ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அதிக கொலஸ்டிராலுக்கு மருந்து சாப்பிடுவதை திடீரென்று நிறுத்தினால் என்ன ஆகும்..?

அதிக கொலஸ்டிராலுக்கு மருந்து சாப்பிடுவதை திடீரென்று நிறுத்தினால் என்ன ஆகும்..?

கொலஸ்ட்ரால் மாத்திரை

கொலஸ்ட்ரால் மாத்திரை

கொலஸ்ட்ராலைக் குறைப்பது குறைப்பதற்கு இந்த மருந்துகள் வேலை செய்தாலுமே இது இதய நோய் வராமல் தடுக்கிறது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிக கொலஸ்ட்ரால் என்பது உயிர் கொல்லியாக கருதப்படுகிறது. சைலன்ட் கில்லர் என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல அதிக கொலஸ்டிரால் இருந்தால், திடீரென்று இதய நோய் பாதிப்பு அல்லது மாரடைப்பால் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. கொலஸ்டிரால் என்பது, மெழுகு போல இருக்கும் ஒரு சப்ஸ்டன்ஸ். இதில் நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என்று இரு வகைகள் உள்ளன. குறைவான அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது LDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு மற்றும் இதயத்திற்கும் பாதிப்பை விளைவிக்கும்.

எல்டிஎல் கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் கூறப்படுகிறது. LDL கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக ஒரு சில மருந்துகளை பயன்படுத்தலாம். அதில் ஒன்று தான் statins. இது ரத்த வால்வுகளில் படர்ந்திருக்கும் கெட்ட கொலஸ்டிராலை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. ஆனால், ஸ்டாட்டின்ஸ் சாப்பிடுவதை திடீரென்று நீங்கள் நிறுத்திவிட்டால் அது உடலுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும், எப்படி குறைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

ஸ்டாட்டின்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?

ஸ்டாட்டின்ஸ் என்பது உடலின் தேவையை விட அதக கொலஸ்ட்ரால் உற்பத்தியாவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே உடல் முழுவதும் அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் கார்டியோவாஸ்குலர் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே லிப்பிட் அதாவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் மருந்துகள் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படக்கூடிய உடல்நல நோய்கள் மற்றும் இறக்கும் அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கொலஸ்ட்ரால் என்பது நம்முடைய உடலிலேயே கல்லீரலில் சுரக்கும் ஒரு என்சைம் ஆகும். இது நம்முடைய உணவுகளில் இருந்தும் நாம் பெறுகிறோம். நம் உணவு பழக்கங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது ஸ்டாடின்ஸ் மருந்தை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது இது கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்குகிறது என்று மருத்துவர்கள் விளக்கி இருக்கிறார்கள்.

கொலஸ்ட்ராலைக் குறைப்பது குறைப்பதற்கு இந்த மருந்துகள் வேலை செய்தாலுமே இது இதய நோய் வராமல் தடுக்கிறது என்பது முக்கியம். அது மட்டும் இல்லாமல் ஸ்டாட்டின்ஸ் சாப்பிடுவதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதால் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நீண்ட காலத்திற்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

Also Read : ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு... பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

கொலஸ்டிரால் மருந்தை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் :

ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்ட்டிட்யூட் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் முதன்மை நிர்வாக இயக்குனரான மருத்துவர் நிதிஷ் சந்திரா ஆனால் இதில் 5 – 10% வரை ஏதேனும் பக்க விளைவு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த மருந்தை தொடர்ந்து அல்லது நீண்ட காலமாக உட்கொண்டால் உடல் மற்றும் தசை வலி ஏற்படலாம். இது ஒரு பொதுவான பக்க விளைவு தான் என்றும், மது அருந்துபவர்கள் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் குறைபாடு இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு சிலருக்கு மாத்திரைகளின் சாதாரண பக்கவிளைவுகளான செரிமானக் கோளாறு, உடல் சோர்வு, தலைவலி ஆகியவையும் ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கொலஸ்டிரால் மருந்தான ஸ்டாட்டிஸ்சை திடீரென்று நிறுத்தினால் என்ன ஆகும்?

சரி இந்த மருந்தை திடீரென்று சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும்? தொடர்ச்சியாக கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஒரு நபர் மருந்து சாப்பிட்டு வந்து திடீரென்று அந்த மருந்து சாப்பிடுவதை அவர் நிறுத்தினால் மீண்டும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்டாட்டிஸ் சாப்பிடுவதை நிறுத்தினால், அதிரோஸ்க்லெரோசிஸ் என்ற ஒரு இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையில்லாமல் ஸ்டாட்டிஸ் மாத்திரைகளை யாரும் நிறுத்த கூடாது.

Also Read : பெண்களே உஷார்... பிறப்புறுப்பு சுகாதாரத்தில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!

ஸ்டாட்டிஸ் மாத்திரை எடுத்துக்கொள்வதால் தீவிரமான பக்க விளைவுகள் எதுவும் இல்லையென்பதால் இதனை தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரில் தயக்கம் மற்றும் பயமில்லாமல் சாப்பிடலாம்.

கொலஸ்டிராலை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, ஸ்டாட்டிஸ் ஒரு நபரின் ஆயுள் காலத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. திடீரென்று காரணம் இல்லாமல் நிறுத்தம் போது இதயநோய் ஆபத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகரித்து அதனால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம்.

எப்போது ஸ்டாட்டிஸ் மருந்து உட்கொள்வதை நிறுத்தலாம்?

ஸ்டாட்டிஸ் உட்கொள்வதால் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தென்பட்டால், மருத்துவரிடம் அதைப்பற்றி விவரித்து மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் மாத்திரையை நிறுத்தலாம். மருத்துவர்கள் கூட ஒரேடியாக இந்த மாத்திரையின் அளவை நிறுத்த மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரையின் டோசை குறைப்பார்கள் அல்லது வேறு மாத்திரையை உங்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.

ஒருவேளை உங்களுக்கு ஸ்டாட்டிஸ் கொள்ளவில்லை என்றால் அதற்கு மாற்றாக வேறு கொலஸ்டிரால் குறைக்கும் மருந்தை பரிந்துரைப்பார்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cholesterol, Tablets