கொரோனா வைரஸ் தொற்று ஒருபக்கம் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ற பெயரில் பல செய்திகள் சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி ஷேராகி வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் உங்களால் 10 வினாடிகள் எந்தவித தொந்தரவும் இன்றி (இருமல், அசௌகரியம் அல்லது இறுக்கம்) மூச்சை இழுத்து பிடித்து அடக்க முடிந்தால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படமாட்டீர்கள் அல்லது பாதிக்கப்படவில்லை என்று அர்த்தம் என்று பரவி வருகிறது. நெருக்கடியான நேரத்தில் சுத்தமான காற்று உள்ள சூழலில் இந்த சுயபரிசோதனை செய்து கொள்லாம் என்று இந்த செய்தி கூறுகிறது.
ஆனால் இது உண்மையா, குறிப்பிட்ட சில வினாடிகள் தொந்தரவின்றி மூச்சு விடாமல் இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வரையறுக்க முடியுமா என்றால் நிபுணர்களின் பதில் இல்லை என்பதாக இருக்கிறது. பிரபல மருத்துவர் அசுதோஷ் சுக்லா இதுபற்றி கூறுகையில், மூச்சை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பது நல்ல நுரையீரல் ஆரோக்கியம் இருப்பதை குறிக்கலாமே தவிர, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு தீர்மானிக்கப்படுவதில்லை என்கிறார். தீவிர நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல ஆரோக்கிய பழக்கங்கள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையால் உறுதி செய்ய வேண்டும். இன்ஸ்டன்டாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : கொரோனா காலத்தில் ஆரோக்கியமாக இருக்க எந்த மாதிரி உணவுகளை சாப்பிடலாம் ?
மோசமான செரிமானம், குடல் பிரச்சனைகள், அடிக்கடி ஜுரம் மற்றும் ஜலதோஷம் ஏற்படுவது, தொற்றுக்கு உள்ளாவது, காயங்கள் எளிதில் ஆறாமல் இருப்பது, சோர்வாக உணர்வது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியின் அறிகுறிகளாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். தொற்று தாக்காமல் இருக்க ஒருவருக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்ள முடியும்.
கோவிட் உட்பட பல்வேறு தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆரோக்கியமான மற்றும் சீரான ஊட்டச்சத்து மிக்க உணவுகள், இரவில் 8 மணி நேர நிம்மதியான தூக்கம், தினசரி தவறாமல் செய்யப்படும் உடல்செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தவிர உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மற்றும் புகை, மது பழக்கத்தை தவிர்ப்பதும் முக்கியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona safety, Covid-19