உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு உடலில் அதிக அளவிலான கொழுப்பு சேர்ந்திருக்கும் பிரச்சினை உள்ளது. அதிக அளவிலான கொழுப்பு உடலில் சேரும்போது அது பல்வேறு வித உடல் உபாதைகளை உண்டாக்குகிறது.
சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, ஒரு மனிதனின் உடலில் அதிக கொழுப்புகள் சேரும்போது அவை ரத்த நாளங்களின் வழியாக ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளினால் உடலில் அதிக கொழுப்பு சேருகிறது..
இதில் மிகப்பெரிய அபாயம் என்னவெனில் இவை உடலில் சேர சேர உடனடியாக எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. படிப்படியாக உடலில் சேரும் இந்த கொழுப்பு குறிப்பிட்ட காலத்தில் திடீரென உடலில் பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அதிக அளவில் உண்டாக்குகிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உண்டாகக்கூடிய முக்கியமான ஐந்து நோய்களைப் பற்றி பார்ப்போம்.
கொரோனரி ஹார்ட் டிசிஸ்
உடலில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக் உருவாக்கத்தினால் இந்த வியாதி உண்டாகிறது. இந்த ரத்த நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்கின்றன. மேலும் நாளடைவில் இந்த ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தை சிரமமாக்குகின்றன. இதன் காரணமாக ரத்தத்தின் வழியாக ஆக்ஸிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.
அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனரி ஆட்டரி டிசிஸ், நான் அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனறி ஆர்டரி டிசீஸ், ஸ்பான்டேனியஸ் கொரோனரி ஆட்டரி டைசெக்ஷன் ஆகியவை இந்த நோயின் வகைகள் ஆகும்.
மாரடைப்பு
உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது, அவை ரத்தம் பாய்வதை தடை செய்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களின் வழியே போதுமான அளவு ரத்தம் கடத்தப்படாத நிலையில் அங்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது.
Also Read : இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... வாய் விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!
பெரிபெரல் ஆர்டேரியல் டிசீஸ்
பிஏடி எனப்படும் இந்த நோய் அதிகப்படியான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிவதால் ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி செய்கிறது. முக்கியமாக உடலின் கீழ்பாகத்தில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கால்கள், பாதம், மூட்டுகள் ஆகிய இடங்களில் குறைந்த அளவு ரத்தம் பாய்வதோ அல்லது மொத்தமாக ரத்தம் பாய்வதை தடை செய்வதும் நிகழ்கிறது.
கால்களில் உணர்வற்று இருப்பதும், கால்களில் உள்ள சருமத்தின் நிறம் மாறுவதும், நகங்கள் மிக மெதுவாக வளர்வதும் காலில் காயம் ஏற்பட்டால் அவை ஆறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
பக்கவாதம்
இதயத்தை சுற்றியுள்ள ரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்புகள் படிவதால் போதுமான அளவு ரத்தம் இதயத்திற்கு கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. மேலும் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் அடைப்பை ஏற்படுத்தி மூளைக்கு போதுமான அளவு ரத்தம் கடத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம் உண்டாகிறது.
விறைப்பு குறைபாடு
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு குறைபாடு பல்வேறு வித காரணங்களினால் ஏற்படுகிறது. முக்கியமாக அத்தேரோ செலரோசிஸ் எனப்படும் பாதிப்பால் விறைப்பு குறைபாடு அதிகம் உண்டாகிறது. இதற்கும் முக்கிய காரணம் உடலில் அதிக அளவு கொழுப்பு சேருவது ஆகும். உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புகள் மிக அதிக அளவில் சேரும் போது இந்த விறைப்பு குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
எவ்வாறு தற்காத்துக் கொள்வது?
முறையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் சோடியம் குறைவாக இருக்கும் படியும் அதிக கொழுப்புகள் இல்லாத உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறைச்சிகளை உண்பதற்கு பதிலாக காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதுடன் அதிகளவு கொழுப்பு சேர்வதையும் தவிர்க்க முடியும்.
தினசரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையை பேணிக்காப்பது ஆகியவை முக்கியமானவை. இவற்றைத் தவிர
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cholesterol