கர்ப்பம் தரித்தல் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கக்கூடிய அற்புத தருணம் மற்றும் கடவுள் கொடுத்த வரம் என்பார்கள் பலர். பெண்களால் மட்டும் அனுபவித்து மகிழக்கூடிய கர்ப்ப காலங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தளவிற்கு மனதிற்கு இன்பத்தை மட்டுமே அள்ளிக்கொடுக்கும். ஆனால் இன்றைக்கு கர்ப்பமாகுதல் என்பதே பல பெண்களுக்கு கிடைக்காத ஒரு வரமாகிவிட்டது.
ஒருவேளை கர்ப்பம் தரித்தாலும் பல உடல் நலப்பிரச்சனைகளால் கர்ப்ப காலங்களில் ஆபத்தான நிலையை அடையும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் சுமார் 20 – 30 சதவீத பெண்கள் அதிக ஆபத்துள்ள கர்ப்பத்தை எதிர்கொள்கின்றனர்.
அதிக ஆபத்துள்ள இந்த கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் மட்டுமில்லை, வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாம் அனைவரும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது? குறித்து விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
ஆபத்தான கர்ப்பம் யாருக்கு அதிகம் ஏற்படும்..?
இன்றைக்கு மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள்தான் பெரும்பாலான உடல் நலப்பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாக புகை பிடித்தல், அதிக எடை, பல முறை கர்ப்பம் தரித்தல், வயது 35 அல்லது 18க்கும் குறைவாக இருத்தல் போன்றவை அதிக ஆபத்துள்ள கர்ப்பத்திற்கு காரணமாக அமைகிறது. இதோடு மட்டுமின்றி உயர் இரத்த அழுத்தம், தைராய்டு கோளாறு, இரத்தக்கோளாறுகள், நீரிழிவு நோய், ஆஸ்துமா, வலிப்பு நோய், புற்றுநோய், எடை இழப்பு அறுவை சிகிச்சை, முந்தைய கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், முன் – எக்லாம்ப்சியா, கர்ப்ப கால சர்க்கரை நோய், குழந்தைகளின் வளர்ச்சியில் சிக்கல்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஆபத்தான கர்ப்பகாலங்களாக அமைகிறது.
மேற்கூறிய ஆபத்து காரணிகளில் ஏதேனும் இருந்தால், உங்கள் கர்ப்பம் அதிக ஆபத்தை உண்டாக்குகிறது. எனவே இதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது, இல்லையென்றால் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆபத்துள்ள கர்ப்பத்தைத் தடுக்க செய்ய வேண்டியது என்ன?
ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள கர்ப்ப திட்டமிடல் செயல்பாடுகளில் ஒன்று, மகப்பேறியல் நிபுணருடன் முன்கூட்டிய ஆலோசனையைக் கருத்தில் கொள்வது. இவ்வாறு நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறும் போது உங்களைப் பற்றியும், உங்களது குடும்பத்தைப் பற்றியும் கேட்டறியும் போது, மரபணு ரீதியாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என கண்டறிந்துவிடுவார்கள். இதுப்போன்ற நிலை உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உடனடியாக நீங்கள் மருத்துவர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக கருவுறுதலுக்கு முன்பும், கருவுறுதலுக்கு பின்னதாகவும் பெண்களுக்கு போலிக் அமிலம் அதிகம் தேவைப்படும். எனவே மருத்துவர்களின் அறிவுரைகளின் படி மாத்திரைகளை சாப்பிடலாம் அல்லது ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கருவுறுதலை எதிர்நோக்கும் காலத்தில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
ஆபத்தான கர்ப்பத்தைத் தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?
குழந்தைகள் கருவில் இருக்கும் ஆரம்ப காலக் கட்டத்திலேயே அவர்களின் உடல் நலம் குறித்து முழுமையாக சிறப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வகை பரிசோதனையில் குழந்தையின் உருவங்களை உருவாக்க உயர் அதிர்வெண் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் ஒரு இமேஜிங் தொழில்நுட்பம் அசாதாரண வளர்ச்சி போன்ற சந்தேகத்துக்குிய சிக்கலைக் கவனிக்க உதவுகிறது.
மகப்பேறுக்கு முந்தைய உயிரணு இல்லாத டிஎன்ஏ ஸ்கிரீனிங் என்பது ஒரு வகை டிஎன்ஏ சோதனையாகும். இது கருவில் உள்ள குரோமோசோமால் எதுவும் பாதிப்பு இருப்பதாக என கண்டறிய முடியும். சிறுநீர் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, யுடிஐ, எச்ஐவி போன்ற ஆய்வக சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கருப்பை வாய் நீளத்தை அளவிடுதல்: குழந்தையின் கர்ப்பப்பை வாய் நீளத்தை அளவிட அல்ட்ராசவுண்ட் செய்ய உங்கள் மகளிர் மருத்துவ நிபுணர் உங்களைக் கேட்கலாம். நீங்கள் குறைப்பிரசவத்திற்கு ஆளாகிறீர்களா இல்லையா என்பதை அறிய இந்த ஸ்கேன் உதவுகிறது.
அதிக ஆபத்துள்ள கர்ப்பகால சிகிச்சைகள் என்னென்ன?
ஒவ்வொரு விஷயத்திலும் ஹைரிஸ்க் கர்ப்ப சிகிச்சை மாறுபடும். எனவே நோயாளிகளின் சுகாதார நிலை, என்னெ்ன பிரச்சனைகளை அவர்கள் கொண்டுள்ளார்? என்பது குறித்த அறிந்துக்கொண்டு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலே, ஆரம்ப கட்டங்களிலே பெரும்பாலான சிக்கல்களுக்குத் திறம்பட சிகிச்சையளிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
Also Read : கர்ப்ப காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் எடை கூடுமா..? குழந்தை பிறப்பதில் சிக்கல் வருமா.?
குறிப்பாக யோனி இரத்தப்போக்கு, சிறுநீர் கழிக்கும் போது வலி, வாந்தி அல்லது குமட்டல், பார்வை மங்கலானது, அதிகப்படியான வெள்ளை வெளியேற்றம், காய்ச்சல் அல்லது குளிர், கைகள் மற்றும் முகத்தில் திடீர் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.