Home /News /lifestyle /

Home Remedies: அசிடிட்டியால் அவதிப்படுகிறீர்களா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Home Remedies: அசிடிட்டியால் அவதிப்படுகிறீர்களா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Home Remedies For Acidity | ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் வயிற்றில் இயல்பாகவே சுரக்கக்கூடிய அமிலங்களை சுரக்காமல் தடுத்துவிடும் இதுவும் அசிடிட்டிக்கு காரணமாகும் அசிடிட்டிக்கு மருந்து மாத்திரைகள் இருந்தாலும் ஒரு சில நேரத்தில் அசிடிட்டி மிகவும் தீவிரமான நிலைக்கு நிலையை உண்டாக்கினாலும் சில எளிய வீட்டு குறிப்புகள், எளிய உணவுகள் மூலமாக நீங்கள் வீட்டிலேயே அசிடிட்டியை சரிசெய்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
இன்று பலரையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய மிகவும் பொதுவான ஒரு உடல் நலக் கோளாறு தான் அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் என்று கூறப்படும் ஆசிட் ரிஃப்லக்ஸ். நாம் சாப்பிட்ட உணவு செரிமானக் குழாயின் வழியாக உள்ளே சென்று வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் செரிமானம் ஆகும். உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அல்லது வயிற்றில் அதிகப்படியான அமிலம் சுரந்தாலோ, அசிடிட்டி ஏற்படும். உணவுக் குழாயின் வழியே சாப்பிட்ட உணவு வயிற்றில் இருந்து மேலே ஏறி வரும் பொழுதும் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படும், தொண்டை வலி மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் எரிச்சல் தோன்றும்.

வயிற்றில் அமிலம் சுரந்தால் மட்டும் தான் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாகும். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது அசிடிட்டியை உண்டாக்கும். தொண்டைப் பகுதியில் இருந்து வயிறின் மேற்பகுதி வரை எரிச்சலாக தோன்றுவதுதான் ஆசிட் ரிஃப்லக்ஸ் என்று கூறப்படுகிறது. மோசமான உணவு பழக்கம் தான் அசிடிட்டிக்கு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக காரமான அல்லது அதிக அளவில் உணவு சாப்பிடுவது, பெரும்பாலான நேரங்களில் மசாலாக்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவது, குளிர்ச்சியான பானங்கள் நிறைய குடிப்பது, சாப்பிட்ட உடனேயே தூங்குவது அல்லது உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் சாப்பிட்டு கொண்டே இருப்பது ஆகியவை அசிடிட்டிக்கு முக்கிய காரணங்களாகும்.

ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் வயிற்றில் இயல்பாகவே சுரக்கக்கூடிய அமிலங்களை சுரக்காமல் தடுத்துவிடும் இதுவும் அசிடிட்டிக்கு காரணமாகும் அசிடிட்டிக்கு மருந்து மாத்திரைகள் இருந்தாலும் ஒரு சில நேரத்தில் அசிடிட்டி மிகவும் தீவிரமான நிலைக்கு நிலையை உண்டாக்கினாலும் சில எளிய வீட்டு குறிப்புகள், எளிய உணவுகள் மூலமாக நீங்கள் வீட்டிலேயே அசிடிட்டியை சரிசெய்து கொள்ளலாம் உங்களுக்கு அசிடிட்டி இருந்தால் நீங்கள் பின்வரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எளிதில் நிவாரணம் பெறலாம்.

நன்றாகப் பழுத்த வாழைப்பழம்: வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது அசிடிட்டிக்கு தீர்வாக அமையும். நல்ல தூக்கம் கிடைக்கும் மற்றும் நார் சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் இருக்காது என்ற காரணத்திற்காகத்தான் பலரும் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். ஆனால், வாழைப்பழத்தில் உள்ள காம்பவுண்டுகள் அதிகப்படியான அமில சுரப்பதைத் தடுகிறது. நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

துளசி: துளசியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் குணமாக்கும் பண்புகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் துளசி அல்சருக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது மற்றும் துளசியை சாப்பிடும் போது வயிற்றுக்குள் ஒரு மியூக்கஸ் லேயர் உருவாகி வயிறு நெஞ்சுப்பகுதி மற்றும் உணவு குழாய் ஆகியவற்றில் ஏற்படும் புண் மற்றும் எரிச்சலை ஆற்றும் தன்மை கொண்டது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே தினமும் நாலைந்து துளசி இலைகளைப் பறித்து சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் துளசியை போட்டு அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் அல்சரில் இருந்து குணம் பெறலாம்.

சில்லென்ற பால்: பாலில் இருக்கும் அதிக கால்சியம் வயிற்றுப் பகுதியில் அதிகமான அமிலம் சுரப்பதைத் தடுக்க உதவுகிறது. சூடான பால் குடிப்பதற்கு பதிலாக சில்லென்று பாலில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.

சோம்பு: சீரகம் போலவே சிறிய அளவில் இருக்கும் சோம்பு திருமணம் விசேஷங்கள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு சீனி மிட்டாயோடு சேர்த்து வழங்கப்படும். இது உணவு செரிமானம் ஆவதற்கு உதவும். அதுமட்டுமின்றி அதிக மசாலாக்கள் சேர்த்து சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு சேர்க்கப்படும். உங்களுக்கு அசிடிட்டி அல்லது அல்சர் இருந்தால் நீங்கள் தினமும் சோம்பு சாப்பிடலாம் அல்லது சோம்பை ஊறவைத்து அந்த நீரை தினமும் குடித்து வரலாம். சில நாட்களிலேயே நல்ல மாற்றம் தெரியும்.

சீரகம்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருந்தாலும் அது செரிமான கோளாறை ஏற்படுத்தி அதன் மூலம் அசிடிட்டியை உண்டாக்கும். சீரகம் உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி உடலின் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை சமநிலைப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி சீரகம் தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிச்சல் மற்றும் புண்ணை ஆற்றும் தன்மையும் கொண்டது. எனவே சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை பருகி வந்தால் அசிடிட்டிக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மேலே கூறப்பட்டுள்ள உணவு பொருட்கள் தவிர்த்து தினசரி உணவுகளில் உணவு சமைக்கும் பொழுது இஞ்சி சேர்த்து சமைத்தால் இரைப்பை சம்பந்தப்பட்ட எந்த கோளாறும் சரியாகும். மேலும், உணவில் புதினா இலைகள், கொத்தமல்லி, ஏலக்காய் மற்றும் லவங்கம் ஆகிய நான்கு பொருட்களையும் சேர்த்து சமைத்து வரலாம். பாலில் ஏலக்காய் மற்றும் லவங்கம் சேர்த்து குடிப்பதும் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Acidity, Health tips

அடுத்த செய்தி