ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

2030ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க ஐநா சபையின் திட்டம் இதுதான்...

2030ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்க ஐநா சபையின் திட்டம் இதுதான்...

எய்ட்ஸ்

எய்ட்ஸ்

கொரோனா தொற்றின் காரணமாக இந்த இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பானது, விளிம்பு நிலை மக்களுக்கே உண்டாகுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலக அளவில் குணப்படுத்த முடியாத கொடிய நோய்கள் பல உள்ளன. அந்த வகையில் எய்ட்ஸ் தொற்றை சேர்த்து கொள்ளலாம். பாதுகாப்பற்ற பாலியல் உறவால் இந்த நோய் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும். இதற்காக தான் ஆணுறை, பெண்ணுறை என்று உடலுறவை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள சில பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. இதை பயன்படுத்தாத பட்சத்தில் எய்ட்ஸ் போன்ற பாலியல் தொடர்பான நோய்கள் நமக்கு ஏற்படக்கூடும்.

ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த டிசம்பர் 1ம் தேதியை தேர்வு செய்துள்ளனர். உலகளவில் இந்த நோயை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் கூட்டு திட்டத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த கொரோனா பெருந்தொற்று காலங்களில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவது சற்றே சவாலான விஷயமாக உள்ளது.

இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 2025 ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் தொற்று இல்லாத சமூகமாக இந்த உலகை மாற்ற வேண்டும் என்பதற்காக UNAIDS என்கிற திட்டத்தை ஐநா கூட்டு திட்டத்தின் மூலம் கொண்டு வந்தது. இந்த இலக்கை அடைய 95% எய்ட்ஸ் நோய்க்கான சேவைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3,70,000-க்கும் குறைவான எண்ணிக்கையில் எய்ட்ஸ் தொற்றை கொண்டு வர வேண்டும் மற்றும் இதன் இறப்பு எண்ணிக்கையை 2,50,000-க்கும் குறைவாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக இந்த இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பானது, விளிம்பு நிலை மக்களுக்கே உண்டாகுகிறது. பாதுகாப்பற்ற பாலியல் உறவு மட்டுமன்றி, மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது ஊசிகளை மாற்றாமல் ஒருவர் பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்துவதாலும் எய்ட்ஸ் நோய் வருகிறது.

64% இந்தியர்கள் போதுமான அளவு தூங்குவதில்லை - இதுகுறித்து மருத்துவர்கள் கூறுவதென்ன?

குறிப்பாக அதிக மக்கள் தொகை நாடுகளில் எய்ட்ஸ் தொற்றின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் முயற்சியானது கொரோனாவால் பின்னடைவை கண்டுள்ளது. ஆனால், கொரோனாவிற்கு நாம் பின்பற்றி வந்த கட்டுப்பாடுகளை, எய்ட்ஸ் நோய் தொற்றிலும் பின்பற்றி வந்தால் இதன் தொற்று விகிதத்தை நம்மால் குறைக்க முடியும்.

தற்போதுள்ள கொரோனா கால நிலையானது, கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கும், சமத்துவமின்மைக்கு முடிவுகட்டவும், எய்ட்ஸ் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய மற்றும் தொற்றுநோய்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரு விரிவான உலகளாவிய கட்டமைப்பிற்கு தேவையான தலைமை மற்றும் முதலீட்டை உருவாக்குவதற்கும் ஏற்ற முகாந்திரம் இல்லாத சூழலாகும்.

2019 ஆம் ஆண்டில் இருந்த அதே அளவிலான நடவடிக்கைகளை மட்டும் 2021 முதல் 2030 ஆம் ஆண்டு வரை பின்பற்றி வந்தால் உலகளவில் சுமார் 7.7 மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்க கூடும் என்று UNAIDS திட்டத்தில் கீழ் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இந்த திட்டத்தின்படி ஏற்கனவே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 2025 ஆம் ஆண்டில் இதன் இலக்கை எட்டி விடலாம். அதாவது 4.6 மில்லியன் மக்கள் உயிர்களை காப்பாற்றி விட முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: HIV