டீன் ஏஜ் பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சமூக வலைதளங்கள்!

சமூக வலைதலங்களில் போடப்படும் ஸ்டேட்டஸ்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் வரவில்லை எனில் அதிக மன உளைச்சளுக்கு உள்ளாகின்றனர்.

டீன் ஏஜ் பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சமூக வலைதளங்கள்!
சமூக வலைதலங்களில் போடப்படும் ஸ்டேட்டஸ்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் வரவில்லை எனில் அதிக மன உளைச்சளுக்கு உள்ளாகின்றனர்.
  • News18
  • Last Updated: January 7, 2019, 9:08 AM IST
  • Share this:
டீன் ஏஜ் பெண்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் ஆண்களைக் காட்டிலும் மிகுந்த மன அழுத்ததிற்கு உள்ளாவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும்  எந்த விஷயங்காளிலும் ஈடுபாடு இல்லாமல் மந்தமாக இருப்பதற்கும் சமூக வலைதளங்களில் அவர்கள் காட்டும் ஈடுபாடே காரணம் என்கிறது அந்த ஆய்வு. 

லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வோன் கெள்ளி தலமையில்  14 வயதிற்கு உட்பட்ட 11,000 டீன் ஏஜ் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது இக்ளினிகல் மெடிசன் (Eclinical medicine) என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில், தி மில்லெனியம் கோஹோர் ஆய்வு நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இது  சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்காணித்து ஆய்வு நடத்தும் நிறுவனமாகும். அந்த ஆய்வில் ஆண்களைக் காட்டிலும் 40சதவீத பெண்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவடுவதாகவும், இதனால் மன அழுத்தத்தைப் பிரதிபளிக்கும் இமோஜி குறியீடுகளை தங்கள் ஸ்டேடஸ்களில் அதிகம் பகிர்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த ஆய்வினை நடத்திய கெல்லி இது குறித்து கூறிய போது “மன அழுத்தம் மற்றும் அதற்கான அறிகுறிகள் டீன் ஏஜ் ஆண்களைக் காட்டிலும் டீன் ஏஜ் பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. தினமும் அவர்கள் பல மணி நேரம் சமூக வலைதளங்களில் இருப்பதால் படிப்படியாக அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது” என்கிறார்.

மேலும் அந்த ஆய்வில், சமூக வலைதங்கள் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடம் தூக்கமின்மையானது அதிகமாகக் காணப்படுகிறது.இதனால் படிப்பில் கவனச் சிதறல், மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கிறது. ஆய்வில் 40சதவீதச் டீன் ஏஜ் பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இது ஆண்களைக் காட்டிலும் 28 சதவீதம் குறைவாக இருக்கிறது.மேலும் அவர்கள் தங்கள் செல்ஃபோன்களை படுக்கைக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்கின்றனர். இதனால்  வலைதளங்களிலிருந்து வரும் நோட்டிஃபிகேஷன்களால் உடனே எழுந்து பார்க்கத் தூண்டுகிறது.

பார்ப்பது மட்டுமன்றி எந்த நேரமாக இருந்தாலும் அதற்கு கருத்து பகிவதும், ஸ்டேடஸ் போடுவதாலும்  அவர்களின் தூக்கம் தடைபடுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதலங்களில் போடப்படும் ஸ்டேட்டஸ்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் வரவில்லை எனில் அதிக மன உளைச்சளுக்கு உள்ளாகின்றனர். அதேபோல் தங்களின் புகைப்படங்களைப் போட்டு அதற்கான கமெண்டுகள் மற்றும் கருத்துக்களாலும் மன உளைச்சளுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனால் தாங்கள் அழகாக இல்லையோ என்கிற வருத்தமும் அதிகமாவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனான் தன்னம்பிக்கை இன்றி சோர்வுடனும் எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகவும் கூறியிருகின்றனர்.

இதுபோன்ற அறிகுறிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக்குத்தான் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மன அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தற்கொலை முயற்சிகளுக்குத் தூண்டுவதாகவும் ஆய்வில் கூறுகின்றனர்.

Also See...

First published: January 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்