பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால் உயிருக்கே ஆபத்து : ஏன் தெரியுமா ?

ஒரு நாளைக்கு உண்ணும் 500 கலோரி உணவுகள் பதப்படுத்தப்பட்டவை என்கிறது தேசிய சுகாதார நிறுவனம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால் உயிருக்கே ஆபத்து : ஏன் தெரியுமா ?
ஒரு நாளைக்கு உண்ணும் 500 கலோரி உணவுகள் பதப்படுத்தப்பட்டவை என்கிறது தேசிய சுகாதார நிறுவனம்
  • News18
  • Last Updated: June 18, 2019, 4:16 PM IST
  • Share this:
இன்று பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இறைச்சி, பால் போன்றவற்றைப் பதப்படுத்தாமல் உட்கொள்ள முடியாது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெடாமல் இருக்க சில மூலப்பொருட்கள் சேர்க்கப்படுவது இயல்பு. அது அந்த உணவின் இயற்கைத் தன்மையை முற்றிலுமாகக் கெடுத்துவிடும். உதாரணமாக, சோடா, பிஸ்கட்ஸ், உடனடி நூடுல்ஸ், சிக்கன் நக்கெட்ஸ், பார் சாக்லெட்ஸ் என ஆரோக்கியம் எனக் கருதி உண்ணும் பதப்படுத்தப்பட எல்லாமே கேடுதான் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளபடி, சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர்  உண்ணும் 500 கலோரி உணவுகள் பதப்படுத்தப்பட்டவை.


ஃபிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்விலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறு அவை உயிருக்கே கேடு என்பதையும் அந்த ஆய்வுகள் பட்டியலிட்டுள்ளன. அவை....

அதிக அளவிலான சர்க்கரை

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை அல்லது ஃப்ரஸ்டோ கார்ன் சிரப் ( fructose corn syrup ) அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இது குறைவாக இருக்கும்பட்சத்தில் நன்மையே. ஆனால் அதிகமாகச் சேர்த்தால் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நார்ச்சத்து குறைவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் விரைவான ஜீரண சக்திக்கு நார்ச்சத்து குறைக்கப்படும். இதனால் கார்போ-ஹைட்ரேட் உறிஞ்சுவது குறைந்து உடலுக்கு ஆற்றல் கிடைக்காது.

நொறுக்குத் தீனிக்கு அடிமையாக்குதல்

சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது அதன் மூலக்கூறுகளால் உடலில் உற்சாகத்தை அளிக்கக் கூடிய டோபமைன் என்னும் இரசாயனம் வெளியேறுகிறது. இதனால்தான் சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ணத் தொடங்கினால் இடைவெளியின்றித் தின்று தீர்ப்போம்.

எரிச்சல் அதிகரிக்கும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்புகள் எரிச்சலை உண்டாக்கும் என கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சோடியத்தின் அளவு அதிகரித்தல்

சோடியம் உடலுக்குத் தேவையான ஒன்றுதான் என்றாலும் சுவைக்காக அதிக உப்பு சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயை உண்டாக்கும்.

தூக்கம் பாதிக்கப்படும்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டால் நிகழும் விரைவான ஜீரண சக்தி இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைந்து தூக்கமின்மையை அதிகரிக்கும். இன்சுலின் அளவு நிலையாக இருந்தால்தான் தூக்கம் வரும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு

ஊட்டச்சத்து மிகக் குறைவாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு என்றுமே கேடுதான்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்