ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி..?

கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி..?

கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம்

கருவை பாதிக்கும் கர்ப்பிணிகளின் மன அழுத்தம்

கர்ப்பம் தரிப்பதற்கு 20 வாரங்களுக்கு முன்பு ஏற்படும் உயர் ரத்த அழுத்தமே, நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் ஆகும். வெளிப்படையான அறிகுறிகள் காட்டாது என்பதால் இந்த வகையை கண்டறிவது கடினம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். தாய் மற்றும் கருவிலிருக்கும் சேயின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது முக்கியம். கடும் சிக்கல்களை தவிர்க்க கர்ப்பகாலத்தில் மருத்துவரின் பரிந்துரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நல்ல முறையில் பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைக்கு கர்ப்பிணிகளின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது முக்கியம். கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை கவனிக்காவிட்டால் அது சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நஞ்சு கொடிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதற்கு வழிவகுக்கும். நஞ்சு கொடிக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைவது கருவின் மெதுவான வளர்ச்சி, முன்கூட்டிய பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்த சிக்கலை கர்ப்பத்தின் தொடக்கம் அல்லது கர்ப்ப காலத்தின் போது பெண்கள் அனுபவிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் பின்வருமாறு..

* உடல் பருமன்

* குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கர்ப்பத்தின் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதற்கான வரலாறு

* முதல்முறை கர்ப்பம்

* 35 வயதிற்குப் பிறகான கர்ப்பம்

* நீரிழிவு நோய்

* புகை மற்றும் மது பழக்கம்

* ஆட்டோஇம்யூன் நோய்கள்

* அதிக உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது

கர்ப்ப காலத்தில் உயர்ரத்த அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

* குமட்டல் மற்றும் வாந்தி,

* தலைவலி,

* திடீர் எடை அதிகரிப்பு,

* மூச்சு திணறல்,

* சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறுவது,

* மேல் வயிற்றில் வலி

கர்ப்ப காலத்தில் பெண்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் 4 வகைகள்:

1. நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் (Chronic hypertension):

கர்ப்பம் தரிப்பதற்கு 20 வாரங்களுக்கு முன்பு ஏற்படும் உயர் ரத்த அழுத்தமே, நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் ஆகும். வெளிப்படையான அறிகுறிகள் காட்டாது என்பதால் இந்த வகையை கண்டறிவது கடினம்.

பெண்குயின் கார்னர் : திருமணத்திற்கு பின் மாதவிடாய் அடிக்கடி தள்ளிப்போவது ஆபத்தா..? கரு நிற்பதில் சிக்கல் வருமா?

2. கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் (Gestational hypertension):

இது பொதுவாக கர்ப்பத்தின் 20 வாரங்களுக்கு பிறகு அல்லது பிரசவத்திற்கு அருகில் கண்டறியப்படுகிறது. இது கர்ப்பம்-தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் (PIH - Pregnancy-Induced Hypertension ) என்றும் குறிப்பிடப்படுகிறது. இது அனைத்து கர்ப்பங்களிலும் சுமார் 6 சதவிகிதம் ஏற்படுகிறது.

3. ப்ரீக்ளாம்ப்சியா (Preeclampsia):

கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் ப்ரீக்ளாம்ப்சியா என்று அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தும். உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால் தாய் மற்றும் கரு இருவருக்கும் தீவிர சிகிச்சை தேவைப்படலாம்.

4. மிகைப்படுத்தப்பட்ட ப்ரீக்ளாம்ப்சியாவுடன் கூடிய நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம்:

கர்ப்பத்திற்கு முன் நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்ட பெண்களுக்கு, ப்ரீக்ளாம்ப்சியா அதிகமாக இருக்கும் . இந்த பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் அதிகப்படியான புரதம் இருப்பது மற்றும் கர்ப்ப காலத்தில் பிற சிக்கல்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

பெர்ரி முதல் ப்ராக்லி வரை… மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் டாப் 5 உணவுகள்! ஆய்வில் தகவல்

உயர் ரத்த அழுத்தம் கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்கும்?

நஞ்சு கொடிக்கு ரத்த ஓட்டம் குறைவது, நஞ்சுக்கொடி சீர்குலைவு, இதய நோய் மற்றும் பிற உறுப்புகளுக்கு சேதம்.

எவ்வாறு ஆபத்தை குறைக்கலாம்?

சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது, புகை மற்றும் மதுபழக்கத்தை தவிர்ப்பது, மனஅமைதி, தவறாமல் மருத்துவரை சந்திப்பது உள்ளிட்டவற்றின் மூலம் ஆபத்தை குறைக்கலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: High Blood Pressure, Pregnancy