Home /News /lifestyle /

செக்ஸ், பீரியட்ஸ் பற்றி கேட்கும் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும்..?

செக்ஸ், பீரியட்ஸ் பற்றி கேட்கும் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும்..?

பேரண்டிங் டிப்ஸ்

பேரண்டிங் டிப்ஸ்

நம் நாட்டை பொறுத்த வரை செக்ஸ் அல்லது கர்ப்பம் பற்றி குழந்தைகள் முன் அல்லது அவர்களிடம் பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்கிறார்கள்.

சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மேரேஜ் ஆல்பத்தை பார்த்து, நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட விழாவில் ஒரு ஃபோட்டோவில் கூட நான் இல்லையே, ஏன்.? நான் எங்கே சென்றிருந்தேன், என்னை விட்டுவிட்டு ஏன் ஃபோட்டோ எடுத்து கொண்டுள்ளீர்கள் என்று மிக சீரியஸாக கேள்விகளை கேட்டு குடைவது பொதுவாக பல குடும்பங்களில் நடக்கும் வேடிக்கையான ஒன்று.

இது பெரும்பாலும் நகைச்சுவையாக எடுத்து கொள்ளப்பட்டு சிரித்து விட்டு கடந்து சென்று விடுவோம். ஆனால் குழந்தைகள் கேள்வி கேட்பதோடு நின்று விடாமல் தங்கள் கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில் இது பற்றி அதிகம் சிந்தித்து ஆய்வு செய்கிறார்கள்.

மேலும் ஒரு சில குழந்தைகள் சங்கடமான அல்லது வயதுக்கு சிறிதும் பொருத்தமற்ற கேள்விகளை கூட கேட்கின்றனர். நம் நாட்டை பொறுத்த வரை செக்ஸ் அல்லது கர்ப்பம் பற்றி குழந்தைகள் முன் அல்லது அவர்களிடம் பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்கிறார்கள். ஏனெனில் இந்த விஷயங்கள் குழந்தைகளுக்கு தற்போது தெரிய வேண்டாம். சற்று பெரியவர்களாகி வளர்ந்ததும் இது குறித்து அவர்களிடம் சிறிது சிறிதாக பேசி புரிய வைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனவே செக்ஸ், கருவுறுதல் மற்றும் மாதவிடாய் உள்ளிட்டவற்றை பற்றிய வெளிப்படைத்தன்மை இல்லாததால், குழந்தைகள் இந்த தலைப்புகள் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பெற்றோர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால் அவர்கள் தங்கள் நண்பர்களுடன் இந்த தலைப்புகள் பற்றி விவாதிக்க முயற்சி செய்கிறார்கள். மேலும் தவறான தகவலை பெறுகிறார்கள். மனித வாழ்க்கையில் முக்கியமாக இருக்கும் இந்த விஷயங்களை பற்றிய அவர்களின் புரிதலுக்கு தவறான தகவல்கள் தீங்கு விளைவிக்க கூடும். குழந்தைகள் இது போன்ற சங்கடமான கேள்விகளை கேட்கும் போது அவர்களை பெற்றோர்கள் எவ்வாறு அணுகலாம் என்பதற்கான வழிகளை கீழே பார்க்கலாம்.



நட்பாக இருங்கள்..

உங்கள் குழந்தைகளுக்கு பள்ளியிலும் மற்றும் அக்கம்பக்கத்திலும் அவர்களின் ஒத்த வயதுடைய பல குழந்தைகள் நண்பர்களாக இருப்பார்கள். நீங்கள் அவர்களின் நண்பர்களை மாற்ற முடியாது என்றாலும், நீங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக நட்பாக இருக்க முயற்சி செய்யலாம். நட்பாக பழகி அவர்களின் பிரச்சினைகள், கவலைகள் மற்றும் கேள்விகளை அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் மீது பெற்றோர்கள் உரிமை எடுத்துக்கொள்வது தவறு : காரணத்தை விளக்கும் சத்குரு...

அடிப்படை தகவல்களை கொடுங்கள்..

செக்ஸ், கருத்தரிப்பு மற்றும் மாதவிடாய் உள்ளிட்ட தலைப்புகளை பற்றி அடுத்த முறை குழந்தைகள் உங்களிடம் பேசும் போது அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, உடலுறவு, மாதவிடாய் மற்றும் மனித உடல் திரவங்கள் பற்றி விரிவாக இல்லாமல் அடிப்படை தகவல்களை அவர்களுக்கு கொடுக்க முயற்சியுங்கள். உதாரணமாக, குட் டச் மற்றும் பேட் டச் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அவர்களுக்கு கற்று கொடுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகள் உங்களுக்கு கடினமாக தோன்றினால் அல்லது உறுதியானபதில் தெரிய விட்டால், ஓரிரு நாட்களில் பதில் சொல்வதாக கூறி விட்டு சரியான அடிப்படை தகவல்களை அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.



வெளிப்படையாக இருக்கலாம்..

குழந்தைகளுக்கு மேற்கண்ட விஷயங்களைப் பற்றி கற்பிக்கும் போது சில குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். முதலில் வெளிப்படையாக இருங்கள் மற்றும் குறிப்பிட்ட சரியான தகவலை மட்டுமே அவர்களிடம் பகிரவும். குழந்தைகள் இது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள் என்பதற்காக அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் அல்லது அவர்களை கண்டிக்காதீர்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Kids Care, Parenting Tips, Sexual Wellness

அடுத்த செய்தி