Home /News /lifestyle /

தொடர்ச்சியான தூக்கமின்மை ஒருவரின் மன மற்றும் உடல் நலனை மோசமாக பாதிக்கும்: ஆய்வில் தகவல்!

தொடர்ச்சியான தூக்கமின்மை ஒருவரின் மன மற்றும் உடல் நலனை மோசமாக பாதிக்கும்: ஆய்வில் தகவல்!

தூக்கமின்மை

தூக்கமின்மை

புதிய ஆய்வில், தொடர்ச்சியாக எட்டு இரவுகளுக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தின் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். ஆறு மணி நேர தூக்கம் என்பது மனிதர்களில் சராசரி உகந்த ஆரோக்கியத்தை ஆதரிக்க வல்லுநர்கள் கூறும் தூக்கத்தின் குறைந்தபட்ச காலம் ஆகும்.

மேலும் படிக்கவும் ...
ஒருவர் தொடர்ச்சியாக மூன்று இரவுகள் தூக்கத்தை இழக்கும் போது அது அவர்களில் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் மோசமடையச் செய்யும் என ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்னல்ஸ் ஆஃப் பிஹேவியரல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், தொடர்ச்சியாக எட்டு இரவுகளுக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தின் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். ஆறு மணி நேர தூக்கம் என்பது மனிதர்களில் சராசரி உகந்த ஆரோக்கியத்தை ஆதரிக்க வல்லுநர்கள் கூறும் தூக்கத்தின் குறைந்தபட்ச காலம் ஆகும்.

இதுகுறித்து தென் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஏஜிங் ஸ்டடீஸின் உதவி பேராசிரியரான முன்னணி எழுத்தாளர் சூமி லீ கூறியதாவது, ஆய்வில் ஒரு இரவு தூக்கமின்மைக்குப் பிறகு அறிகுறிகளில் மிகப்பெரிய முன்னேற்றம் தோன்றியது. மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளின் எண்ணிக்கை படிப்படியாக மோசமடைந்து, மூன்றாம் நாளில் அது உயர்ந்தது. அந்த நேரத்தில், மனித உடல் மீண்டும் மீண்டும் தூக்க இழப்புடன் பழகிவிட்டதாக ஆராய்ச்சி காட்டுகிறது என்று கூறியுள்ளார். உடல் அறிகுறிகளின் தீவிரம் மிக மோசமாக இருப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தபோது, ஆறாம் நாளில் இவை அனைத்தும் இன்னும் மோசமாக மாறியிருந்தன என்று தெரிவித்தார்.இதுகுறித்து மேலும் பேசிய லீ " பெரும்பாலான மக்கள் வார இறுதி நாட்களில் நிம்மதியாக நீண்ட நேரம் தூங்கலாம் என்று முடிவெடுத்து வார நாட்களில் அதிக நேரம் இரவில் கண்விழித்து வேலைகளை செய்யலாம் என்று நினைப்பர். இருப்பினும், இந்த ஆய்வின் முடிவுகள் ஒரு இரவு தூக்கத்தை இழப்பது உங்கள் அன்றாட செயல்பாட்டை கணிசமாக பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் நடத்திய இந்த ஆய்வில் மிட்லைஃப் வழங்கிய தரவுகளில் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவும் நன்கு படித்தவர்களாகவும் இருந்த கிட்டத்தட்ட 2,000 நடுத்தர வயதினர் பங்கேற்றிருந்தனர். அவர்களில், 42 சதவிகிதத்தினர் குறைந்தது ஒரு இரவு தூக்கத்தையாவது இழந்தனர். அவர்கள் தங்களது வழக்கமான தூக்க நடைமுறைகளை விட ஒன்று மற்றும் அதற்கும் குறைவான மணிநேரத்திற்கு தூங்கினர். மேலும் அவர்கள் தொடர்ந்து எட்டு நாட்கள் தங்கள் மன மற்றும் உடல் நடத்தைகளை ஒரு நாட்குறிப்பில் பதிவுசெய்தனர். இது தூக்க இழப்பு அவர்களது உடலில் எந்தத்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை அனுமதித்தது.

Work From Home - ஆல் ஏற்படும் உடல் வலி , சோர்வு , பிற உடல் நல பாதிப்புகளை தவிர்க்க எளிய வழிகள்..!

இந்த நிலையில் ஆய்வில் பங்கேற்றவர்கள் தூக்கமின்மையின் விளைவாக கோபம், பதட்டம், தனிமை, எரிச்சல் மற்றும் விரக்தியடைந்த உணர்வுகளை கொண்டிருந்ததாக புகாரளித்தனர். மேல் சுவாச பிரச்சினைகள், வலிகள், இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் பிற உடல்நலக் கவலைகள் போன்ற அதிக உடல் அறிகுறிகளையும் அவர்கள் அனுபவித்தனர். இந்த எதிர்மறை உணர்வுகள் மற்றும் அறிகுறிகள் தொடர்ச்சியான தூக்க இழப்பு நாட்களில் தொடர்ந்து உயர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இரவு தூக்கம் இல்லாவிட்டால் அடிப்படை நிலைகளுக்கு அவர்களால் திரும்பமுடியவில்லை என்று கூறினர்.மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் இரவு ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு முறை பழக்கமாகிவிட்டால், உங்கள் உடல் தூக்கமின்மையிலிருந்து முழுமையாக மீள்வது கடினம் என்று லீ குறிப்பிட்டுள்ளார். தினசரி நல்வாழ்வை மோசமாக்கும் தீய சுழற்சியைத் தொடரும். இது தொழில் ரீதியாக ஒருவரை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Immunity Booster | ’தூக்கம் முக்கியம் குமாரு...’- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டுமா? தூக்கம் சார்ந்த பழக்கத்தில் கவனம் தேவை!

லீ தலைமையிலான முந்தைய ஆய்வில் வெறும் 16 நிமிட தூக்கத்தை இழப்பது வேலை செயல்திறனை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது. அவரது முந்தைய கண்டுபிடிப்புகள் சிறிய தூக்க இழப்பு தினசரி நினைவாற்றலைக் குறைக்கும் என்பதைக் காட்டியது. இது மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் ஆரோக்கியமான நடைமுறைகளை பராமரிப்பதற்கும் ஒரு முக்கியமான ஆதாரமாகும். வலுவான தினசரி செயல்திறனைப் பேணுவதற்கான சிறந்த வழி ஒவ்வொரு இரவும் தூங்க ஆறு மணி நேரத்திற்கும் மேலான நேரத்தை ஒதுக்குவதே சிறந்தது என்று லீ கூறினார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health issues, Mental Stress, Sleep

அடுத்த செய்தி