முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Hepatitis | அறிகுறி இல்லாமலேயே கல்லீரலை தாக்கும் 'ஹெபடைடிஸ்'- எச்சரிக்கும் மருத்துவ உலகம்!

Hepatitis | அறிகுறி இல்லாமலேயே கல்லீரலை தாக்கும் 'ஹெபடைடிஸ்'- எச்சரிக்கும் மருத்துவ உலகம்!

கல்லீரல் ஆரோக்கியம் : கல்லீரலை பாதுகாக்க மது பழக்கத்தை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை மூன்று வேளைகளும் சாப்பிடுவது நல்லது. மேலும் தினம்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரலுக்கு மட்டுமன்றி பல்வேறு நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.

கல்லீரல் ஆரோக்கியம் : கல்லீரலை பாதுகாக்க மது பழக்கத்தை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை மூன்று வேளைகளும் சாப்பிடுவது நல்லது. மேலும் தினம்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரலுக்கு மட்டுமன்றி பல்வேறு நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.

தீவிர நிலையை எட்டியபிறகே, ஹெபடைடிஸ் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படும். அப்போது, பாதிக்கப்பட்டவர் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பார்.

ஹெபடைடிஸ் நோய் என்பது நேரடியாக கல்லீரலை பாதிக்கும். கல்லீரலில் திசுக்களில் அழற்சியை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ், கல்லீரல் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். உலகளவில் லட்சக்கணக்கானோர் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொடக்கத்தில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. தீவிர நிலையை எட்டியபிறகே, அதன் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படும். அப்போது, பாதிக்கப்பட்டவர் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பார்.

முன்கூட்டியே கண்டுபிடித்தால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்க முடியும். உலகளவில் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10ல் 9 பேருக்கு ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஆபத்தான கட்டத்தில் மட்டுமே தெரிய வருகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிடில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உலகம் முழுவதும் ஜூலை 28ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

உலக ஹெபடைடிஸ் நாள் 2021 :

ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் பாதிப்பை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக்கருத்து பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு ஹெபடைடிஸ் நாள் மையக்கருத்தாக ‘ஹெபடைடிஸ் காத்திருக்காது’ (Hepatitis Can’t Wait) என்ற மையக்கருத்து பின்பற்றப்படவுள்ளது. கடந்த ஆண்டு Hepatitis-free future என்ற மையக்கருத்து பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஹெபடைடிஸ் இன்னும் முழுமையாக ஒழியாமல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரைவாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கல்லீரல் அழற்சிநோய் நாளின் முக்கியத்துவம்:

கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் வைரஸ் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த நாளில் அவை எப்படி தாக்குகின்றன? எப்படி பரவுகின்றன? ஒருவர் ஹெபடைடிஸ் தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்? குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும். கல்லீரல் பாதுகாப்பு குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறப்படுகிறது. ஹெபடைடிஸ் பி வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியும் நடைமுறையில் உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஹெபடைடிஸ் நாள் வரலாறு :

அமெரிக்க மரபியலாளரும், மருத்துவருமான பரூச் சாமுவேல் ப்ளம்பெர்க்கின் நினைவாக ஹெபடைடிஸ் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் பி வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அவர் ஆற்றிய பணிகள் இந்நாளின் நினைவு கூறப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற அவர் ஜூலை 28ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு பிறந்தார். முதன்முதலாக ஹெபடைடிஸ் வைரஸைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், அதற்கான தடுப்பூசியையும் உருவாக்கினார். 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டத்தில் அவருடைய பிறந்த நாளை ஹெபடைடிஸ் விழிப்புணர்வு நாளாக கடைபிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

ஹெபடைடிஸ் வைரஸ் வகைகள் :

ஹெபடைடிஸ் வைரஸ்களில் 5 வகைகள் உள்ளன. அவை ஏ, பி, சி, டி, இ. இதில் ஏ மற்றும் இ வகை ஹெபடைடிஸ் வைரஸ்கள் அசுத்தமான நீர் மற்றும் உணவு வழியாக பரவுகின்றன. ஹெபடைடிஸ் பி வைரஸ் பாலியல் உறவு மூலம் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. ஏற்கனவே, பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்தை செலுத்துவதன் மூலமும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும். ஹெபடைடிஸ் சி வைரஸ் பாதிக்கப்பட்ட ரத்தத்தின் வழியாக பரவுகிறது. ஏற்கனவே ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் டி பாதிப்பு ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய நிலையில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் இறக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் ஹெபடைடிஸ் பாதிப்பால் கல்லீரலை இழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த நோயால் பாதிகப்பட்ட பலர், கொரோனா வைரஸ் காலத்தில் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் அவர்களுக்கான உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

First published:

Tags: Healthy Life, Lifestyle, Liver Health