• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புதிய அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் 2-வது அலை - முதல் அலையில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது

புதிய அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் 2-வது அலை - முதல் அலையில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் கூட முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இடையில் சற்று ஓய்ந்து தற்போது படிப்படியாக மீண்டும் வேகமெடுத்து வருகிறது. சமீப நாட்களில் ஒருநாள் பாதிப்பு மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூட முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்று வழக்குகள் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை மோசமாக இருக்குமோ என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் மெத்தன போக்கு மற்றும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் உள்ளிட்டவை கவலைகளை அதிகரித்த நிலையில், வைரஸ் தொற்றானது அறிகுறிகளை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அசாதாரண அறிகுறிகளிலிருந்து தீவிரமாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது வரை தற்போது உள்ள பாதிப்பு வழக்குகளை கையாள்வதில் மருத்துவத்துறை கடுமையாக போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையானது, முதல் அலையை விட மிகவும் வித்தியாசமானது என்பதற்கான சான்றாக உள்ளது.

பிரேசிலிய மற்றும் கென்ட் வகைகள் உட்பட உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் வலிமையானவை மற்றும் அதிக அறிகுறிகளை ஏற்படுத்தும். முக்கிய உறுப்புகளை மிகவும் ஆழமாக தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. தவிர இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளிவந்த தற்போதைய ஆய்வின்படி, வைரஸ் தோற்று பாசிட்டிவ் என முடிவு வரும் நபர்கள் இப்போது கூடவே பல வைரஸ் அறிகுறிகளால் பாதிக்கப்படுவதும் தெரிய வருகிறது. தற்போது நோயாளிகள் வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் சளி உள்ளிட்ட வைரஸின் அசாதாரண அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளில் அதிகமாகக் காணப்படும் பிற அறிகுறிகள் மூட்டு வலி, இரைப்பை குடல் சிக்கல்கள், பலவீனம் மற்றும் பசியின்மை ஆகியவையும் அடங்கும். சமீபத்திய மாதங்களில் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைத் தாக்கிய கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை நோய்த்தொற்றின் போது அசாதாரண அறிகுறிகள் மற்றும் ஒரு கோவிட்-காய்ச்சல் அல்லது இருமல் தவிர தெளிவற்ற அறிகுறிகளை கண்டறிவதும் முன்னிலைப்படுத்தப்பட்டது. பெரும்பாலானதொற்று வழக்குகள் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறி கொண்டவையாக இருக்கலாம்.

இருப்பினும் மருத்துவர்களின் எச்சரிக்கப்படி தற்போது வைரஸ் அதன் போக்கை மாற்றி, உடலில் மிகவும் ஆபத்தான தாக்குதலை தொடங்குவதால், தொற்று நோய்களின் தீவிரமும் இப்போது காணப்படுகிறது. சரியான நேரத்தில் நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்படும். சமீப காலமாக நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புகளில் பல இரைப்பை குடல் புகார்கள் பதிவாவதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

முதல் அலையின் போது இரைப்பை குடல் அறிகுறிகள் காணப்படவில்லை என்றாலும், உடலின் செரிமான அமைப்பில் இருக்கும் ACE2 entry receptors அதிக சுமைக்கு வைரஸ் தன்னை வலுவாக இணைத்து கொண்டு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், குமட்டல், வலி மற்றும் வாந்திபோன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

Also read... கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்பது எது? ஆய்வில் புதிய தகவல்!

அதிக தொற்று மற்றும் தொற்று ஆகியவை முக்கிய உறுப்புகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் அறிகுறிகளை ஏற்படுத்தும். இதனால், மக்கள் மிகவும் கவனமாக இருக்கவும் பின்னர் பிரச்சினைகளைத் தடுக்க தொற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைப் பார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இரண்டாம் அலையில் இருக்கும் உருமாறிய தொற்று வைரஸ் முக்கிய உறுப்புகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என்பதால் மக்களை கவனமுடன் இருக்க மருத்துவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த வைரஸ் வயதானவர்களுக்கும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் மிகவும் ஆபத்துகளை ஏற்படுத்தும். இருப்பினும் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதாலும் முன்பு போல் இல்லாமல் , தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதால் இளைஞர்களும் தொற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் உருமாறிய வைரஸிற்கு எதிராக வேலை செய்வது குறித்த கவலைகள் உள்ளன. ஏனெனில் அவை முன் இருந்த வைரசை விட தீவிரம் என்பதால் தடுப்பூசி மூலம் உடலில் உருவான ஆன்டிபாடிகளை எளிதில் வீழ்த்தி தொற்றுநோயை பரப்ப கூடும் என்றும் கவலை எழுந்துள்ளது.

இறப்பு மற்றும் நீண்டகோவிட் சிக்கல்களைக் குறைக்க தடுப்பூசிகளால் முடியும் என்பதற்கு வலுவான மருத்துவ ஆதாரம் இருப்பதால், வைரஸ் அறிகுறி அபாயத்தையும் குறைக்க மக்கள் தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசிகள் ஒருபக்கம் இருந்தாலும் 100 சதவீதம் பலனளிக்காது என்பதை கருத்தில் கொண்டு தடுப்பு மருந்து எடுத்தாலும் மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஏனென்றால் வைரஸை கட்டுப்படுத்துவது இப்போதும் மக்களாகிய நம் கைகளில் தான் உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: