வெளுத்துக் கட்டிய உணவால் நெஞ்சு எரிச்சலா...? இந்த வீட்டுக் குறிப்பில் இருக்கு தீர்வு..!

உணவு உண்ட பின் 30 - 40 நிமிடங்களுக்கு படுக்காமல் இருப்பது நல்லது.

news18
Updated: June 29, 2019, 11:49 AM IST
வெளுத்துக் கட்டிய உணவால் நெஞ்சு எரிச்சலா...? இந்த வீட்டுக் குறிப்பில் இருக்கு தீர்வு..!
நெஞ்சு எரிச்சல்
news18
Updated: June 29, 2019, 11:49 AM IST
அசிடிட்டி ( Acidity) என்று சொல்லக் கூடிய நெஞ்சு எரிச்சல் எல்லோருக்கும் ஏற்படக் கூடிய பொதுவான பிரச்னைதான். மிகவும் காரமான அல்லது எண்ணெய் உணவை அதிகமாக சாப்பிட்டால் அதன் விளைவு இந்த அசிடிட்டிதான். குறிப்பாக பீட்ஸா, வறுத்த உணவுகள், ஜங் ஃபுட் போன்றவற்றை உண்டாலும் இந்த பிரச்னை வரும்.

அதிகமான கஃபைன் உட்கொள்வது, சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்வது, சரியாக தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களாலும் இந்த பிரச்னை வரும். மேலே குறிப்பிட்டவற்றை சரியாக செய்யாத போது உடலின் pH அளவை சமநிலையின்மையாக்கி, வயிறு சுரக்கும் அமிலத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால்தான் இந்த பிரச்னை உண்டாகிறது.

ஒருவேளை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த பிரச்னையை அனுபவிக்கிறீர்கள் எனில் அசிடிட்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.


நம் ஊரில் அசிடிட்டி என்றாலே உடனே முன்னோர்கள் கற்றுக்கொடுத்த வீட்டுக் குறிப்புகள்தான் மருத்துவம். இதற்காக மருத்துவரையெல்லாம் பார்க்க மாட்டோம். அதை செய்தால் உடனே நெஞ்சு எரிச்சலும் சரியாகிவிடும். அப்படி என்னதான் செய்தார்கள் முன்னோர்கள்..?மசாலாப் பொருட்கள் : சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்றவை பல வகையான உடல் உபாதைகளுக்கு உதவும். நெஞ்சு எரிச்சலுக்கு ஏலக்காய், பட்டை , கிராம்பை என ஏதாவது ஒன்றை அப்படியே வாயில் மென்று விழுங்கலாம். இல்லையெனில் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம்.

Loading...

சோம்பு : சோம்பு பிரியாணி சாப்பிட்டாலே மென்று விழுங்குவோம். அப்படி வீட்டிலோ , வெளியிலோ அதிகமாக உண்டதால் ஏற்பட்ட நெஞ்சு எரிச்சலை தவிர்க்க ஒரு ஸ்பூன் சோம்பை மென்று விழுங்கினால் எரிச்சல் குறையும்.

இஞ்சி : இஞ்சி பாரம்பரிய மருத்துவம். இதை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம் அல்லது அப்படியே மென்று விழுங்கலாம்.நெல்லிக்காய் , கற்றாழை : பெரிய நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். அதேபோல் கற்றாழை சதையை நீக்கி ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

குறிப்பு : உணவு உண்ட பின் உடனே படுப்பதை தவிர்க்கவும். படுப்பது நெஞ்சு எரிசலை உண்டாக்கும். குறைந்தது 30 - 40 நிமிடங்களுக்கு படுக்காமல் இருப்பது நல்லது.

கார்பனேட், கியாஸ் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். இது pH அளவை சீர்குலைக்கும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உண்பதை, ஜூஸாக அருந்துவதை தவிர்க்கவும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...