நவீன கால வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள், தூக்க சுழற்சியில் ஏற்படும் நீண்டகால தொந்தரவு உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவுகளும் ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்களுக்கான அபாயத்தை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது நமது உடலால் தயாரிக்கப்படும் இயற்கையான ஒன்றாகும். இது நம் உடலில் உள்ள செல்களில் காணப்படும் கொழுப்பு போன்ற ஒரு பொருளாகும்.
உடல் ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் அதுவே கொலஸ்ட்ரால் அளவு அளவுக்கு மீறி அதிகமாக இருக்கும் போது அது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. நமது ரத்த ஓட்டத்தில் உள்ள பெரும்பாலான கொலஸ்ட்ரால் அதாவது சுமார் 75% கொலஸ்ட்ராலை நமது கல்லீரலால் உற்பத்தி செய்கிறது, மீதமுள்ள 25% கொலஸ்ட்ரால் நாம் உண்ணும் உணவுகளில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.
உணவுகளை பொறுத்த வரை இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற சில உணவுகளில் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. உயர் ரத்த கொழுப்பு அளவுகள் (elevated blood cholesterol levels ) நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை அனைவரும் அறிவோம். சரியான அளவு கொலஸ்ட்ரால் உண்மையில் உயிரணு சவ்வுகளை (cell membrane) பராமரிப்பதிலும், ஹார்மோன்களை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது உடல் சரியாக செயல்பட கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. பெரியவர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் அதிக கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நமது உடல் சரியாக வேலை செய்ய கொஞ்சம் கொலஸ்ட்ரால் இருந்தால் போதுமானது. ஆனால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள்..
பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எந்த அறிகுறிகளையும் காட்டாது. மேலும் நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாது. கொலஸ்ட்ராலின் அதிகரித்த அளவு பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம் அல்லது தமனிகளை கடினப்படுத்தலாம். அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளில் ஏற்படும் இந்த பாதிப்புகள் தமனிகள் வழியே செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடும் உடல்நல கோளாறுகள் ஏற்படும்.
நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த டாப் 10 உணவுகள்... இதில் தினம் ஒன்று சாப்பிடுங்கள்...
கொலஸ்ட்ரால் அளவை அளவிடுவது எப்படி..?
லிப்போபுரோட்டீன் பேனல் எனப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கொலஸ்ட்ராலின் அளவை அளவிட முடியும். இந்த சோதனைக்கு முன் 9 முதல் 12 மணி நேரம் தண்ணீரைத் தவிர வேறு உணவுகள் எதையும் சாப்பிடாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
டோட்டல் கொலஸ்ட்ரால் (Total cholesterol):
டோட்டல் கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலின்ன் அளவீடு ஆகும். இது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL - low-density lipoprotein) கொழுப்பு மற்றும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL - high-density lipoprotein) கொழுப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
எல்.டி.எல் கொலஸ்ட்ரால் (LDL cholesterol):
இது கெட்ட கொழுப்பு என்று குறிப்பிடப்ப்படுகிறது. இந்த வகை கொலஸ்ட்ரால், தமனிகளில் கொலஸ்ட்ரால் கட்டி மற்றும் அடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஹெச்.டிஎல் கொலஸ்ட்ரால் (HDL cholesterol):
இது பொதுவாக நல்ல கொழுப்பு என்று குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் இந்த வகை கொலஸ்ட்ரால் நம் தமனிகளில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது.
உடலுக்கு அத்தியாவசியமான நல்ல கொலஸ்டிரால் பற்றி தெரியுமா..? எந்த உணவில் கிடைக்கிறது..?
ஹெச்.டிஎல் அல்லாதது (Non HDL):
பெயர் குறிப்பிடுவது போல, HDL அல்லாத கொழுப்பு அடிப்படையில் உங்கள் HDL அல்லது "நல்ல" கொலஸ்ட்ரால் எண் உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் எண்ணிலிருந்து கழிக்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது அனைத்து "கெட்ட" கொழுப்பு வகைகளின் அளவீடு ஆகும். இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதை விட குறைவாக இருக்க வேண்டும்.
ட்ரைகிளிசரைட்ஸ் (Triglycerides):
ட்ரைகிளிசரைடுகள் நம் ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு (லிப்பிட்) ஆகும். நாம் சாப்பிடும் போது, நமது உடல் உடனடியாக பயன்படுத்த தேவையில்லாத கலோரிகளை ட்ரைகிளிசரைடுகளாக மாற்றுகிறது. இந்த ட்ரைகிளிசரைடுகள் நம்முடைய கொழுப்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. பின் ஹார்மோன்கள் உணவுக்கு இடையில் ஆற்றலுக்காக ட்ரைகிளிசரைடுகளை வெளியிடுகின்றன. சுருக்கமாக சொன்னால் நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் மற்றொரு வடிவம் இந்த ட்ரைகிளிசரைட்ஸ். இது குறிப்பாக பெண்களுக்கு இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவுக்கான இயல்பான வரம்பு என்ன.?
கொலஸ்ட்ரால் ஒரு டெசிலிட்டருக்கு (mg/dL) மில்லிகிராமில் அளவிடப்படுகிறது. ஒரு ஆணின் கொலஸ்ட்ரால் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். பெண்ணின் கொலஸ்ட்ரால் அளவு மாதவிடாய் நின்ற பிறகு அதிகரிக்கும்.
பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
19 வயது மற்றும் இதைவிட குறைவான வயது உள்ளோருக்கு:
இந்த வயது வரம்பில் மொத்த கொலஸ்ட்ரால் 170mg/dL-க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதில் கெட்ட கொழுப்பான LDL-ன் அளவு 100mg/dL-க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த வயதிர் 45mg/dL-க்கும் அதிகமான HDL-ஐ கொண்டிருக்க வேண்டும். 19 வயத்திற்குற்பட்ட குழந்தைகளின் LDL கொலஸ்ட்ரால் அளவு பெரியவர்களை விட அதிகமாக இருந்தால் சிகிச்சைத் திட்டம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தை மருத்துவ நிபுணர் பரிந்துரைக்க கூடும்.
எல்டிஎல் என்றால் என்ன? கெட்ட கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்:
20 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு125 முதல் 200mg/dL வரை இருக்கு வேண்டும். இவர்களின் LDL அளவுகள் 100mg/dL-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் 50mg/dL அல்லது அதற்கு மேற்பட்ட HDL அளவை கொண்டிருக்க வேண்டும்.
20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்:
20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் மொத்த கொலஸ்ட்ராலின் இயல்பான வரம்பு 125 முதல் 200mg/dL ஆகும். இவர்களின் LDL அளவு 100mg/dL-க்கும் குறைவாக இருக்க வேண்டும். HDL கொழுப்பு அளவு 40mg/dL இருக்க வேண்டும். ஆண்களுக்கு 40 mg/dl-க்கும் கீழ் இருப்பதும், பெண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 50-க்கும் கீழ் இருப்பதும் குறைவான HDL கொலஸ்ட்ரால் அளவாக நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த பரிந்துரைகளின் படி பார்த்தால் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு HDL கொலஸ்ட்ராலை உடலில் தக்க வைப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும்.
கொலஸ்ட்ரால் அளவுகள் வயது, எடை மற்றும் பாலினத்தைப் பொறுத்து மாறுபடும். உடல் காலப்போக்கில் அதிக கொழுப்பை உற்பத்தி செய்கிறது, எனவே 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் கொலஸ்ட்ரால் அளவை தவறாமல் சரிபார்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cholesterol