• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆர்கானிக் உணவு பொருட்களை நோக்கி நகரும் மக்கள் : என்ன காரணம்..?

ஆர்கானிக் உணவு பொருட்களை நோக்கி நகரும் மக்கள் : என்ன காரணம்..?

ஆர்கானிக் உணவுகள்

ஆர்கானிக் உணவுகள்

பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து பயிர் வேகமாக வளர்வதற்கு விளைச்சல் பெருக்கிகள் என பல வகைகளிலும் கெமிக்கல் கலந்த பயிர்களால் செய்யப்படும் உனவுகளையே நாம் சாப்பிட்டு வருகிறோம்.

  • Share this:
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று பயிர்களிலிருந்து கிடைப்பவை மற்றொன்று கால்நடைகளிலிருந்து கிடைப்பவை. எல்லாமே அவசரகதியாகிவிட்ட நவீன காலகட்டத்தில் பல காரணங்களால் விவசாய நடைமுறைகளில் ரசாயனம் தவறாமல் இடம்பிடித்து விட்டது. பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து பயிர் வேகமாக வளர்வதற்கு விளைச்சல் பெருக்கிகள் என பல வகைகளிலும் கெமிக்கல் கலந்த பயிர்களால் செய்யப்படும் உனவுகளையே நாம் சாப்பிட்டு வருகிறோம்.

அதே போல பால் பொருட்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது. இதக்கேற்றார் போல வெள்ளை அமிர்தம் என்று அழைக்கப்படும் பாலை அதிக அளவில் உற்பத்தி செய்ய மற்றும் அதிக லாபம் பார்க்க கால்நடைகளுக்கு ஹார்மோன் ஊசி, ரசாயன தீவனங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட காலத்தில் வாழ்வதால் ஆர்கானிக் முறைக்கு செல்ல அவசியம் ஏற்பட்டுள்ளது. 'ஆர்கானிக்' என்றால் 'இயற்கையானது' என்று பொருள். ஆர்கானிக் பொருட்களை வாங்குவதற்கும், பூமியை பாதுகாப்பதற்கும் இடையே உள்ள புள்ளிகளை இணைப்பதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.ரசாயனங்கள் இல்லாமல் இருக்கும் :

ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் உணவு பொருட்கள் ரசாயனங்கள் இன்றி முழுவதும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை. ஆர்கானிக் அல்லது மீளுருவாக்கம்(regenerative) முறையில் செய்யப்படும் விவசாயத்தில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. ‘மண்ணின்’ புனிதத்தையும், பூமியையும் பாதுகாக்க இது நேரடியாக உதவுகிறது.

எளிமையாக சொன்னால் மீளுருவாக்க விவசாய நடைமுறைகள் பல்லுயிரியலை மேம்படுத்துகின்றன. மண்ணின் ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்கின்றன மற்றும் கார்பன் கால்தடங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டவை. எனவே அதிக ஆர்கானிக் உணவை தாராளமாக வாங்கலாம். ஆனால் அதற்கு முன் ஆர்கானிக் பொருளை விற்கும் நிறுவனம் முறையான சான்றிதழ் பெற்றிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்தியா ஆர்கானிக், ஐரோப்பிய ஒன்றிய ஆர்கானிக் அல்லது யு.எஸ்.டி.ஏ ஆர்கானிக் இவற்றின் முத்திரை லேபிள்கள் இருப்பதை சரிபார்க்க வேண்டும்.

கோடையில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை சமாளிக்க வெள்ளை வெங்காயம் எப்படி உதவுகிறது தெரியுமா?

ஆரோக்கிய பராமரிப்புக்கு உதவும்..

அனைத்து சத்தான உணவுகளும் ஆர்கனிக்காக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அனைத்து ஆர்கானிக் உணவுகளும் பெரும்பாலும் சத்தானதாக இருக்கும். இதிலிருந்தே நீங்கள் ஆர்கானிக் உணவுகளின் மகத்துவத்தை உணரலாம். நீங்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, ரசாயனங்கள் கலக்காத பிரெஷ்ஷான உணவுகளை சாப்பிடும் போது, நோய்களுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு குறைவு, முன்பை விட அதிகமாக சுகாதார தேவை பற்றி அறிந்திருப்பதும் ஆர்கானிக் பொருட்களை வாங்க ஒரு முக்கிய காரணம்.ஃபார்ம்-டு-டேபிள் ஃபிலாசபி..

ஆர்கானிக் உணவு தேர்வுகள் ஃபார்ம்-டு-டேபிள் (‘FARM-TO-TABLE’) ஃபிலாசபியை ஊக்குவிக்கின்றன. உற்பத்தியாகி வரும் வழியில் ஒரு கடை, சந்தை அல்லது விநியோகஸ்தர் வழியே செல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்கும் முறை இதில் ஊக்குவிக்கப்படுகிறது. சிறிய உள்ளூர் விவசாயி மற்றும் நுகர்வோர் மட்டுமே இம்முறையில் பங்குபெறுகின்றனர். உண்மையில், இந்த கருத்து விவசாயி, நிலம், நிறுவனம் மற்றும் நுகர்வோர் ஆகியோரை பங்குதாரர்களாக எடுத்து, பூமியின் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

நியூ ஏஜ் பேக்கிங்:

பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது மற்றும் கண்ணாடி பாட்டில்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம், ப்ளீச் இல்லாத பேக்கிங் பொருள் மற்றும் பலவற்றைத் தேர்ந்தெடுப்பது நியூ ஏஜ் பேக்கிங். பல ஆர்கானிக் பொருட்கள் இது போன்ற பேக்கிங்கில் விற்கப்படுகின்றன. இயற்கையாக சிதையாத பிளாஸ்டிக் பேக்கிங்கில் விற்கும் உணவு பொருட்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதோடு, அவற்றின் பிளாஸ்டிக் கவர்கள் மண்ணை மலட்டுத்தன்மையாகி விடுகின்றன. மேலும் பிளாஸ்டிக் கடல் உயிரினங்களை அழிக்கிறது. எனவே நெய் மற்றும் எண்ணெய் முதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் தேநீர் வரை உங்கள் வீட்டுத் தேவைகளுக்கு ஆர்கானிக் பேக்கேஜிங் செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்து மண்ணிற்கு நன்மை செய்யலாம்.ஆர்கானிக் சான்றிதழ் சட்டங்கள்:

ஆர்கானிக் ஒழுங்குமுறை சான்றிதழ் அதன் தரத்தை உறுதிப்படுத்துதல், மோசடியை தடுப்பது, வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்கானிக் பொருட்களுக்கான உலகளாவிய தேவையை நிவர்த்தி செய்ய கூடிய இந்த கட்டாய சான்றிதழ் முறை, விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தங்கள் தயாரிப்புகளை சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக்காக வைத்திருக்க பல ஆர்கானிக் சட்டங்களை பின்பற்ற வேண்டும். இந்த சான்றிதழ் முறைகள் பெறவும் மற்றும் நிலத்தை ஆர்கனிக்காக அறிவிக்கவும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தேவைப்படும். இப்படிப்பட்ட கடுமையான ஆர்கானிக் சட்டங்களைப் பின்பற்றும் ஆர்கானிக் வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு புதிய அர்த்தத்தை அளிக்கிறது.

காலநிலைமாற்றம்:

புவி வெப்பமடைதலுக்கு செயற்கை முறை விவசாயம் மிகப்பெரிய காரணமாக உள்ளது. இயற்கை முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் உணவுகள், போக்குவரத்து மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுகின்றன. மேலும் உலக வெப்பநிலையின் விரைவான சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: