முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நூற்றாண்டு பழமையான அவகடோ பழம்… ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

நூற்றாண்டு பழமையான அவகடோ பழம்… ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

Avocado Fruit: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்களுக்கு உரிய காலத்தில் உதவும் நண்பனாக இந்த பட்டர் ஃப்ரூட் இருக்கலாம்.

Avocado Fruit: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்களுக்கு உரிய காலத்தில் உதவும் நண்பனாக இந்த பட்டர் ஃப்ரூட் இருக்கலாம்.

Avocado Fruit: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்களுக்கு உரிய காலத்தில் உதவும் நண்பனாக இந்த பட்டர் ஃப்ரூட் இருக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மனித உயிர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது அவகடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட். இதில் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6, நல்ல கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளன. ஆர்த்தரைட்டீஸ் நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்களுக்கு உரிய காலத்தில் உதவும் நண்பனாக இந்த பட்டர் ஃப்ரூட் இருக்கலாம். இல்லினாய்ஸ் அர்பனா-சேம்பெயின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 105 முதியவர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் அதிக உடல் எடை அல்லது பருமனானவர்கள் என வகைப்படுத்தினர். இந்த 12 வார சோதனையில் பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவிற்கு அவகடோ பழம் அடங்கிய தினசரி உணவு வழங்கப்பட்டது. மற்ற குழுவின் தினசரி உணவில் அவகடோ பழம் சேர்க்கப்படவில்லை.

ஆய்வின் ஆரம்பத்திலும் முடிவிலும் தன்னார்வலர்களின் அடிவயிற்று கொழுப்பையும், அவர்களின் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அவகடோ பழத்தை எடுத்துக்கொண்டவர்களுக்கு சிறந்த முறையில் எடை குறைந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க | உடல் எடையை குறைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுகளை அறவே தவிர்த்திருங்க..!

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, தினமும் ஒரு அவகடோ பழத்தை உட்கொள்ளும் பெண்கள் உள்ளுறுப்பு வயிற்று கொழுப்பைக் குறைப்பதாகக் கண்டறிந்தனர். இந்த மாற்றம் தொப்பை கொழுப்பையும் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.  பட்டர் ஃப்ரூட் (Avocado) உள்ளுறுப்பு கொழுப்பு சேமிப்பு விகிதத்துடன் தொடர்புடையது என்பதை அறிந்து ஆச்சரியப்படவில்லை என்கிறார் பார்சிலி ஹெல்த் சுகாதார பயிற்சியாளர் ஜெசிகா மார்கஸ். அவகடோவில் கொழுப்பு அதிகம் இருந்தாலும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது என்று அந்த மருத்துவர் விளக்குகிறார்.

நூற்றாண்டு பழமையான அவகடோ பழத்தின் பிற ஊட்டச்சத்து நன்மைகளை மருத்துவர் மார்கஸ் சுட்டிக்காட்டுகிறார். இது ஊட்டச்சத்து அடர்த்தியான முழு சூப்பர் ஃபுட் ஆகும், மேலும் இந்த பழம் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களால் நிரம்பியுள்ளது. அவகடோ பழத்தை சாலடிலோ அல்லது டோஸ்ட் செய்தோ சாப்பிடுவது உடல் நலத்திற்கு சூப்பர் பயன் தரும். மேலும், உடல் எடையையும் குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

First published:

Tags: Avocado, Healthy Life