனை பாலில் கலந்து சூடாக குடித்து வாருங்கள். இதனால் இருமல் பிரச்சனை நீங்கும்.
கருமிளகுப் பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் சில நாட்களில் இருமல் பிரச்சனையும் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு எடுத்து, அதனுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்துகொள்ளுங்கள். இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் அந்த சாறை கலந்து குடிக்கவும். இருமல் காரணமாக ஏற்படும் தொண்டை வலி மற்றும் எரிச்சலும் குறையும்.
வறட்டு இருமலில் குளிர்ந்த நீர் அருந்துவதையோ அல்லது குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதையோ தவிர்க்கவும். தேனில் உள்ள பொருட்கள் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள். வெதுவெதுப்பான நீரில் தேனை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு ஸ்பூன் இஞ்சி சாற்றில் ஒரு ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் அதிமதுரம் கலந்து இரவு தூங்கும் முன் சாப்பிடவும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை தொண்டைப்புண், வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளை சில நாட்களில் குணப்படுத்தும். இவை அனைத்தும் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகின்றன.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.