தற்போது மருத்துவ துறையின் அபார வளர்ச்சி உடல் அல்லது கருவுறுதல் பிரச்சனைகளால் பெற்றோர் ஆக முடியாமல் தவிக்கும் தம்பதிகளைக் கூட ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக மாற்றி காட்டுகிறது. இதற்கு மருத்துவதுறையின் IVF தொழில்நுட்பம் நல்வாய்ப்பாக அமைகிறது.
ஆனால், வெளியே உலவி வரும் கட்டுக்கதைகளால் IVF மூலம் பெற்றோராக பலர் பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். தங்களால் கருவுற முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும், சில தயக்கம் மற்றும் அச்சம் காரணமாக கரு பரிமாற்றம் மற்றும் வாடகைத் தாய் முறையை முயற்சி செய்ய மக்கள் முன்வருவது இல்லை. IVF தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளிள் பற்றி சில தகவல்களை கீழே கொடுத்துள்ளோம்.
கட்டுக்கதை 1: IVF கர்ப்பங்களில், பிரசவம் அறுவை சிகிச்சையாக மட்டுமே இருக்கும்..
உண்மை: ஆய்வறிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, IVF கர்ப்பம் இயற்கையான கர்ப்பத்தைப் போன்றது என்றும், சில சிக்கல்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிக்கல்கள் இயற்கையாக கர்ப்பமடையும் தாய்க்கும் இருக்கலாம் என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
கட்டுக்கதை 2: IVF முறையில் இரட்டை குழந்தைகள் உருவாகும்..
உண்மை: IVF சிகிச்சையில் இரட்டை குழந்தைகள் உருவாவது பொதுவானது என்றாலும், ஒற்றை கரு பரிமாற்றத்திற்கு மேம்பட்ட ART நுட்பங்களை பயன்படுத்தலாம்.
கட்டுக்கதை 3: IVF இளம் தம்பதிகளுக்கு மட்டுமே பயனளிக்கும்..
உண்மை: இளம் தம்பதிகள் மட்டுமே IVF சிகிச்சை முறையால் பயனடைய முடியும் என்பது இல்லை, வயது முதிர்ந்த தம்பதிகளும் இதன் மூலமாக குழந்தை பெற முடியும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் தம்பதியின் வயது குறைவான செயல்திறனுக்கு காரணமாக அமையலாம்.
Also Read : உடல் பருமன் கருவுறாமைக்கு முக்கிய காரணம் இல்லை - ஆய்வில் வெளியான உண்மை..!
கட்டுக்கதை 4: IVF 100 சதவீத வெற்றி விகிதத்தை கொடுக்கும் மற்றும் குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும்..
உண்மை: இந்த கூற்று முற்றிலும் உண்மையானது கிடையாது. IVF இன் வெற்றி விகிதங்கள் உங்களுடைய வயது, கருவுறாமைக்கான காரணம் மற்றும் உங்கள் உயிரியல் மற்றும் ஹார்மோன் நிலை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்த முறையில் எல்லோராலும் 100 சதவீதம் வெற்றி பெற முடியாது, அதற்கான உத்திரவாதத்தையும் IVF கொடுப்பது கிடையாது.
கட்டுக்கதை 5: IVF குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள், உடல் மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும்..
உண்மை: இது முற்றிலும் ஆபத்து இல்லாத செயல்முறையாகும். குறைபாடுகளுடன் கூடிய IVF குழந்தை பெறுவதற்கான ஆபத்து மிகவும் குறைவு. இது இயற்கையான கர்ப்பத்தைப் போன்றது. IVF மூலம் பிறக்கும் குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களும் இயற்கையாகப் பிறந்த குழந்தைகளும் ஒரே மாதிரியானவே இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுக்கதை 6: IVF செயல்முறை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்..
உண்மை: ஐவிஎஃப் தொழில்நுப்டம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நீங்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கருமுட்டையை சேகரிப்பதற்காக மட்டும் சில மணி நேரம் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கும். அதற்காக ஒரு இரவை கூட நீங்கள் மருத்துவமனையில் கழிக்க வேண்டிய நிலை இருக்காது.
Also Read : ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் இலவங்கப் பட்டை...
கட்டுக்கதை 7: வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் IVF வெற்றிகரமாக முடியும்..
மன அழுத்தம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்கும் பெண்களுக்கு வெற்றிகரமான IVF சுழற்சிக்கான வாய்ப்புகள் அதிகம் என மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தவறான உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை விந்தணு மற்றும் முட்டை தரம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எடை குறைந்த பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் IVF செயல்முறையை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பது சரியானது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.