Home /News /lifestyle /

தீக்காயம் கொப்பளங்களாக மாறியதா? சரி செய்ய வீட்டு மருத்துவக் குறிப்புகள் இதோ

தீக்காயம் கொப்பளங்களாக மாறியதா? சரி செய்ய வீட்டு மருத்துவக் குறிப்புகள் இதோ

தீக்காயம் image source : medical news today

தீக்காயம் image source : medical news today

சமைக்கும்போது சூடான எண்ணெய் கையில் பட்டுவிட்டது அல்லது காஃபி குடிக்கும்போது சூடாக ஊற்றிக்கொண்டீர்கள் அது கொப்புளங்களாக மாறினால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    சமைக்கும்போது சூடான எண்ணெய் கையில் பட்டுவிட்டது அல்லது காஃபி குடிக்கும்போது சூடாக ஊற்றிக் கொண்டீர்கள், இப்படி ஏதாவதொரு வழியில் நெருப்பு உங்கள் கை, முகம், கால் என சுட்டு அது கொப்பளங்களாக மாறினால் வீட்டு மருத்துவ குறிப்புகள் மூலம் சரி செய்யலாம்.

    வீட்டில் ஏற்படும் சிறிய தீக்காயங்கள் ஆறுவதற்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும். சருமத்தில் வாழக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் அந்த காயத்தை தானாக சரிசெய்துவிடும். இருந்தாலும் விரைவில் குணமாக, தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள சில வீட்டுக்குறிப்புகளை செய்ய வேண்டும்.

    முதலில் கொப்பளங்கள் உடைந்து தண்ணீர் கசிந்தால். பருத்தித் துணி வைத்து மெதுவாகத் துடைத்து எடுங்கள். முற்றிலும் தண்ணீரை வெளியேற்றி துடைத்துவிட்டு பின் தண்ணீரில் துணியை நனைத்து சுற்றிலும் துடைத்துவிடுங்கள்.

    image source : Healthline


    அடுத்ததாக அதன் மேல் வீட்டில் தீக்காயத்திற்காக ஆண்டி பயாட்டிக் ஆயின்மெண்ட் இருந்தால் தடவுங்கள். இல்லையெனில் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது கற்றாழை சதையை தொட்டுத் தடவலாம்.

    பெண்கள் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால் எலும்புகள் பலவீனமாகுமா..?

    இதனால் அதில் மீண்டும் தண்ணீர் சேர்ந்து கொப்பளமாக மாறுவதை தடுக்கலாம். அந்தில் கிருமி தொற்றுகளும் வராது. பின் அந்த இடத்தை துணி அல்லது பேண்டேஜ் ஒட்டி மூடிவிடுங்கள். இதனால் விரைவில் தீக்க்காயம் ஆறிவிடும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி